அன்பே! என்னைக் கண்டுபிடி!!
அன்பே,
உன் இருளுக்கு ஒளியானேன்,
உன் வியர்வைக்கு காற்றானேன்,
உன் குளிருக்கு இதமானேன்;
நீ இன்றி நான் இல்லை,
நான் இன்றி உன் வாழ்க்கை தொல்லை;
என்னிடம் மயங்கிவிட்டாய்,
ஆனால், அருகில் வர தயங்குகின்றாய்;
என்னை ஓரு முறையேனும் நீ தொடவில்லை,
உன்னை அணைக்கும் என் அவா விடவில்லை;
உன் விரல் பட்டால் நான் விடமாட்டேன்,
சுவர்கத்தின் வாயிலில் கூட்டிச் செல்லாமல் விடமாட்டேன்;
நான் சென்றுவிட்டால் நிந்திப்பாய் கண்டபடி,
என்னை இன்றேனும் கண்டிப்பாய் கண்டுபிடி!
**************************
HelloYouths!
என்ன யோசிக்கிறீங்க.....
இது காதலி காதலனுக்காக உருகி எழுதிய மடல்?
...
....
....
....
....
கண்டிப்பாக இல்லை!
ha... ha...
இது முழுக்க முழுக்க ஒரு அறிவியல் விடுகதை!
எங்கே, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top