அன்னை

மாநிலத்தில் பெண்ணாய் பிறத்தல் பெரும் பேறு,
அவளே அன்னையானால் இணையில்லை அவளுக்கு வேறு;

உலகை இயங்க வைக்கும் ஒப்பிலா தாய்மை,
பாலின் வெண்மை போல் மாசிலா தூய்மை;

நான்காறு மாதம் சுமந்து என்னை,
பாலூட்டி தாலாட்டி வளர்த்தாள் அன்னை;

பூவாய் நான் செழிக்க வேராய் அவள் தியாகம்,
நோயாய் வரும் பகையை, எரிக்கும் அவளே தீ ஆகும்;

உணர்ந்த நேரத்தில் அவளின் புனிதம்,
என்னுள் மலர்ந்து விரிந்ததம்மா மனிதம்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top