போட்டி #8 - 2. போர் கடல்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னே

யாதும் ஊரே யாவரும் கேளிர்

_____________________________________________________________________________

    “ஏய் என்னாடி இதுக, ன்னா தெர்யும் இதுகள்கு கட்லபத்தி”

______________________________________________________________________________

இசை , பாரதி காணாத புதுமை பெண், சமச்சீர் முகம் , சக மனிதனை நேசிப்பவள் , இன்று கடலோரம் பிணமாக...

நேற்று அதிகாலை ,

விண்மீனும் விடை பெற்றது ,

நிலவு துயில் கொள்ள வீடு கிளம்பியது

கதிரவன் கடல் காண வந்ததது

கரை கண்ட கூட்டம் கலங்கரை விலக்கம் தேடியது

அந்த கூட்டத்தில் இசையும் ஒருத்தி , இன்னும் பத்து நாளில் திருமணம், அப்பாவை எதிர்த்து , தன் காதலை நிலை நிறுத்தியவள் , சாதி மறுப்பு திருமணம் ,போராட்டம் அவளுக்கு புதிதல்ல ,  இம்முறை சற்று வித்தியாசமாக.

அவனுக்கும் தான் , இங்கு இவளுக்காக அவன்.


நெடியதோர் போராட்டம் , உளமும் உடலும் களைத்திருந்தது.

நடிகர்கள் போரட்டகாரர்களுடன், பாவம் இம்முறை லைவ் டெலிகாஸ்ட் முன்னே, அரிதாரம் பூச நேரம் இல்லாமல். முன்பொழுது வரை நன்றாக தான் பேசினர், சுனாமிக்கு முன் விலங்குகள் இடம் பெயருமாம், உண்மை தான் , மைக் பிடித்த விலங்குகள் கூடு சென்று இருந்ததன.போரட்டத்தின் பயனாளர்கள் தேவையை புசிக்க தயாராகி போராட்டம் கைவிட்டனர்.

ஏதோ ஒரு வழயில் , புரட்சி போரட்டத்தின் பயன்களை இவர்கள் யாவரும் அனுபவித்தே இருந்தனர்.

ஏதும் அறிய ஒரு அப்பாவி கூட்டம் , இதற்கும் அந்த போராட்டம் மானுடனுக்காக கூட இல்லை.

கண் விழித்த நேரம்

விடியல் காக்கியாய் இருந்தது

என்ன நடக்கிறது என்று அறியும் முன் , விரட்டப்பட்டார்கள், போக வழியில்லை , முன் சென்ற கூட்டத்தின்பின் ஓடினார்கள்.

எங்கும் போர்க்களம், கை கொள்ள போகும் காதலனின் கைகளை கைகொண்டு இசை,

        “இந்தாண்ட பூந்து லெப்ட்ல போ” - மீனவ குரல்

“இதோ வரோம், இசை கைய பிடிச்சுக்கோ”

“எனக்கு பயமா இருக்கு”

“பயப்படாத”

“கொஞ்சம் தான் வெளிய போய்டலாம்”

ஓட்டம் தொடர்கிறது ,

        “புள்ளிங்கள பாலோ பண்ணு, நம்ம பசங்க வெளில இட்னு போய் விட்ருவான்”

கூட்டம் சிதரி ஓடியது,

மீனவ குரல்கள் ஓங்கி ஒலித்தன

"ஏய்... போலீஸ் தொர்த்துனா ஓடாத.. நில்லு"...

“அழாத.. மெர்சலாகாத.. ஒன்னியும் ப்ராப்லம் இல்ல..”

“இந்தாண்ட வாப்பா..”

“அந்தாண்ட போப்பா..”

காப்பாற்ற வந்த

கிராமமும் காக்கி ஆனது ,

எங்கும் வெடி சத்தம்

கூக்குரல்கள்

கண்ணீர் புகை

ஓலமிட்டபடி அலறல்கள்

கவலை தோய்ந்த முகங்கள்

காப்பாற்ற பரபக்கும் மக்கள்

வேறுகதியில்லை

ஓடவும் வழியில்லை

கிடைத்த வீடுகளில் அடைகலமாகினர்

ஒரு வழியாய், அடிக்கலாம் கிடைத்தது,

“ன்ன பா எத்தினி நேர்மா ஓடினு கீங்க “

காலைல இருந்து, ஏன்னு புரயல

“ எதுனா அடி பட்னுகீத ‘

லேசா

“ இப்டி இருங்க மெர்சல் ஆவத , வெல்ல பாத்துனு வரேன்”

( அவர் வெளியே சென்றார் )

அவன் அவளை நோக்கி

“இசை , போராட்டம்ன இப்டி தான் இருக்கும்”

“போராட்டம் தப்பில்லையே”

“கண்டிப்பா தப்பு தான் இங்க,

கீழ் சாதி காரன் மேல் சாதி காரன் கிட்ட போராடுன தப்பு

தொழிலாளி முதலாளி கிட்ட போராடுன தப்பு

மக்கள் அரசங்கம் கிட்ட போராடுன தப்பு

கீழ இருந்து மேல வர எல்லாமே தப்பு தான் இசை”

“என்ன நடக்குதுன்னே தெரியலையே”

“தெரிஞ்ச இப்டி ஓட வேணமே “

கலவரம் பெரிதானது

கார்முகில் கலைந்தது

அக்னி வெள்ளம் பாய்ந்தது

பாய்ந்த வாங்கனங்கள் சுடர்ந்தது

எங்கும் சைரன்

எம் பெண்டிர் தாக்க பட்டனர்

நகரம் நிலைகுலைந்தது

நிறம் கலைந்தது

கலை இழந்தது

நேரம் கடந்தது

இங்கு,

“இசை உன்ன எனக்கு பிடிக்கும்”

“தெரியும், எனக்காக தானே நீயும் இங்க”

“உனக்கு ?”

“அதனால தான் நான் உன்கூட”

“நம்ம கல்யாணம் ...”.

“கண்டிப்பா அப்பா வர மாட்டாரு “

“மன்னிச்சிரு”

“அவர் ஒரு நாள் எனக்காக வருவாரு”

“அவ்ளோ பிடிக்குமா என்ன ?”

“பின்ன எங்க அப்பாவாச்சே”

“அப்போ என்ன ?’

( பெரிய வெடி சத்தம் )

இவர்கள் இருந்த வீடும் பற்றியது

தெருவெங்கும் பாஸ்பரஸ்

மறுபடியும் ஓலங்கள்

தீயின் பிடியிலிருந்து தப்பித்து

ஓட்டமும் நடையுமாக இவர்கள்

கடல் அமைதி கொண்டது

கரை நுரைத்தது

கற்கள் கொண்டு தாக்கப்பட்டனர்

தடிகள் வெறியாட்டம் ஆடியது

இவர்களும் அடி பட்டனர்

கால்கள் ஓய்ந்தன

கவலை குடி கொண்டது

பத்து நாளில புதிய வாழ்கை

போராடி பெறபோவது

போராட்டத்தில் போய்விட கூடாது

“டேய்  போய்டலாம் டா”

“நீ நிறைய அடி பட்டு இருக்க இசை”

“’போலாம் , எனக்கு உன் கூட வாழனும்”

“எதாச்சும் ஆயிடும்னு பயமா இருக்கா ?

“பயமாத்தான் இருந்திருக்கும், நீ இல்லேன்னா”

( புன் முறுவலுடன் கண் அசைகிறாள் )

மீண்டும் ஒரு மீனவ நண்பன் துணையுடன்

போராட்ட களம் விட்டு போராடி வெளியே வந்தனர்

காய்ந்த உதடுகள்

தோய்ந்த முகங்கள்

ஓய்ந்த கால்கள்

முழுவதுமாய் தகர்க்கப்பட்டு இருந்தனர்.

கதிரவன் கண் அசர்கிறான்

வீடு சென்ற நிலவு வீதி வந்தது

விண்மீன் கம்பளம் விரித்தது

இசை அவனிடம் சொன்னால்

     “நான் உன்னுடன் என்றென்றும்”

அவன்

    “உனக்கவே நான்”

வீதி வந்தவர்கள்

வீடு சென்றார்கள் ( அவரவர் வீடுகளுக்கு )

நேரம் நடுனிசை – இசை வீடு

“அந்த போரட்டதுலையே சாக வேண்டியது தானே”

“ சாகலாம்னு தான் ஆனா அவன் கூட, இன்னும் நாள் இருக்கு “

“என் என் மானம் போச்சு , பொலங்காத சாதி பையனோட என் பொண்ணுக்கு கல்யாணம்னு எப்படி சொல்லுவேன்”

“ என்ன சொல்லவரிங்க”

“நீ அவன கல்யாணம் பண்ண கூடாது ‘

“அவன தான் கல்யாணம் பன்னுவேன், நீங்க காமிக்கற ஆள கல்யாணம் பண்ண முடியாது , முடிஞ்சா கல்யாணத்துக்கு வாங்க , இல்ல தடுக்கதிங்க “

“இதுக்கு தான் படிக்கவட்சன”

“நல்லவேள படிக்க வட்சிங்க “

“குடும்ப கௌரவம் என்ன ஆகுறது “

“ஒன்னும் ஆகாது “

“இசை”

“அப்பா”   

இன்று

    அதே விண்மீன் வீதியின் கீழ்

இசை கரை ஒதுங்கினால் பிணமாக

நேற்று காதலராய் கண்ட கடலும் கலங்கரையும்

வழியன்றி முகம் நோக்கி நின்றது

இங்கு மாடு மட்டுமல்ல , மீண்டும் ஒரு முறை சாதியமும் வென்றது

இசை , இங்கு இசையாமல்

அங்கு ஒரு பெண்மணி சொன்னது

“ஏய் என்னாடி இதுக, ன்னா தெர்யும் இதுகள்கு கட்லபத்தி”

அவன் ?

( தொடரும் )

சாதி கடல் /// போர் கடலாக










   





Bạn đang đọc truyện trên: AzTruyen.Top