போட்டி 5 # 6 - சகியே


கனவுகள் பூக்கும் புத்தாண்டில்,

என் கனவின் கன்னியே – நீ வந்தாயடி!


வண்ணங்கள் பல ஜொலிக்கும் அவ்விரவில்,

என் உயிரின் வண்ணமாய் வந்தாயடி!


விழி இரண்டும் வழி தேட,

வலி நீக்கும் வழியாய் வந்தாயடி!


மதி மயக்கும் வெண்மதியே,

உனைக் கண்டதும் துலைந்தேனடி!


விதி செய்த மாயம் ஏனோ?

உனைக்காண வந்தேன் நானோ?


வீசும் காற்று உனைத் தீண்ட,

என் மூச்சுக் காற்று சரிந்ததடி.


கண்டதும் வீழ்ந்தேன் உன் விழியில்,

சகியே நீ எனை ஏற்பாயோ?


விழியோடு விழி சேர,

என் இதயம் உன்னோடு சேர்ந்ததடி.


கரங்கள் இரண்டும் கோர்த்து,

ஒன்றாய் செல்ல சம்மதம் தருவாயோ?


நாம் இருவர், நமக்கு இருவர்,

என்றும் இன்பமாய் வாழ சம்மதிப்பாயோ?


உன்னோடு நான், என்னோடு நீ,

ஒன்றாகும் நாள் எது தானோ?


சகியே! நாம் ஒன்றாகும் நாள் எது தானோ?

***************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top