போட்டி 7 # 6 - காக்கும் கடவுளே! அம்மையப்பனின் காவலனே!


அன்பாலே அரவணைத்து வளர்த்தோமே,

காக்கும் கடவுளாய் வணங்கினோமே,

எனது குடும்பமாய் வந்தாயே நீயே!

கொம்பன் உனக்கென வகுத்த ஆடுகளத்திற்கே,

அலங்கரித்து கும்பிட்டு அனுப்பி வைத்தோமே,

உன் வலிமை பலர் அறியவே!

மறவர் பலர் உனை விரட்டவே,

ஒற்றை சிங்கமாய் சீறிப் பாய்ந்தாயே,

அடங்கா ஏறாய் திமிர் கொண்டு நின்றாயே!

ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்த மரபையே,

கூட்டம் கூட்டமாய் நின்று ரசித்தார்களே,

அடக்கும் வீரனுக்கே தன் பெண்ணை மணமுடிக்கவே!

ஆட்டமும் போராட்டமும் நீ ஆடி மகிழவே,

வீரமும் வலிமையும் உன் இனம் பெருக்கவே,

காங்கேயன் நீயும் எங்கள் நண்பனே!

உனை துன்புறுத்த எம்மனம் இடம் கொடுக்காதே,

உன் இனம் அழிய நாம் விட மாட்டோமே,

காக்கும் கடவுளும், நேசிக்கும் எங்கள் குழந்தையும் நீயே!

தமிழா பொங்கி எழடா!

இனமும் மரபும் காப்பாயாடா!

ஒன்றிணைந்து நாம் வெல்வோமடா!

****

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top