என்னைக் கவர்ந்த கள்வன்!
பணியிலிருந்து திரும்புகையில்,
பேருந்தில் அமர்ந்திருந்தேன்;
பணிக்கும் இரு விழிகளுடன், குறுகுறு வென்றெனை நோக்கினான்;
என் உள்ளமெல்லாம் நெகிழ்ந்திடவே,
கள்ளச் சிரிப்பொன்றை மெல்ல உமிழ்ந்தான்;
ஒரு நொடியில் எனை மறந்தேன்,
இளம் நங்கையின் தாய் என்பதனையும் நான் மறந்தேன்;
என் உள்ளச் சுமை தாளாமல்,
பொதுவென்றும் பாராமல்,
கட்டித் தழுவினேன் அவனை,
ஆர்வமுடன் எனை அணைத்து முத்தமிட்டான் அவனும்;
அம்மம்மா என்ன சுகம்,
அன்று தான் விளங்கியது,
அம்மம்மா என்றெனை அழைக்க,
பாட்டியாக நான் உருவெடுக்க,
ஆசை வந்தது என் உள் என்று,
அப்பிஞ்சுக் கள்வனைக் கண்டதுமே!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top