போட்டி 6 # 3- பிறந்த நாள்
"ஹே நாளைக்கு எனக்கு பர்த்டே"என்று பத்தாவது முறையாக முகலர்ச்சி மாறாமல் சுதாவிடமும்,
அனிதாவிடமும் கூறினால் கவி
"இதையே எத்தனை வாட்டி சொல்வடி"
என்றாள் அனிதா
"நான் இன்னைக்கு டிரஸ் எடுக்க கடைக்கு போறன் எங்க அம்மா எனக்கு ஐஸ் அப்புறம் சாக்லேட் வாங்கி தருவாங்களே" என்றாள் கவி
"அப்படியா!! எத்தனை ஐஸ் சாப்டுவ"என ஏக்கமாக கேட்டால் சுதா
"நாலு,மூன்று என விரல்களை மாற்றி மாற்றி காண்பித்தாள்" கவி
பள்ளி நேரம் முடியவே அனைவரும் வீட்டிற்கு சென்றனர்
கவி மாலையில் தன் பெற்றோர்களுடன் கடைக்கு சென்றாள் தன் கண்களில் பிறந்தநாள் கணவுகளோடு
கவி அழகான ஒரு மிடியும், ஜீன்ஸ் பேன்டும் தேர்வு செய்தாள் பின் அவளுக்கு காலணி வாங்க சென்றார்கள்
அவள் அழகான கல்லு வைத்த அழகிய காலணி தேர்ந்தெடுத்தாள் ஆனால் அதன் விலை 999மட்டுமே என்றிருந்தது
அதனால் அவள் அம்மா அதனை வேண்டாம் என மறுத்தார் ஆனால் அவள் மனமோ அதிலிருந்து வெளிவரவில்லை எனக்கு அந்த காலணி தான் வேனும்
என்று வராத அழுகையையும் வரவைத்து கூச்சல்லிட்டாள் அவளின் சத்தம் கேட்டு அனைவரும் அவளை பார்த்தனர் அதை கவனித்த அவள் அம்மா அவளுக்கு இரண்டு ஒதையை கொடுத்து அங்கிகருந்து அழைத்து சென்றார் அதன் பின் அவர்கள் வீட்டுக்கு சென்றனர்
கவியின் அம்மா இரவு உணவு தயாரிப்பதில் மூழ்கியதாள் அவள் கவியை கவனிக்கவில்லை
"கவி சாப்ட வா" என சில மணி நேரம் கழித்து அவளை சாப்பிட அழைக்க வந்த அவள் அம்மா அவளை பர்த்து அதிர்ச்சி அடைந்தார் அவள் எதையோ பரிக்கொடுத்தது போல்
உற் என்று அமர்ந்திருந்தாள்
அவள் அருகில் சென்று என்னவென்று விசாரித்தார் அவள் தனது முகத்தை மாற்றாமல் ஓர் மூலையை பார்த்துக் கொண்டே இருந்தால் அவளின் பார்வை சென்ற இடத்தை பார்த்து மீண்டும் அதிர்ச்சி அடைந்தார் அங்க மூலையில் கவியின் தங்க செயின் கழட்டி எரிய பட்டிருந்தது அதை கண்டவர் கண்களில் கோபம் கொப்பளித்தது கவியை இழுத்து பொலுக் பொலுக் என அறையை விட்டார் கோவத்தில் அவள் அழுதுக் கொண்டே தூங்கி விட்டாள்
இரவு மணி 11:59
9
8
7
6
5
4
3
2
1
0
ஹப்பி பர்த்டே டு மை க்யூட் செல்லகுட்டி என கோரசாக கவியின் பொற்றோர் கேக்குடன்
கவி தூங்கியதால் அவள் நடந்ததை
மறந்திருந்தாள் அதுதான் குழந்தையின் குணம்
கவி கேக்கை வெட்டி தன் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் ஊட்டிவிட்டால் பின் அவர்களும் கவிக்கு
கேக்கை ஊட்டி விட்டனர்
காலையில் கவி அவளுக்கு வாங்கிகொடுத்த மிடியைப் போட்டுக் கொண்டு சாமி கும்பிட்டாள் தன் தாயுடன் பின் அவள் அம்மா கொடுத்த பாயாசத்தை குடித்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது அவள் அப்பா அவளுக்கு கிப்ட் பார்சல் கொடுத்தார் "இது ஏன் அம்முக்குட்டிக்கு" என்றவாறே
அதை பிரித்து பார்த்தவள் ஆனந்தத்தில்
துள்ளி குதித்தாள் அதில் அவள் ஆசைப்பட்ட காலணி இருந்தது,கவியின்
மகிழ்ச்சியை கண்ட அவள் பொற்றோர்களும் பூரித்தனர்
அன்று முழுவதும் அவள் ஆனந்தக் கடலில் தத்தளித்தாள்
பின் கவி இரவு உறங்கும் முன் அவள் அம்மாவிடம்
"அம்மா அடுத்த பர்த்டே எப்ப வருமா"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top