போட்டி 5 # 8 - என்னவள்


நட்சத்திர பூக்கள் அணிந்து வெண்ணிலவு வீற்றிருக்க

நாளை வரும் புத்தாண்டை வரவேற்க

நன்பர்களோடு நகைத்துக் கொண்டு நின்றிருந்தேன்

காற்றோ இசையாகி என் காதருகே கிசுகிசுக்க

ஓசை கேட்ட திசை திரும்பிய நான் அப்படியே உறைந்து நின்றேன்

வெண்ணிலவின் ஒளி திரட்டி விழியிலே ஊற்றி வைத்து

கண்களின் கவர்ச்சியாலே காண்பவரை ஈர்த்து

தோகைகளை உடையாக்கி அழகோவியமாய் அவள் நின்றிருக்க

நான் இமையாமல் நின்றிருந்தேன்!!

இனிமையான அவள் மென் சிரிப்பில் குயிலிசை தோற்றுப் போகும்

மெல்லிய பூ அவள் புன்னகையில் பூலோகம் கிரங்கி நிற்கும்

அடைய முடியா கனி அவளை கண்களாலே நான் வருட

என் விழியின் ஸ்பரிச ஒளி பட்டு அவள் பொன்னுடல் சிலிர்த்துவிட

ஒளி தேடும் மின்மினியாய் அவள் என் விழி தேடி அழைய

நான் இதழோரப் புன்னகையோடு என் இதயத்தை தூதுவிட

அது அவள் கால் கொழுசின் ஓசை கேட்டு காலடியில் கிரங்கியது!!

அவள் அழகின் போதையில் நான் அசையாமல் நின்றிருக்க

உறைந்து போய் நின்ற என்னை உயிர் தோழன் உழுக்கிவிட

தாய் கண்ட சிறுபிள்ளை போல் என் பெயர் கேட்டு அவள் திரும்ப

இரு விழிகள் மோதி காதல் சிதற

மொழிகள் நாணப்பட்டு மௌனம் பேசியது!!

தொலைந்துவிட நினைத்தேன் விழிகளில்

வழியில் சென்ற என் விழிகளை கட்டியிழுத்து காதல் பேசும் உன் விழிகளில்!!

கலந்துவிட நினைத்தேன் நினைவுகளில்

என் வெற்றுடலுக்கு அந்தமும் ஆதியுமாகி ஆட்சி செய்யும் உன் நினைவுகளில்!!

இனைந்துவிட நினைத்தேன் இதயதுடிப்பில்

விழிபட்ட மறுநொடி, என்னால், எனக்காக படபடத்து துடித்து கொண்டிருக்கும் உன் இதயதுடிப்பில்!!

நாளை வரும் ஓர் ஆண்டு மட்டுமல்லாமல்

நூற்றாண்டுகள் பல என்னவளின் நினைவுகளை மட்டுமே பருகி

உயிர்வாழும் வரம் கிடைக்க வேண்டிய எனக்கு

தானே வரமாய் வருவதாய் கூறும் பாணியில்

தலையசைத்து தன் இதயத்தில் கை வைத்தாள்!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top