போட்டி 5 # 2 - கண்டேன் கள்வனை
கண்டேன் அந்த கள்வனை
கண் இமைக்கும் நேரத்தினுள்....
கானகத்து காட்சியை கண்டது போல
களவு போனது என் மனம்....
பார்க்க துடித்தேன் -அவனோ தன்
பார்வையால் என்னை குருடாக்கினான்...
பேச துடித்த மனதிற்கும்
பூட்டு போட்டேன்...
வார்த்தைகளால் பேசுவதை விட
விழிகளின் பேச்சே எனக்கு பிடித்திருந்தது...
கனவிலேயே காதலித்த என்னவனை
காலச்சக்கரம் கண் முன் காட்டியது...
பரவசமடைந்த என் மனம் வானில்
பறக்க துவங்கியது...
என் பரவசம் இப்பாருலகம் எங்கும் பரவிட
கடிகாரத்தில்
பன்னிரண்டின் பாதத்தை ஜோடியாக தொட்டது அந்த காதல் ஜோடிகள்.
*********************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top