போட்டி 9 # 8 காதல் வரமா?? சாபமா??

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன் காதல்...

என் மனதை வென்றவன்..💕💕

என்னைச் சுற்றி பலர் இருப்பினும் என் மனம் உன் வரவை எதிர்பார்க்கிறது...

கனவுகள் பல சுவைக் கொண்டாலும்... எந்தன் கனவுகள் உன்னால் வர்ணமயமாக்கப்படுகிறது..

வானவில் ஜாலங்களாய் என் மனதை உரசிச் சென்றது உந்தன் காதல்..

என்னென்று நான் உணரும் முன்னே மனதில் நுழைந்து என் மனதை வென்றது...

இதுதான் காதலென்று நான் தெளியும் முன்னே... அவனின் நினைவுகளை எந்தன் இதயக்கூட்டில் பதித்துச் சென்றது..

சகலமும் மறந்து அவன் மீது பித்தாய் அலையும் பெண்ணவளும் நான் தானோ...

என் கரம் பற்றி வாழ்நாள் முழுதும் என்னோடு வளம் வரும் மன்னவனும் நீ தானோ...

திருமணத்திற்குப் பின் காதல்...

என் மனதைக் கொன்றவன்..💕💕

காதல் கவிதையாய் தொடங்கியதுதான் இந்த வாழ்வு...
மனதை மயக்கியவன்தான் வாழ்வின் துணைவன்...

இருந்தும் என் வாழ்வில் ஏனோ தனிமையின் சாரல்...

சிட்டுக் குருவியாய் பறந்து திரிந்த நான் இன்று அடைப்பட்ட கூட்டு கிளியாய்..

இருளில் கழியும் பகலுக்கு என் கண்ணீர் துளிகள் மட்டும் துணையாய்...

உன்னைத் துரத்தி துரத்தி காதல் செய்ததுதான் எந்தன் பிழையா..??

மனதை கவர்ந்தவன் உனக்கே மனைவியாய் நான் அமைந்ததுதான் விதியின் சதியா??

அன்று தித்திக்கும் தேனாய் இருந்த நம் காதல் ..
இன்று வேப்பங்காயாய் கசந்து போன மாயம்தான் என்னவோ அன்பே...

__________________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

இமைகள்:

திருமணத்திற்கு முன் காதல்:

என் மனதை திருடியவல்!❤️

உன்னை சுற்றி பலர் இருப்பினும் உன் கண்கள் என்னை தேடவே எதிர்பார்த்தேன்!

வர்ண மாயைகள் உன் கனவுகள், உன் கைபிடித்து நம் கனவுகளுக்கு வர்ண உயிர்ஊட்டுவதே என் கனவுகள்! 

மேகமாய் பறந்து திரிந்த உன் மனதை, வானவிலாய் வந்து எட்டி பிடித்தது என் காதல்!

வென்றது உன் இதயத்தை மட்டும் அல்ல உன் உணர்வுகளையும் தான்!

ஆம் யாரும் அறியா வண்ணம் உன் கண்கள் என்னை தேட, 

உன் தேடலை கவனித்துக்கொண்டு இருக்கும் என் கண்களை உன் கண்களை உரச, 

நீ வெக்கத்தில் மெய் சிலிர்த்தது, காலில் கோலம் போட அந்த உணர்வையே நீ உணர தவறியது! 

நினைவுகளாக வாழ எனக்கு விருப்பம் இல்லை, உன் இதைய கூட்டில் என்னை சிறை பிடி!

உன் கண்களை முதல் முறை கண்ட போது பித்து பிடித்தது, என் கண்கள் மூடும் வரை தெளியாது! 

உன் கரம் பற்ற என் வாழ்வையும் உன் கால் அடியில் சமர்பிக்கிறேன், பூவாய் மலர்ந்து உன்னை தாங்குவேன் கண்ணம்மா! 

வானவில்லாய் வந்த உன்னை ,தொட மேகமாய் மாறினேன்!

நீ மழையாய் மாறி மண்ணில் விழுந்தாய், நான் பூமியாய் மாறி உன்னை தாங்கினேன்!

நீ என்னுள் இருந்து பூவாக மலர்ந்தாய், நான் வாடையாய் வந்து உன்னை ஸ்பரிசித்தேன்!

நீ மலரை விரும்பும் பெண்ணாய் மாறினாய், நான் உன் மனதை திருடிய ஆணாக மாறி உன்னை மனந்தேன்!!!

திருமணத்திற்குப் பின் காதல்:

அந்த வலியை சும்ப்பவன்❤️இன்பமாய்

உன் தனிமையின் சாரல் குறையும் போதுதான், மன்னின் வாசத்தை நீ உணர்வாய்!

உன் மூச்சாய் கலந்தவன் நான், நீ தனிமையை உணர்வது ஆச்சர்ரியமே! 

சிட்டு குறுவியாய் நீ பறந்து சென்றாள், கழுகுகள் உன்னை கொன்றுவிடுமோ என பயந்தே, 

கிளியாய் என் மனதில் உன்னை சிறைபிடித்தேன், இதல் என் தவறு என்னவோ? 

உன் கண் நீர்க்கு நான் காரணம் என்று கூறியபோதே, அந்த வார்த்தை மனதில் அம்பாய் பாய்கிறது! 

மயில் இறகே என் கண் இமைகளில் உன்னை சுமக்கிறேன்!

உன்னை அள்ளி என் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள எனக்கு மட்டும் ஆசை இல்லையா? 

அள்ளும் கரங்கள் வலிமை பெறவே ஓடுகிறேன்! 

காதல் பிழையா? மனம் விரும்பும் மாயையே பிழையா? 

உன் மனதை வென்றவன், விதியையும் வெல்ல துடிப்பை நீ உணர தவரியதே காலத்தின் சதியா? 

தேனை காட்டிலும், வேப்பம் பூவிற்கே சக்தி அதிகம்!

பூ பாதையை மட்டும் விரும்பும் உன் கண்களுக்கு, பூவிற்காக பூக்களை கொண்டுவர நான் முள் பாதையை கடக்கிறேன் என்று நீ உணர மறந்தாய்!

"இரு கறைகள் பிறிந்து நின்றாலே அருவிகள் உண்டாகும் 

இணைந்தாள் அது பாலைவனமாக மாறிவிடும்

நாம் பிறிந்து நிற்க்கும் அருவிகளின் கறைகளாகவே இருப்போம். 

தனித்து நின்றாலும் இந்த அருவியால் என்றும் இனைந்தே வாழ்வோம்!

தள்ளி போகாதே❤️ காதலே 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top