போட்டி 8 # 1 - "தவறான தலைமை"
பார்க்கும் இடம் எல்லாம் இரத்தம் சடலமும் சிதறி கிடக்க கூச்சலும் கதறலும்
காதில் ஒலித்து கொன்டே இருந்தது. போர் தோழ்வியை நோக்கி நகர்ந்து கொண்டு
இருக்க என் முன் நின்றவனிடம் இருந்து என் உயிரை காப்பாத்திக்கொண்டு
இருதேன் அந்த நொடியில் என் முதுகில் கூறுமையான வாள் இறங்கியது என் முன்
நின்றவன் காலால் மிதித்து கீழ விழுதேன். கடைசி முறையாக என் அப்பா அம்மா
மனைவி பிள்ளைகளை பார்க்க வேண்டிய ஆசை நிறைவேறாமல் கண்ணை மூடினேன்..
என் உடல் இரத்த வெள்ளத்தில் மிதந்தது கொண்டு இருந்தது.. வீரர்கள்
அவர்களின் கடைசி மூச்சி வரை போராடி கொண்டு இருந்தார்கள்.
ராஜ குடும்பத்தில் பிறந்த ஒரே தகுதியை வைத்து கொண்டு ராஜா ஆகினார்
.எங்கள் ராஜா ஆதித்தன்
அவரின் கொடுமையை எடுத்துக்காட்ட அவரின் எழுவதைத்து சகோதர்களை அவரே
கொன்று போட்டி இல்லாமல் ஆட்சிக்கு வந்ததை சொல்லலாம்...
சுய நலத்திற்காகவும் பெயர் புகழுக்காகவும் நாட்டை தவறாக வழி நடத்தி
வீரரின் உயிரை பொருட்படுத்தாமல் இருந்தார்.
வெற்றியின் மோகம் தலைக்கு ஏற நாட்டின் தென் திசையை ஆளும் ராஜா மித்திரன்
நாட்டை கைப்பற்றும் ஆசை அதிகம் ஆனாது ... ராஜா மித்திரன் எவராலும்
ஜெய்க்க முடியாத பலம் கொண்டவர் ஆனாலும் போரில் உயிர் பிரியும் வீரர்களை
கண்டு மனம் உடைந்து வேறு நாடு மீது போர் தொடுப்பதை நிறுத்தினர்.
போர் தொடுக்காததால் அவரின் வீரம் குறைந்து இருக்கும் எளிதாக ஜெயித்து
விடலாம் என்ற எண்ணத்தோடு கலம் இறங்கிய மன்னரின் நிலைமை இது தான் அவர்
உயிரும் இன்னும் சில நொடிகளில் அவரை விட்டு பிரிய போகிறது...
நான் என் பிள்ளைக்கு திரும்பி வருவேன் என்று செய்த சத்தியத்தை
மீறிவிட்டேன் என்னை மன்னிக்கமாட்டான் அவன் !!!!!
"அஹிம்சை உண்மை என்னும் இரண்டு ஆயுதங்களை வைத்து போர் நடந்தால்
பீரங்கிகளும் தோட்டாக்களும் தோற்று பொய் தலை வணக்கும்......."
****************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top