போட்டி 6 # 5 - பாட்டா இல்ல கதையா?

ஏய் ரித்தி!! சீக்கிரம் எழுந்திரு ஸ்கூல்க்கு லேட் ஆகுது!!" என்று ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தன் மகளை தட்டி எழுப்பினார் மரகதம்.

'ச்ச!! இந்த அம்மா கனவுல கூட சாக்லெட் சாப்பிட விடமாட்டிராங்க' என்று மனதினுள்ளேயே சலித்துக் கொண்டு தன் சாக்லெட் கனவிற்கு பிரியா விடை கொடுத்து கண் விழித்தாள் ரித்தி.

"சீக்கிரம் போய் பிரஷ் பண்ணிட்டு வா. மணி ஏழாகுது இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் பஸ் வந்திடும்!!" என்று தூக்கம் தெளிந்தும் தெளியாத மகளை பாத்ரூமில் நுழைத்தார் மரகதம்.

ரித்தி பாரதி நிகேதின் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். மிகவும் சுட்டி, புத்திசாளியும் கூட. அவளது தந்தை பம்பாயில் வேலை செய்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்க்கு வருவார். அவர்களது கூட்டுக் குடும்பம் என்பதால் மனைவி மற்றும் மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லை அவருக்கு.

ரித்தி தன் தாத்தா பாட்டி பாசத்தில் மிகவும் குறும்பு செய்யும் குழந்தையாகவே வளர்ந்தால்.

ஒரு வழியாக பல் துளக்கி குளித்து முடித்து வந்த மகளுக்கு ஸ்கூல் உடை அணிவித்து உணவூட்டி புறப்பட வைத்தார் மரகதம்.

ஸ்கூல் பேக் மாட்டி பஸ் ஸ்டாப்பிற்கு புறப்பட்ட பின் தான் அவளுக்கு நினைவு வந்தது தான் நேற்று கொடுத்த கணக்கு வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று.

"அம்மா நா ஸ்கூல்க்கு போமாட்டேன்" என்றுவிட்டு தன் அறையினுள் சென்று தாழிட்டு கொண்டாள்.

மரகததிர்கு ஒன்றும் புரியவில்லை.

"ரித்தி என்னாச்சி? ஏன் ஸ்கூல் போகமாட்டன்ற? மொதல்ல வெளிய வா!!"-மரகதம்.

"போம்மா வெளிய வந்தா நீ ஸ்கூல்க்கு அனுப்பிடுவ!! நான் மேக்ஸ் ஹோம் வர்க் செய்யல, எங்க ஹிட்லர் மிஸ் பணிஷ் பண்ணிடுவாங்க. நான் ஸ்கூல் போமாட்டேன் " என்று மழலை குரலில் சினுங்கினாள் ரித்தி.

இவளை எவ்வாறு வெளியே வர வைப்பது என்று யோசித்தார் மரகதம்.
அவருக்கு ஓர் வழிகிட்டியது.

"சரிடா நீ ஸ்கூல்க்கு போக வேண்டாம் வெளிய வா நாம உனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் கடைக்கு போவோம்"- மரகதம்.

"ம்ஹும்! ம்ஹும்! நான் வரமாட்டேன். நீ போன மாசமும் இப்பிடி தான் சொன்ன ஆனா வெளிய வந்ததும் இழுத்துட்டு பஸ்ல ஏத்திவிட்டுட்ட! வேனும்னா ஸ்கூல் பஸ் போனதுக்கு அப்புறம் வரேன் போலாம்"- ரித்தி.

'இப்பிடி பாசமா பேசுனாலாம் வெளிய வரமாட்ட இரு! ' என்று மனதினுள் நினைத்து கொண்டு, "ஏய் ரித்தி!! இப்போ வெளிய வரப்போரியா இல்லியா! நான் உள்ள வந்தேன் அவ்ளோ தான்!!"- மரகதம்.

இவர்களது சத்தத்தை கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தார் மணி, ரித்தியின் தாத்தா.

"மரகதம் என்னம்மா இங்க சத்தம்?"- மணி.

"ஸ்கூல்க்கு போமாட்டேன்னு கதவ சாத்திட்டு வெளிய வரமாட்டங்குறா மாமா"- மரகதம்.

"ரித்தி செல்லம் நீங்க குட் கேள்ர்ல வெளிய வாங்க"- மணி.

"ம்ஹும் நா வரமாட்டேன்! வந்தா அம்மா ஸ்கூல்க்கு அனுப்பிடுவாங்க! நான் ஹோம் வர்க் செய்யல ஸ்கூல்ல மிஸ் அடிச்சிடுவாங்க!"- ரித்தி.

"அப்படிலாம் மிஸ் செய்ய மாட்டாங்கடா செல்லம். அப்படி செஞ்சா என்கிட்ட சொல்லு தாத்தா பாத்துக்குறேன்!"- மணி.

என்ன கூறியும் வெளியே ரித்தி வராததால் தன் இறுதிக் கனையை தொடுத்தார் மணி.

"இங்க பாருடா நீ சமத்து குட்டியா ஸ்கூல் போய்ட்டு வந்தீனா தாத்தா சூப்பர் கதையா நைட் ரித்தி பாப்பாக்கு சொல்வேன்!".

ரித்தி தாத்தாவின் கதை பிரியை. எப்போதும் கதை சொல்லுமாறு அவரை நச்சரித்து கொண்டே இருப்பாள். மணி நினைத்த மாதிரியே ரித்தியின் கவனம் அவர் கூறியதை கேட்டு ஈர்க்க பட்டது.

"கண்டீப்பா சொல்வீங்களா!! அம்மா மாதிரி சீட்டிங் பண்ணிட மாட்டீங்களே!!"- ரித்தி.

"பிராமிஸ் டா கன்னா!" என்று ஒரு வழியாக அவளை வெளியே வர வைத்து ஸ்கூல்க்கு அனுப்பி வைத்தனர் மரகதமும் மணியும்.

ரித்தியின் அதிர்ஷ்டமோ என்னவோ அன்று பள்ளிக்கு அவள் ஆசிரியர் வரவில்லை!! பிறகு என்ன ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

தாத்தாவின் கதை பற்றிய நினைப்புதான் ரித்திக்கு அன்று முழுவதும். வீட்டுக்குள் நுழைந்த மறுநொடி பேக்கை கீழே போட்டுவிட்டு தன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"தாத்தா கதை சொல்லுங்க! எந்த கதை சொல்ல போறீங்க? பேய் கதையா? அதுல பூதம்லாம் வருமா? இல்ல.." என இடைவிடாது பேசிக்கொண்டிருந்தவளை நிறுத்தினார் மணி.

"இரு!! இரு! ஏன் இவ்வளவு அவசரம் ஹூம்! போய் மொதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ஹோம் வர்க்லாம் முடிச்சுட்டு வாடா செல்லம் தாத்தா நைட் கதை சொல்லுறேன்".

"தாத்தா... இப்பவே சொல்லுங்க "- ரித்தி.

"கதைலாம் நைட் தான் கேக்க சூப்பரா இருக்கும் டா தங்கம். அதனால நீ எல்லா ஹோம் வர்க்கும் முடிச்சுட்டு வந்துடு சரியா?"- மணி.

"சரி தாத்தா!! நீங்க அதுக்குள்ள நல்ல கதையா யோசிச்சு வைங்க" - ரித்தி.

கதை கேட்க வேண்டும் என்ற  ஆர்வத்தில் அனைத்து வேலையும் படபடவென எட்டு மணிக்குள் முடித்து விட்டு தன் தாத்தாவை தேடி சென்றாள் ரித்தி.

ரித்தியின் தாத்தா கயிற்று கட்டிலை எடுத்து களத்தில் போட்டு கொண்டிருந்தார். அவரின் அருகே சென்ற ரித்தி,

"தாத்தா நீங்க சொன்ன மாதிரி எல்லா வர்கையும் முடிச்சுட்டேன் இப்போ கதை சொல்லுங்க!!" என்றாள்.

இருவரும் கயிற்று கட்டிலில் வானத்து நிலா வெளிச்சத்தில் நட்சத்திரங்களை பார்த்தவாறு படுத்தனர்.

"இப்ப என் குட்டிம்மாக்கு நான் சின்ன பையனா இருந்தப்ப எங்க தாத்தா எனக்கு சொன்ன கதைய சொல்லப் போறேன்".

"அப்படியா!! என்ன கதை தாத்தா அது??" என்று ஆர்வம் கலந்த விழிகளை விரித்து கேட்டாள்.

"பஞ்ச பாண்டவர் கதைடா தங்கம்!! " - மணி.

"பேரே ரொம்ப பழசா இருக்கே போர் அடிக்கும் தாத்தா"- ரித்தி.

"இல்லடா கன்னா! இந்த கதை அவ்வளவு சூப்பரா இருக்கும் நீ கேட்டுப்பாரு அப்புறம் திரும்ப சொல்ல சொல்லுவ!!"- மணி.

"சரி சொல்லுங்க தாத்தா" என்றாள் ரித்தி. அவர் குரலை சரி செய்து கொண்டு கதை சொல்ல ஆயத்தமானார்.

முந்தி முந்தி விநாயகரே முருகர் சரஸ்வதியே

கந்தனுக்கு முன் குழந்த கணபதி புள்ளையாரே

நாகு சரஸ்வதியே நல்ல கணபதியே

ஐவரும் பஞ்சவரும் ஆரனங்கு துரோபதையும்

பாவி துரியோதனன் படும் பாவி அரக்கன்

கொல்ல நினைச்சானே குருடன் மகன் சத்திராவதி

பாரா பன்னிரண்டு வருஷம் பாரா வனவாசம் ஓட்டினார் பஞ்சவர

"இரு தாத்தா இரு!! கதை கேட்டா பாட்டு ஏன் பாடுர??" என தடுத்தாள் 

ரித்தி.

"இது பாட்டு மாதிரி தான் வரும் டா!! நான் பாடிட்டே கதை சொல்லுறேன் கேளு!! 

பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர் தர்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன். இவங்க அண்ணன் தம்பிங்க. இவங்களோட மனைவி திரௌபதி. இவங்கள துரியோதனன் பன்னிரண்டு வருஷம் வனவாசம் சூழ்ச்சி செஞ்சு அனுப்பிட்டான்"

"வனவாசம்னா என்ன தாத்தா ?"- ரித்தி.

"வனவாசம்னா காட்டுளையே வாழனும் ஊருக்குள்ள வரக்கூடாது"- மணி .

"ஹா!! துரியோதனன் ரொம்ப பேட் பாய் பாவம் அவங்க!!"- ரித்தி.

"ஆமாடா !அவன் ரொம்ப கெட்டவன்!"- மணி.

"அப்புறம் என்னாச்சி தாத்தா ?"

கூடை தலைமேல கோடி வச்சு சும்மாடே

ஆறு சுனைதாண்டி அரியமலை தந்தாண்டி

காடு வனந்தாண்டி கரியமலை தந்தாண்டி

இஞ்சி வனந்தாண்டி எழுமிச்சங்காய் தோட்டம் போய் பூந்தார்

அந்த வனத்தினிலே ராமா ரிஷி வனம் போய் பூந்தார்

"வனவாசத்துக்கு புறப்பட்டவங்க பல மலை காடுலாம் தாண்டி போய்கிட்டே இருந்தாங்க. அப்படி போய்கிட்டு இருந்தப்ப தான் ராமா ரிஷி வனம்கிர ஒரு வனத்துக்கு வந்தாங்க.

அங்க ஓய்வு எடுக்குறதுக்கு பர்ணசாலை கட்டுனாங்க..."- மணி.

"பர்ணசாலைனா??"- ரித்தி.

"அப்படீன்னா ஓளைல பின்னுவாங்கள்ள குடிசை அது தான்டா!"- மணி.

"ஓ!! குடிசையா!! சரி அப்புறம் என்னாச்சுனு சொல்லுங்க"- ரித்தி.

"ஹும்!! அப்படி ஓய்வெடுத்துட்டு இருந்தப்ப ஒரு மான் அங்க வந்தது".

"மானா!!" என விருப்பம் கலந்த பார்வையோடு வினாவினாள் ரித்தி.

"ஆமா டா புள்ளி மான். அது வந்து திரௌபதி கூட விளையாடிட்டு இருந்துச்சு.ஆனா அது உண்மையான மான் கிடையாது மான் உருவத்துல வந்த மாயவன்!".

"மாயவனா? அது யார் தாத்தா?" - ரித்தி .

"மாயவன்கிறது கிருஷ்ணணர்டா!!" - மணி.

"ஹய்!!! லிட்டில் கிருஷ்ணாவா தாத்தா??".

"ஆமாடா!! அவர் வந்து திரௌபதி கூட விளையாடிட்டு இருந்துட்டு அங்க இருந்து ஓடிட்டார். திரௌபதி அந்த மான் வேனும்னு கேட்டதால பீமன் நான் போய் புடிச்சுட்டு வரேன்னு கிளம்புனான்,

தூக்கி வைக்கும் கால்களுக்கு துள்ளீப்பு சல்லடமாம்

மண்டியிடும் கால்களுக்கு மல்லீப்பு சல்லடமாம் 

எட்டி வைக்கும் கால்களுக்கு எலந்தீப்பு சல்லடமாம் 

அண்ணார் பாதத்துல அடிவணங்கி தெண்டனிட்டு

போக விடை தாருமுன்னு பொருந்தி விடை கேட்டான் 

இப்படி எல்லார் கிட்டையும் சொல்லிட்டு அந்த மான தேடி போனான்.அப்போ திடீர்னு தாகம் எடுத்ததுனால அங்க இருந்த குளத்துல தண்ணீர் குடிக்க போனான். ஆனா மாயவன் அந்த குளத்துல தண்ணீர் குடிச்சீனா இறந்துடுவனு சொன்னார்.

கண் முன்னாடி யாருமே இல்லாததுனால அது பேய் பிசாசோட வேலையா இருக்கும்னுட்டு பீமன் அந்த தண்ணீய குடிச்சுட்டான்".

"அச்சச்சோ!! அப்புறம் எண்ணாச்சு தாத்தா??"- ரித்தி.

"அத குடிச்சதுக்கு அப்புறம் அவனுக்கு தலை சுத்துர மாதிரி இருந்தது . அப்படியே அங்க இருந்த மரத்து மேல சாஞ்சு கீழ விழுந்துட்டான்!! மண்ணுல 'இந்த விஷ தண்ணீர குடிக்காதீங்க இறந்துடுவீங்க' அப்படீன்னு எழுதிட்டு இறந்துட்டான்".

"இறந்துட்டானா?!!! அப்புறம் என்னாச்சி ??"- ரித்தி .

"அப்புறம் ..,..." - மணி.

"ரித்தி மணி பத்தாகுது நாளைக்கு ஸ்கூல் இருக்கு வந்து படு வா!" - மரகதம்.

"அம்மா இரும்மா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் பிலீஸ். இந்த கதை முடிஞ்சிடட்டும்" என்று கெஞ்சலுடன் கேட்டாள் ரித்தி.

"அதெல்லாம் நாளைக்கு கேட்டுக்கலாம் இப்போ ரொம்ப நோரமாகிடுச்சு வா!!" - மரகதம்.

"தாத்தா அம்மாட்ட நீங்களே சொல்லுங்க..." - ரித்தி .

"இல்லடா தங்கம் அம்மா சொல்லுற மாதிரி கேளு நான் நாளைக்கு என் பட்டுக்கு முழு கதையும் சொல்றேன்" - மணி.

"முழு கதையுமா ! அப்போ சரி குட் நைட்  தாத்தா " என்றுவிட்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் தாயுடன் உறங்கச் சென்றாள் ரித்தி .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top