போட்டி 9 # 10 காதல் கானல் நீர்
குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):
திருமணத்திற்கு முன்:
கணமும் காதல் என் இருவிழி சேர்கையில்
மனம்,மனம் அதிலே திளைத்திடுவதேனோ?
இரண்டெனக் கலக்கும் இருதயக் காதல்
மலர்ந்திடும் முன்பே சொக்கித்தவல்வதும் ஏனோ?
ஜென்ம ஜென்மமாய் அவன் விரல் பிடித்திட
இனி,இனி கசந்திடுமோ?
இருள்,இருள் மறித்திடும் வெளிச்சம்
இனி அவன் விரல் பிடித்திடுமோ?
உறவின் உயிரென...
துடி,துடித்திடும் இருதயத் தடம்
இனி அவன் இமைகளில் துடித்திடுமோ?
இஜ்ஜெனனம் ஜெனித்த நேரம்
அவன் வரமும் பலித்திடுமோ?
நாணித்திரியும் தேகம் -அவன்
உயிருடன் பினைந்திடுமோ?
விழியினில் விழுந்திடும் தூசி தனில்
உன் முத்தம் கலந்திடுமோ?
அதனால்தான் கண்கள் அதில்
கண்ணீர் வழிந்திடுமோ?
சிறு இன்பம் கிடைத்திடவே
உன் வரவை நான் அறிந்தேன்..!
சிறு துக்கம் பெற்றிடவே
உன் பதிலை நான் அறியேன்..!
எழும் காதல் வென்றிடவே
விழும் கண்ணீர் துடைத்திடுவேன்...!
திருமணத்திற்குப் பின்:
உன்னில் நானும்...என்னில் நீயும்
இணைந்திருக்கத் தேவை இல்லை
நானும் உன்னை மணந்திருக்கத் தேவை இல்லை
திருமணம் வரை உன்னுடன் இருந்த என் மீதான காதல்
திருமணதிற்கு பிறகு சிறிது சிறிதாய் களைந்து போனது
உன்னோடு வாதம் செய்தே என் நாட்கள் போனது..!
என் இரவுகளும் நீண்டது -சண்டை
போடும் நாட்களில் உனது சுருக்கென்ற வார்த்தைகளில்
அனுதினமும் மரணம் தழுவிச் செல்கிறேன்..!
அவன் சுமையோடு என் சுமையையும்
வழியின்றி சுமந்தவன் -இன்று
சுமையோடு,சுமையாக என்னையும் தூக்கி எறிகிறான்..!
தியாகம் என்ற வலையில் நான் விழுந்து -உன்னிடமிருந்து
சாபம் என்ற ஒன்றை பெற்றுக் கொண்டேன்..!
கூடி இருந்தும்,குடியே உலகமென்பாய்-நான்
வாடி இருந்தும் வலியை மட்டுமே தருகிறாய்
சொன்ன சோகம் கொஞ்சமே
இந்த பாரம் போதுமே..!!!
____________________________________________________________
குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):
திருமணத்திற்கு முன்:
மனம் எனும் காட்டில் மலர் வாசமாய் வந்தவளே!
தினம் தினமும், என் திங்களும் திளைத்திட என் வசம் வாசம் செய்தவள் நீயோ!
தவறுகள் உன் அருகில் தடயம் இல்லாமல் போனது நம் காதலின் கருணையால் ...
உன் கைக் கோர்த்து நான் செல்லும் பாதை எல்லாம் இன்பத்தில் முடிகிறதே.....
இந்த பந்தம் ஏழு ஜென்மம் எடுத்தாலும் தொடருமே....
காதலியின் கடைக்கண் பார்வை பட என் நெஞ்சம் எங்குகிறதே...
திருமண நாள் எண்ணி என் நினைவுகள் கரைகிறதே...
என் வசம் வா என் கண்மணியே
திகட்டும் இன்பமும், தீராத காதலும் நம் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்க காதலை காதல் செய்வோம்...
திருமணத்திற்குப் பின்:
அன்று என் காதலி இன்று என் மனையாள்,
தினமும் என் மனைவியின் அரவணைப்பில் அன்பைக் கண்டேன்,
சண்டையில் நீயும் நானும் சமம்
சமரசகள் பேச நேரங்கள் ஒரு தடையானது ஏனோ?
நினைவில் நின்ற காதல்
கானல் நீர் போல கரைந்தது ஏனோ?
வார்த்தையைக் கடும் சொற்களால் நிறைத்தது ஏனோ?
கணவன் மனைவி உறவில் குறைகள் மட்டும் தெரிவது ஏனோ?
காதலில் நிறைந்த அன்பு கல்யாணத்தில் மறைந்து ஏனோ?
ஏனோ ஏனோ பல கேள்விகள் ...
மாறாத ஒன்று என் பாதி நீ...
நிறையும் குறையும் கலந்தது தான் நாம் வாழ்க்கை..
வா வாழலாம் ஆயிரம் சண்டைகளுக்கு இடையே
அதிலும் அன்பு பெருகும் என்று வா வாழலாம் காதலை மறக்காமல் காதல் பார்வை பார்த்து பரவசம் அடைய...
காதலி,மனைவி,நம் பிள்ளையின் தாய் என பல பரிணாமம் அடையலாம் வா....தினம் தினம் காதலர் தினம் கொண்டாட...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top