இயற்கை
வானில்தான் எத்தனை அழகிய வண்ணங்கள்,
இப்படித்தான் இருக்குமோ கடவுளின் எண்ணங்கள்!
எதையோ தேடி அலையும் மேகமூட்டம்,
அவைகாட்டும் வழியில் மிதக்கும் பறவைக் கூட்டம்!
சில்லென்று சிலிர்க்க வைக்கும் தென்றல் காற்று,
அதில் மெய்மறந்து தலையை ஆட்டும் தென்னங்கீற்று!
இயற்கை அன்னையின் ஒப்பிலா தாய்மை,
பாலின் வெண்மைபோல் மாசிலா தூய்மை;
அவள் அன்பில் இல்லை என்றும் பாரபட்சம்,
அவளே மழையாய் நம்மை வாழவைக்கும் கற்பகவிருட்சம்!
அம்மா,
சுனாமி, பூகம்பம், வறட்சி உன் தண்டனைகள்,
உன்னை மாசுபடுத்தும் உன் பிள்ளைகளுக்கு படிப்பினைகள்;
போதுமம்மா உன் கோபம்,
இனி தாங்க மாட்டோம் உந்தன் சாபம்;
உன் அருமை தெரிந்து கொண்டோம் எங்களை மன்னித்துவிடு;
நல் வாழ்வு முறை புரிந்து கொண்டோம் எங்களை வாழ்த்திவிடு!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top