(: அவனும் நானும் :)


மதியம் ஒன்றரையில்,
தனித்திருந்தேன் என் அறையில்;

மஞ்சத்தில் வீழ்ந்திருந்தேன்,
நெஞ்சத்தில் ஆழ்ந்திருந்தேன்;

மெதுவாக உள்ளே நுழைந்தான்,
சாதுவாக மெல்ல அணைத்தான்;

கண் இரண்டில் முத்தமிட்டான்,
ஐயமின்றி கட்டவிழ்த்தான்;

போராட நேரமில்லை,
வாயாட நா எழவில்லை;

களைப்பில் கண் அயர்ந்தேன்,
வந்தது யாருமில்லை ........
   :
   :
   :
   :
   :
   :
   :
   :
   :
   :
   :
என் நித்திரைத்தேவன்!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top