போட்டி 9 # 9 காதல் மோகம்

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

சில்லென்று சிரித்தவனே
செல்ல சண்டை போட்டவனே!

முத்தம் ஒன்று, முகத்தில் தந்து
முத்து சொல்லை உதிர்த்தவனே!

தன்னடக்க மேனி கொண்டு
என் மனதை வென்றவனே!

மூன்றெழுத்தை சொல்லி சொல்லி
முத்த மழை பொழிந்தவனே!

பூனம் கட்டி, நான் நடக்க
பூனைக்குட்டியாய் மாறுபவனே!

காஞ்சி பட்டு கட்டி வர
கதை கூற துடிப்பவனே!

கோபம் கொண்ட, என்னை கண்டு
நீழி கண்ணீர் வடிப்பவனே!

உச்சுக்கொட்டி உன்னை பார்த்து
உறைந்து போகும் நெஞ்சம் உண்டு!

பஞ்சம் பிழைக்க வந்த என்னை
கொன்று தின்னாய் விழிகள்
கொண்டு

தாலி கட்டி தனலை சுற்றி
வாழ்க்கை வாழ வருவாயா

தூளி ஒன்று தூக்கி கட்ட
புது உறவை தருவாயா

கடிகார முள் பார்த்து
உனக்காக காத்திருக்க

திருமண தேதி மட்டும்
தொலைதூரம் செல்வதேனோ!

காத்திருக்கிறேன் காதலனே
மனைவியாகும் ஒரு கணத்துக்காக
நாணத்துடன் காத்திருக்கிறேன்

கொள்ளை கொண்ட என் மனதை
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்

வெளிச்சம் நின்று, வருவாய் என்று
வழியை பார்த்து காத்திருக்கிறேன்..

திருமணத்திற்குப் பின்:

ஸ்டிக்கர் பொட்டு வட்டமாக
வாழ்க்கை என்ன கசக்குதா!

தேவதை நடந்து தெருவில் போக
நான் நிற்பது என்ன மறக்குதா!

சிரித்து பேச அருகில் வந்தால்
விலகி செல்வது நியாயமா!

பூரி கட்டை தலையை தாக்க
என் மீது என்ன கோபமா!

அழகென்ற சொல்லுக்கு அர்த்தம்,
நானென்று நானத்துடன் நீ சொல்ல!

நாள் சுவற்றுக்குள் நல்லதொரு இரவை தேடி
கணவன் – மனைவி எனும் உறவை கொண்டு

முத்த மழையில் நன்றாக நனைந்தோமே!

இன்று அழகிய திருமகள் நான், அருகில் இருக்க

புது அழகியை கண்டு ஆசை உனக்கு பிறக்க

வழிந்துக்கொண்டு அவள் விழியை நீ காண
போனால் போகுது என்று நான் போக, நீயோ!

அவள் செல்லும் இடமெல்லாம் சென்று
கண்களில் தென்பட முயல்கிறாயே

ஜொல்லு விட்டு இதழ்களில் உனக்கு நீர் சுரக்க
பல்லுக்கொட்டும் என்பதை ஒரு நாளும் மறவாதே

தேனியாய் உன்னை சுற்றி தெம்மாங்கு நான் பாட
சலிப்பை பரிசளித்து இனிப்பை தவிர்க்கிறாயா!

என்னை விட்டு வேறு பெண்ணை பார்த்தால்
கொட்டக்கூட செய்வேன்! மறந்துவிடாதே!

__________________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

நானென்பதன் பொருளை எங்குதேடிப்பிடிக்க

என்றலைந்தி ருந்த வேளை:

எந்தையின் செயல்களின் நகலாய்; எம்மைதந்த அன்பின் காதலாய்;
பகுத்தறிந்து எனக்கே உணர்த்திக் கொள்ளும் பக்குவமாய்;

நான்.

அன்பு செய்ய,
ஊடல் கொள்ள,
அவள் வந்தாள்;
என்னவள் ஆனாள்;
என் தேடலின் பொருள் புரிந்தது!

திருமணத்திற்குப் பின்:

கழுத்தில் தாலி இல்லை;
என் நகலின் அன்னையாக என்னவள்:
என் பெரியாரை ஏற்றுக் கொண்டதற் கெப்படி நன்றி யுரைப்பேன்?

பாரதிகண்ட புதுமைப் பெண்ணாய்
நான்கண்ட எம்மை யின் நகலவள்;

லிங்கேஸ்வரனாய் சிவகாமியாய்; நானும் அவளும்!

அர்த்தனாரியானோம்




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top