போட்டி 7 # 5 - கொல்லேறு தழுவுதல்
மஞ்சு விரட்டின் முன்னிரவு,
நடந்த குரவை கூத்தில்,
மங்கையர் தன் நாயகனை
தூண்டுவார் கும்மியடித்து
மறுநாள் அவனே எகிறி வந்தான்
வாடி வாசல் வழியே
கருவிழியாள் உணர்த்தினான் இப்பொழுது
வாடி வாசல் வெளியேயென
அலங்கா நல்லூர் ஜாம்பவான்
பட்டியிலிருந்து விடுபட
அடங்கா கால்கள் தரையில் படாமல்
வானில் பறந்தான்
நானே உனக்கு போட்டியாளனென்று
காங்கேயன் ஓட
நான் ஒன்றும் சளைத்தவனல்ல என
வேங்கையன் எட்டி பிடித்தான்
கண்ணிமையோரம் வியர்வை விழிந்து
முகம் சுருங்கி வாட,
கன்னியரிடம் கிட்டும் உயர்வை நினைத்து
சிங்கமாய் சீறி பாய்ந்தான்
ஆயர்கள் பெண்டிருடன் வீற்றிருந்தனர்
தலையில் பூச்சூட
தூயவன் கொம்பைத் திருகி திமில்
பற்றுபவனே மருமகன் என
தீர்க்கமாய் நெஞ்சை நிமிர்த்தி குருதி
வழிய குத்து பட
மூர்க்கனின் கூனல் பிடித்து ஆண்மகன்
சல்லிக்கட்டவிழ்ப்பான்
ஜீவகாருண்ய நிறுவனத்திற்கோ அது
காவு கொண்ட படுகளம்
ஜீவன் முழுக்க வீரம் கொண்டவனுக்கோ
அது மரபுப் போர்க்களம்
பண்பாடு கலையின் அறிவியல் நுணுக்கம்
அறியா பிராணிகள் நலன்புரியே
பாரம்பரிய அடையாளத்தை மிருகவதை என்று
வரலாற்றில் பதிவேற்ற விடாதீர்
தமிழன் மரபின் அருமை அறியட்டும்!
தமிழ்நாட்டின் பெருமை புரியட்டும்!
<>
*******************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top