அறிவியல்

அணுவிற்குள் ஆற்றல்தனைக் கண்டறிந்த,
அறிவியலின் ஆற்றலைத்தான் என்ன சொல்ல! என்ன சொல்ல!

தவழ்ந்து வரும் தென்றல்தனை காற்றாலை கொண்டு,
தடுத்தங்கே மின்சாரமாய் மாற்றும் ஆலையும் உண்டு;

தாயின் கருப்பையில் இருக்கும் "ஸ்டெம் செல்" கொண்டு,
சேயின் நலத்தினையே காக்கும் மார்க்கங்கள் உண்டு;

செவ்வாய்க்கு சென்று வரும் தூரம் என்ன தூரம்,
இனி சூரிய குடும்பத்தினையே தாண்ட வந்தது நல்ல நேரம்;

எனினும்,

மானுடத்தின் ஆற்றலாம் அன்புதனை மறப்பதாயின்,
அறிவியலின் ஆற்றல்கொண்டு மானிடர்தாம் சிறப்பதெங்கன்?!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top