போட்டி 7 # 7 - சீறி கொண்டு ஓடு!


சீறி கொண்டு வரும் அவனை அடக்கும் வாலிபன் வீரன்!

சீறி கொண்டு இருக்கும் அவனை அழிக்க நினைப்பவன் மூடன்!

சீராட்டி பாசத்தை ஊட்டி அவனை வளர்த்து,

அவன் வீரத்தையும் பிறர் வீரத்தையும் வளர்பவன் தமிழன்!

அவன் வீரத்தையும் தமிழர் வீரத்தையும் அவன் இனத்தையும் அழிக்க நினைப்பவன் அரக்கன்!

தை பிறந்தால் வழி பிறக்கும் , அவன் சீறி வந்தாளோ வீரம் பிறக்கும்!

கட்டு கட்டு ஜல்லிக்கட்டு தவறு என்பவர்களின் வாயைக் கட்டு!

முட்டு முட்டு ஜல்லிக்கட்டை அழிக்க என்னுபவர்களின் மூளையை முட்டு!

வெட்டு வெட்டு ஜல்லிக்கட்டை அடியோடு அழிக்க நினைப்பவர்கள் எண்ணத்தை வெட்டு!

ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு மட்டும் அல்ல!

தமிழரின் உணர்வும், அடையாளமும் அல்லவா?

தமிழா விழித்திடு, உன்னுடைய அடையாளமான ஜல்லிக்கட்டைக் காக்க

அவனைப் போல் சீறி கொண்டு ஓடு!

***********

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top