போட்டி 6 # 8 -ஆற்றல் எது ??????

ஒரு ஊர்ல ஒரு ராஜாவம் !!!!!!

அந்த ராஜக்கு எல்லாமே இருந்துச்சி . பணம், புகழ், அறிவு.. அனாலும்
அவருக்கு சந்தோசம் இல்ல. ஏன்னா அவருக்கு அறிவு இருக்க அளவுக்கு பலம்
இல்ல. அவர் காது பட பல பேர் கிண்டல் பண்றது அவருக்கு ரொம்ப கஷ்டமா
இருந்துச்சி..

ஒரு நாள் அவருக்கு ஊருக்கு வெளிய ஒரு மலை மேல இருக்க முனிவர் பத்தி தெரிய
வந்துச்சி அங்க போனா அவருக்கு தீர்வு கிடைக்கும்னு இத பத்தி யார்
கிட்டையும் சொல்லாமல் இரவோடு இரவாக கோட்டையை விட்டு கிளம்பினார்.

பல நாள் ராஜாவை பழிவாங்க கத்துக்கிட்டு இருந்த அமைச்சர் அவர் தனியாக
செல்வதை ஒளிந்து இருந்து பார்த்து ஒரு திட்டம் திட்டினார்.

ராஜா இருள் நிறைத்த காட்டை கடந்து, பார்த்தாலே மயக்கம் வரும் அளவிற்கு
உயரமாய் இருக்கும் அந்த மலையை அடைத்தார்.. அங்கு இருந்த முனிவர் அவருக்கு
4 மாத்திரையை கொடுத்தார். சிவப்பு நிறத்தில் இரண்டும் நீல நிறத்தில்
இரண்டும்.

"இதை அவசர நேரத்தில் மட்டுமே பயன் படுத்த வேண்டும். ஒரு சிவப்பையும்
நீலத்தையும் ஒன்றாய் சாப்பிடவேண்டும். அதிகமா சாப்பிட்டாலோ இல்லை ஒரே
சமையத்தில் இரண்டு ஒரே நிற மாத்திரையை சாப்பிட்டாலோ சாவின் படுக்கைக்கு
அழைத்து செல்லும்" என்று எச்சரித்தார்.

ராஜா சந்தோசமாக அவருக்கு வரப்போகும் ஆபத்து தெரியாமல் குதிரையில் ஏறி
அவர் ராஜ்யத்துக்கு பயணத்தை தொடர்ந்தார்.

அமைச்சரின் சூழ்ச்சி நடுக்காட்டில் தொடங்கியது.

ராஜாவை அமைச்சர் பாதி வழியில் மடக்கி, தலையில் அடித்து ஒரு இருட்டு
அறையில் அடைத்து விட்டார். அவர் கண் விழித்து பார்க்க அரை முழுவதும்
இருள் சூழ்ந்து இருந்தது. எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டு
இருக்க அவருக்கு முனிவர் குடுத்த மாத்திரை நயபகம் வந்தது. அவரின்
சட்டையில் கையை விட்டு மாத்திரைகளை வெளியே எடுத்தார்.

இருட்டில் மாத்திரையின் நிறம் தெரியவில்லை.. ராஜா குழம்பி போனார்..
ஏதாவது மாத்தி சாப்பிட்டால் செத்துமடிவோம் என்ற பயம் அதிகம் ஆனது.. அதை
போல் இந்த இடத்தில இருந்து தப்பிக்க வேறு வழியும் இல்லை..

சிறிது நேரம் அமைதியாக யோசித்தார்.. ஒரு நல்ல யோசனை வந்தது..... அவர்
அந்த நான்கு மாத்திரைகளையும்  இரண்டு பாதியாக உடைத்து ஒரு பாதியை மட்டும்
சாப்பிட்டார்....... அதாவது அது ஒரு  சிவப்பு  நிறத்துக்கும் ஒரு  நீல
நிறத்துக்கும் சமம்...

பின் அவரின் பலத்தை பயன்படுத்தி அங்கு இருந்து தப்பி சென்றார்...
அரண்மனைக்கு சென்றதும் அமைச்சரை  தூக்கிலிட கட்டளை இட்டார்.

அமைதியாகவும், பொறுமையாகவும் யோசித்தால் எந்த கஷ்டமான நிலையிலும் தீர்வு
கிடைக்கும் !!!!!!!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top