போட்டி 6 # 14 - மலைத் தேன்.

காசு சரியா பாத்து வாங்கிட்டு வந்துருய்யா.. எனக்கு உடம்பு முடிஞ்சா நானே போயிருப்பேன் உன்ன சின்னப் பயனு ஏமாத்த பாப்பானுவோ, இருபது ரூபாவாங்காம தேன் கொடுத்துராத.. யாருமில்லாஅந்த ஒத்தையடி பாதையில்மாரிக்கு அவன்அன்னையின் வார்த்தைகள்மட்டும் துணையாய் வந்தன.டவுனுக்கு போகும் வரைஅவள் சொன்னவார்த்தைகளை  நினைத்துக்கொண்டே தான்  சென்றான் உங்கப்பா இப்ப இல்ல, நீதான் ராசா  நம்ம வீட்டுக்கு ஆம்பள, விவரமா இருக்கனும்..! தன் தோளில் தொங்கி கொண்டிருந்த தேன் பாட்டிலை இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். மாரியின் ஊர்மலை மேலிருக்கும் ஓர் குக் கிராமம்  தேன்  எடுப்பதுதான்  மாரியின் குடும்பத்தொழில் கயிறு கட்டி மலைமீதேறி உயிரை பணயம் வைத்து தான் வாழ்க்கை ஒடுகிறது அந்த ஆட்டத்தில் நிலை தணுமாறி தான் இவன் அப்பா இறந்துபோனார். இப்போது இவன் அம்மா தான் மலை ஏறி குடும்பத்தை காப்பாற்றுகிறாள். பத்து வயதே ஆனாலும் மாரி மலை ஏறுவதில் கெட்டிக்காரன்.இவன் தான்இக் குடும்பத்தின் எதிர்காலம்.தன் அம்மாவின் வார்த்தைகளை எல்லாம் நினைத்துக் கொண்டே ஒருவழியாக டவுனைவந்தடைந்தான். தேன்வாங்கி கலப்படமாக்கிவிற்கும் குமரேசன் கடயை அடைந்து அவனிடம் தேன்பாட்டிலை கொடுத்தான். 

அவன் மாரியை ஏற இறங்க பார்த்துவிட்டு

"என்னல உங்க அம்மைக்கு உடம்பு சரியில்லையாமே அதான் நீ வந்திருக்கியோ..!"

சொல்லிக் கொண்டே தேனை வாங்கி உள்ளே வைத்துவிட்டு பத்து ரூபாய் கொடுத்தன்.

" ஆத்தா இருபது ரூவாவாங்கியார சொன்னுச்சு..மீதி பத்து ரூவா.." என்றுஇழுத்தான் மாரி.

" உங்கம்மா ஆயிரம் கூடசொல்லுவா.. அதெல்லாம் தரமுடியுமா.. நீ கொடுக்ற இந்த ஒன்றையனா தேனுக்கு"  

"அண்ண.. நீ நான் சின்ன பையன்னு ஏமாத்த பாக்குற..இருபது  ரூவா கொடு"

"உன்ன ஏமாத்தி நான் வாழுறனா.. பிச்சகாரபயலுக்கு இவ்ளோ திமிரா..! "விறு விறு வென உள்ளே சென்று தேன் பாட்டிலை மாரிகையில் திணித்தான் "இந்தாடா உன் தேன்  நான் குடுத்த  பத்து  ரூவாய கொடுத்துட்டு ஓடுடா.. நான் இல்லாம எவன் இத வாங்குறான்னு பார்க்குறேன்"

மாரி பரிதாபமாக அவனை பார்த்துவிட்டு தேன் பாட்டிலை வாங்கி விட்டுவந்த வழியே நடந்தான்.அவன் ஊரை நெருங்கியும்அதை உணராமல் நடந்து கொண்டே இருந்தான்.அம்மாவை எப்படி பார்ப்பேன்..?  என்னை நம்பி ஒப்படைத்த முதல் வேலையும் கெடுத்து விட்டேனே எனஅவனுக்குள் ஆயிரம் கேள்விகள். நாமே தேனை விற்றால் என்ன என நினைத்து, தன் தோளில் இருந்த தேன் பாட்டிலை திறந்து பாட்டிலிலிருந்து குடலை குமட்டுமளவு நாற்றம்வந்தது அப்போது தான் குமரேசன் தன்னை ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்.அவனுக்குள் இனம் புரியாத ஒரு வெறி ஏற்பட்டது. வீட்டுக்கு சென்று அவன்அம்மாவுக்கு தெரியாமல்கயிறு அரிவாளை  எடுத்துக் கொண்டு ஊரிலேயே உயரமான அந்த மலையை நோக்கி நடந்தான். எதையும் யோசிக்காமல் மலையேறத் தொடங்கினான். இந்த மலைக்கு மேல் தான்,உலகிலேயே தித்திப்பான தேன் கிடைக்குமாம், இதை யாருமே ஏற துணிந்தது கிடையாது அந்த அளவுக்கு இந்த இடத்தின் மேல் பயம் ஆனால் மாரி பயப்படும் நிலையில் இல்லை எதையும் யோசிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உச்சியைஅடைந்தான். அங்கே மனிதரே பார்த்திராத காட்டின் பிரம்யமான அழகு அவன் கவலைகளை எல்லாம் மறக்கடித்தது. அந்தஅழகில் சொக்கி இருந்த அவனை தேனியின் ரீங்கார ஒலி திசை திருப்பியது. ஒலிவந்த  திசையை நோக்கி திரும்பினான். அங்கே அவன் பார்த்த தேனி அவனை திகைக்க செய்தது, அவன் சாதாரனமான தேனியை பார்த்து பயப்பட்டதில்லை ஆனால் இந்த தேனி சாதாரண தேனியும் இல்லை.இரண்டு அடி உயரமிருந்தது அந்த தேனி இவ்வளவு பெரிய தேனியை எவரும் கண்டிருக்க மாட்டார்கள்.இவன் சுதாரிப்பதற்குள் அது இவனை நெருங்கி தன் கொடுக்காள் கொட்டியது .மாரி மெல்ல மெல்ல நிலை இழந்து மயங்கி விழுந்தான் அவன் விழித்த போது வேறு ஒரு இடத்தில் இருந்தான்.சற்றி பார்த்த கண்கள் ஒருஇடத்தில் உறைந்து நின்றதுஅதிர்ச்சியில் விரிந்தது.அவன் கண்டது ஒரு மிகப்பெரிய தேன் கூடு மூன்று பனை மர உயரமிருக்கும் அவ்வளவு பெரிய ராட்சசதேன் கூடு. அது ஒரு குன்றின் வளைந்த ராட்சசமரம் ஒன்றில் தொடங்கி ,அந்த குன்றிலிருந்து  வழிந்த அருவியின் அருகில் படரந்து அந்த அருவி விழும் தடாகம்வரை நீண்டிருந்தது. அதைகண்டு மலைத்த அவன் அதோடு நிற்காமல் யாரும் காணாதவாறு மெல்ல அதனுள் நுழைந்தான்.உள்ளே பற்பல அறைகள் இருந்தன, அறை எங்கும் தேன் வாசம், தொட்ட இடமெல்லாம் தேன் கசிந்தது.அவனால் முடிந்த வரை தேனை குடித்தான். தேனில்திளைத்தான். இவ்வளவு இனிப்பான தேனை இவன்ருசித்ததே இல்லை.

இவன் அதன் தித்திப்பில் மூழ்கியிருந்த வேளை தேனீக்கள் வரும் சத்தம் கேட்டது. இவன் ஒழிய இடமின்றி திணறினான்.அப்போது  தான் அந்த அதிசயம் நடந்தது,

"நான் தான் உன்னை இங்குதூக்கி வந்தேன் .. எப்படிஇருக்கிறாய்"

மாரி குரல் வந்த திசை நோக்கி திரும்பினான் .அங்கே இரு தேனீக்கள் நின்று கொண்டிருந்தன.

அவன் தன் காதுகள் கேட்டது உண்மை தானா என குழம்பிநிற்க, அந்த தேனீ மேலும் பேச தொடங்கியது.

" பயப்பட வேண்டாம்.. நான் உன்னை லேசாகத் தான் கொட்டினேன். என் விசம் உன் உடலில் இருப்பதால் தான் நான் பேசுவது உனக்குபுரிகிறது. நாங்கள் உன் போன்ற மானிடருக்காகதான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். எங்களுக்கு உன் உதவி வேண்டும்"

"உதவியா..?!! " திகைத்தான்மாரி

"ஆம் , இந்த தேன் கூட்டின் அதிபதி எங்களது ராணி தேனீ தான். அவள் ஒரு அரக்கி எங்களை சர்வாதிகாரம் செய்துவருகிறாள். அவளை எதிரப்பவர்களை எல்லாம் தன் கொடுக்கின் விசத்தால் கொன்று விடுவாள்"

"நீங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து அவளை கொல்ல வேண்டியது தானே"

"எங்கள் விசம் அவளை ஒன்றும் செய்யாது. மேலும் அவள் தனக்கு இணை இருக்க கூடாது என இங்கு பிறக்கும் அத்தனை பெண் தேனீக்களையும் கொன்றுவிடுவாள். நாங்கள் ஒரு பெண் தேனீயையும் மட்டும்ஒழித்து ஒழித்து அவளிடம் இருந்து காப்பாற்றி வந்தோம் ஆனால் அவள் வஞ்சகமாக அதையும் கண்டு பிடித்துவிட்டாள். நாளை பௌர்ணமி இங்குள்ள அத்தனை தேனையும் குடித்து விட்டு அந்த பெண் தேனீயையும் அவள் கொல்லப் போகிறாள்.நல்ல வேளையாக நீ வந்துசேரந்தாய். நீ தான் எங்களுக்கு உதவ வேண்டும். அதற்கு பலனாய் நாங்கள் சேர்த்த இந்த உன்னதமானபிதேனில் ஒரு பகுதியை உனக்கு மாதந்தோறும் தருகிறோம்."

மாரிக்கு வேறு வழியில்லை"நான் இப்ப என்ன செய்யனும்.?"

"ராணியின் சக்தியெல்லாம் அவள் கொடுக்கில் தான் உள்ளது. அதை மட்டுமல நூவெட்டி எறிந்தால் அவள் கதை முடிந்தது"

சரியென சொல்ல தயங்கி தலையை மட்டும் ஆட்டினான் மாரி.

அந்த தேனீக்கள் அவனை தூக்கி சென்று ராணியின்அறையில் விட்டன. அவன் மெல்ல அறையினுள் நுழைந்து , ராணி உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். சலனமின்றி அதனருகே சென்று அரிவாளை ஓங்கினான்.அவன் வெட்டமுனைவதற்குள் சட்டெனராணி சிலிர்த்து கொண்டு எழுந்தது.

"உனக்காக தான்காத்திருக்கிறேனடா..!பொடிப்பயலே..! " என கூறி சிரித்தது, அதன் சிரிப்பொலி அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

அதன் முழு உருவை பார்த்துமா்ரி மிரண்டு போனான் ,அது ஏறக்குறைய ஏழு அடி உயரம் இருக்கும் ,இறக்கைகள் மயிர்கூச்செறியும் வலியில்படபடக்க , காற்றில் மிதந்து வந்தது.

அதன் கொடுக்கு போர் வாள் போல கூர்மையாய் அந்த நிலவொளியில் மின்னியது.

"என் பின்னே நடக்கும் சதி எனக்கு தெரியாது என நினைத்தாயா.. அந்தகோளை தேனீக்கள் உன்னை தான் என்னை கொல்ல அனுப்பினார்களா..!!என்னே அவமானம்"ராணியின் கண்கள் சுருங்கியது அதன் கோபம்தலைக்கேறுவதை உணர முடிந்தது. " உன் இரத்தத்தை கொண்டு என் கொடுக்கை குளிப்பாட்டுகிறேன் பார்" என கூறி தன் கூரிய கொடுக்கை மாரியின் மார்பை நோக்கி திருப்பி பாயத் தயாரானது.

மாரி கடவுளை வேண்டிக் கொண்டான், தன் கையில் இருந்த அரிவாளை இறுகபற்றி , தன் மார்புக்கு மேல் அரணாய் வைத்தான்.

ராணி அவன அரிவாளைதுச்சமாய் பார்த்தது

"ஓ... இந்த அரிவாள் என்னை கொல்லும் என நினைக்கிறாயா ..! "இப்போது பார் என கூறி 

தன் குரலை சரியாக்கி ரீங்காரமாய் பாடத் தொடங்கியது. அதன் பாடல் மெல்ல அவனது உடலை தளர்வடைய செய்தது ,தூக்கம் அவன் கண்களை சொக்கியது , தன் கையில் இருந்த அரிவாள் மெல்ல நழுவி கீழே விழுவதை உணர்ந்தான் அவன்அரிவாள் கீழே விழுந்ததை கண்டதும் அது பாடுவதை நிறுத்தி விட்டு இவன் மீது முழு வீச்சாய் பாய்ந்தது. 

மாரி செய்வது அறியாமல் தன் கையில் இருந்த குமரேசன் ஏமாற்றி கொடுத்த கலப்பட தேனை அதன் மீது எறிந்தான் அந்த பாட்டில் ராணியின் கொடுக்கில் பட்டு உடைய, நாற்றமடிக்கும் அந்த கலப்பட தேன் . ராணியின் முகத்தில் தெளித்தது.கால முழுவதும் சுத்தமான தேனை பருகி வளர்ந்த தேனீ இந்த கலப்பட தேனின் நாற்றத்தில் நிலை மறந்துபோக, அதன் கொடுக்கு குறி தவறி மாரியின் பக்கத்திலிருந்த அறையின் சுவற்றில் மாட்ட, கிடைத்த அவகாசத்தில் மாரி. அரிவாளை எடுத்து கொடுக்கை துண்டாக வெட்டினான்.

கொடுக்கை இழந்த ராணித் தேனீ , வலியில் துவண்டு இறந்து போனது.  

அதன் இறப்பை கண்டு அனைத்து தேனீக்களும் துள்ளி குதித்தன. மாரியை நாயகனாக தூக்கி கொண்டாடின. புது ராணித்தேனீ தேர்ந்தெடுக்கப் பட்டு பட்டாபிசேகமும் முடிந்தது.சொன்ன சொல் தவறாமல் தேனீக்கள் மாரிக்கு அவர்களின் உன்னதமான தேனை கொடுத்தன. அதை கலப்படமின்றி விற்று மாரி செல்வந்தன் ஆனான்.குமரேசனின்  கலப்படம் தெரிந்து அவனை ஊர்மக்கள் அடித்து விரட்டினர்.மாரி அவனை மன்னித்து ,அவனுக்கு வேலை கொடுத்தான். பல்லாண்டு காலம் சந்தோசமாய் வாழ்ந்தான்.


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top