என் வழி தனி வழி
நான் தனிமரம் இல்லை!
எனக்கென்று ஒரு கூட்டம்,
செருக்குற்ற களி ஆட்டம்;
கொண்டாட நண்பர்கள்,
சண்டையிட பகைவர்கள்;
தோள்கொடுக்க உற்றார்கள்,
தொல்லை கொடுக்க சிற்றார்கள்;
தண்டிக்க ஆன்றோர்கள்,
தட்டிக்கேட்க சுற்றார்கள்;
எத்தனையோ சான்றோர்கள்,
பின்பற்ற இளைஞர்கள்;
இத்தனை இருந்தும்,
என் வாழ்க்கையெனும் பயணத்தில்.....
நான் ஒரு தனிப்போக்கன்,
யாரும் செதுக்காத பாதையிலே வழிப்போக்கன்;
வழித்துணை ஏதுமில்லை,
வழி நடத்த யாருமில்லை;
இருளில் துழாவுகின்றேன்,
அலைகடலில் நழுவுகின்றேன்;
செல்கின்ற பாதை சரிதானோ தெரியவில்லை!
சேருகின்ற ஓடை அதுதானோ புரியவில்லை!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top