போட்டி 6 # 7 - தாத்தா சொன்ன கதை

சென்னையில்  வசித்து வந்த நிர்மல் நித்திலா தம்மதியினர் தங்கள் இளவரசி 

நிலாவுடன் பொங்கல் விடுமுறையை தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட தங்கள் சொந்த ஊரான தஞ்சை யை நோக்கி புகை வண்டியில் பயணத்தை துவங்கினர்.

"அம்மா நம்ம எப்போமா பாட்டி வீட்டுக்கு போவோம்."நிலா.

"இன்னும் கொஞ்ச நேரம் தான்டா செல்லம் போயிடலாம்."நித்திலா.

"நம்ம மட்டும் ஏன் மா சென்னை ல இருக்கோம்,நம்ம பாட்டி தாத்தா கூட வே இருக்கலாம் ல,இங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?"

"புரியுதுடா,எனக்கும் உங்க பாட்டி தாத்தா கூட இருக்க ஆசை தான்,அத விட்டு இங்க வந்து தனியா கஷ்டப்பட எனக்கும் புடிக்கல கண்ணா.ஆனால் உங்க அப்பாவுக்கு இங்க தானே வேலை இருக்கு,இத விட்டுட்டு அங்க போய் நாம என்ன பண்றது மா?" என்று கவலையுடன் கூறினார் அவளது தாய் 

வேகமாக தன் தந்தை பக்கம் திரும்பிய நிலா," அப்பா நீங்க ஏன் தாத்தா மாதிரி விவசாயம் பண்ணாம ஏன் பா நீங்க மட்டும் வேற வேலை பாக்குறீங்க?"

"தப்பு தான் டா எனக்கு அப்ப அதோட அருமை தெரியல எங்க அப்பா விவசாயி னு சொல்றதுகே நான் யோசிச்சு இருக்கேன்.ஆனா இப்ப அதோட அருமை தெரியும் போது என்னால அதுல ஈடுபட முடியல 'என்று தன் வருத்தத்தை தெரிவித்தான் நிர்மல்.

"போங்கப்பா நீங்க மட்டும் தாத்தா கூடவே வேலை பார்த்து இருந்தீங்கன்னா இப்ப நம்ம எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருந்துருக்களாம்,தாத்தா எனக்கு தினமும் நிறைய கதை சொல்வாங்க,பாட்டி என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய் எனக்கு நிறைய தின்பண்டம் வாங்கி தருவாங்க, சித்தப்பா , சித்தி , தம்பி பாப்பா எல்லாரு கூடவும் இருத்துருக்களாம்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அந்த பிஞ்சு.

ரயில்  நிலையத்தை வந்தடைந்தவுடன் வேகமாக தன் தாத்தா வை பார்த்து விட்டு அவரை தாவி அனைத்துக்கொண்டது அந்த பட்டுக்குழந்தை.

சுப்ரமணியன் தாத்தா, " வாங்க வாங்க , பயணமெல்லாம் நல்லபடியா இருந்துச்சா?"

உடன் வந்த மாடசாமியின் துணை யோடு தங்கள் பொருள்களை வண்டியில் ஏற்றிய நிர்மல் தன் குடும்பத்துடன் தன் இல்லம் நோக்கி சென்றான்.

அந்த கிராமிய வீட்டின் முன் அனைவரும் இறங்க வள்ளி பாட்டி அனைவரையும் வரவேற்றார்.

அனைவரும் நலம் விசாரிக்க கேலியும், கிண்டலுமாக இரவு உணவை முடித்தவுடன்  பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் அமர்ந்து  கதைகளை பேசி சிரித்தனர்.

நிலா அமைதியாக தன் தாத்தா விடம் வந்தாள்," தாத்தா எனக்கு ஒரு கதை சொல்லுங்க நான் உங்க மடியில உக்காந்துக்கிறேன்."

"வாடா ராஜாத்தி வந்து உக்காந்துக்க."

"விக்கிரமபுரி அப்படீங்கிற நாட்ட விக்கிரமவர்மர் னு  ஒரு மகாராஜா ஆண்டுவந்தாரு, அவரு மக்கள பத்தின கவலை யே இல்லாம ரொம்ப சந்தோஷமா தன்னுடைய பொழுத செலவலிச்சாறு, வேட்டைக்கு போரது, பக்கத்து நாட்ட போய் சுத்திப் பாக்குறது,இப்படியே இருந்தாரு."

நிலா,"ஏன் தாத்தா அப்ப ராஜா னா எப்படி இருக்கனும். அவங்களுக்கு நிறைய பணம் இருக்கும்,எல்லா வேலை யும் செய்ய ஆள் இருப்பாங்க ,அப்பஅவங்க சந்தோஷமா ஊர் சுத்துரது ல என்ன தப்பு தாத்தா?"

"ஹா ஹா ஹா .....நிலா குட்டி நீ சொல்றது எல்லாம் சரி தான் டா. ஆனா ராஜாக்கு சில கடமை கள் இருக்கு, தன்னோட நாட்டு மக்களுக்கு தேவையான உணவெல்லாம் சரியா கிடைக்குதா இல்லை னா விலை ரொம்ப அதிகமா இருக்கா, அவங்க எல்லாரும் பாதுகாப்பா இருக்காங்களா இல்லை திருடர்களோட தொல்லை இருக்கா இந்த மாதிரி இன்னும் நிறை ய இருக்கு , அதெல்லாம் ராஜா தான் பாத்துக்கணும். என்ன டா இப்ப சரி யா?"

" ஆ சரி தாத்தா நீங்க சொல்லுங்க."

"அவரோட முக்கிய மந்திரிக்கு மன்னரோட இந்த செயல் ரொம்ப கவலை ய கொடுத்துச்சு, மத்த மந்திரி களெல்லாம் அவங்க வேலயை ஒழுங்கா செய்யாம விட்டுடாங்க அதனால நாட்ல நிறைய பிரச்சனைகள் வந்துச்சு.ஆனா இதபத்தி ராஜா கிட்ட சொல்ல போனா அவரு இத கேட்க கூட தயாரா இல்லை .என்ன பண்றது னு தெரியாம மந்திரி யோசிச்சுக்கிட்டே இருந்தாரு.

இந்த சமயத்துல ஒரு நாள் வழக்கம் போல ராஜா வேட்டையாட போனாறு. அன்னைக்கு எந்த மிருகமும் அவர் கண்ல படவே இல்லை , சோர்ந்து போய் திரும்பும்போது ஒரு முயல பார்த்து அது பின்னாடி போனாறு."

"ஐய்யய்யோ முயல அவரு பிடிச்சுட்டாறா தாத்தா, அது ரொம்ப பாவம் ல."

" இல்லை டா அந்த முயல அவரால பிடிக்க முடியல, அத பின்தொடர்ந்து போகும் போது அது வேகமா ஒரு குகை குள்ள போறத பார்த்து இவரும் பின்னாடி போனாரு,ஆனா அது மறைஞ்சுருச்சு, சோர்ந்து போன ராஜா அந்த குகை ல இருந்து வெளியே வந்து பாத்தா அது வேற இடம் மாதிரி தெரியுது."

"அப்படினா என்ன தாத்தா?"

"ம் அவரு காட்டுக்குள்ள தானே குகை ய பார்த்து உள்ள போனாரு,ஆனா இப்ப அங்க காட்டுக்கு பதிலா வேற ஊரு இருந்தது."

'ஓ சரி சரி இப்ப புரிஞ்சது."

"அந்த ஊரு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு, எங்க பாத்தாலும் கடைகள் மட்டும் தான் இருந்துச்சு, மரங்கள் கொஞ்சம் கூட இல்லை, மக்கள் தங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க மொத்தத்துல அமைதியில்லாத வறட்சி நிறைந்த ஊரா அது இருந்தது.

அங்க போய் ராஜா குடிக்க தண்ணீர் கேட்டாரு, உடனே அந்த கடைகாரன்  இரண்டு நாணயம் கொடு தண்ணீர் தரேன் அப்படினு சொன்னான்.ராஜா வுக்கு ஒன்னு மே புரியல."

"ஏன் தாத்தா அந்த கடைகாரர் சொல்றது ல என்ன தப்பு ,நம்ம காசு கொடுத்தா தானே தண்ணீர் தருவாங்க?"

"ஆமா டா காசு குடுத்தா தான் இப்ப தண்ணீர் தராங்க ஆனா அந்த காலத்துல யாரும் தண்ணீருக்கு காசு வாங்க மாட்டாங்க.எவ்வளவு கேட்டாலும் குடுப்பாங்க. இப்ப தான் டா இப்படி மாறிட்டாங்க.சரி இப்ப நம்ம கதை க்கு வருவோம்.

அந்த ராஜா கிட்ட காசு இல்லை யாம்.அந்த கடைகாரருக்கு பார்க்க பாவமா இருந்துச்சாம் அதுனால கொஞ்சமா தண்ணீர் கொடுத்தாராம்.அந்த ராஜா அவரு குடுத்த தண்ணீர குடிச்சுட்டு அந்த கடைக்கார் கிட்ட கேட்டாராம் ஏன் பா இப்படி மரமே இல்லாம இருக்குன்னு, அதுக்கு அந்த கடக்காரரு சொன்னாறாம்," 

" ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊரும் மத்த ஊர மாதிரி செழிப்பா தான் இருந்துச்சு , ஆனா விக்கிரமவர்மர் அப்படீங்கர ராஜா வோட ஆட்சில அவரோட அலட்சியத்தால எங்க நாட்டோட வளமெல்லாம் காணாம போயிடுச்சு, எங்க பாத்தாலும் பஞ்சம், மழையே இல்லாம நாடே வறன்டு போயிடுச்சு, அவரு மட்டும் கொஞ்சம் நாட்டுக்காக நல்லது பண்ணிருந்தா இன்னைக்கு நாங்க சந்தோஷமாவும் செழிப்பாவும் வாழ்திருப்போம் அவரயும் கடவுளா கொண்டாடி இருப்போம்."

" இத கேட்ட அந்த ராஜா அப்ப இந்த ஊரு தான் விக்கிரமபுரியா அப்படீ னு கேட்டாறாம்"

" ஆமாங்க இது தான் விக்கிரபுரி. "

" அப்ப விக்கிரமவர்மர் எங்க இருக்காரு?"

"நீங்க இந்த ஊருக்கு புதுசா? விக்கிரமவர்மர் இறந்து 30 வருஷம் ஆயிடுச்சு.உங்களுக்கு தெரியாதா?"

" அந்த ராஜாக்கு ஒன்னு மே புரியல , என்னடா நம்ம இறந்து டோம் னு சொல்றாங்க, அப்ப இது நம்மளோட எதிர்கால நாடா? இவ்வளவு வறட்சியா இருக்கா? ஒன்னுமே புரியலையே அப்படீ னு யோசிச்சு கிட்டே அந்த குகை குள்ள திரும்பி போறாரு அப்ப திடீர் னு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாரு."

"உனக்கு புரியுதாடா."

"ஓ புரியுது தாத்தா இந்த படத்து ல லாம் வரும் நான் பாத்துருக்கேன். டைம் மிஷின் ல போனா இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் போலாம் னு."

" என் செல்லம் டா. அப்பறம் அந்த ராஜா கண்ண முழிச்சு பாத்தா தன்னோட அரண்மணை ல படுத்துருந்தாராம் அவருக்கு ஒன்னு மே புரியலயாம் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சு பாக்கும்போது, கடவுள் நம்மல நல்வழி படுத்த தான் இப்படி ஒரு அனுபவத்த நமக்கு கொடுத்துருக்காரு னு புரிஞ்சுக்கிட்டாறாம்."

"அதுக்கு அப்பறமா தன்னோட நாட்ட சிறந்த நாடா மாத்த வேண்டிய எல்லா விஷயத்தையும் பண்ணாரு.மக்கள் எல்லாம் சந்தோஷமா வாழ்ந்தாங்க.அவர கடவுளா நினைச்சு வணங்கினாங்க."

" தாத்தா சூப்பர் கதை .எனக்கு தூக்கம் வருது நான் உங்க தோள்ள படுத்து தூங்கவா?"

"வாடா மா தூங்கு."

அங்கு வந்த வள்ளி பாட்டி,"ஏங்க குழந்தை க்கு இப்படியெல்லாமா கதை சொல்லு வாங்க."

"ஆமா வள்ளி குழந்தை ல இருந்தே நல்ல சிந்தனை களை  மனசில விதைக்கனும் அப்ப தான் வளரும்போதே அந்த குழந்தை நல்ல சிந்தனையோட இருக்கும், வளர்ந்ததுக்கு அப்பறமாகவும் நல்ல செயல்கள் செய்யும்.

சரி எல்லோரையும் போய் சீக்கிரமா தூங்க சொல்லு ,காலை ல நேரமே எந்திரிக்கனும்."















Bạn đang đọc truyện trên: AzTruyen.Top