போட்டி 5 # 1 கண் கண்ட கண்ணாலன்
நான் பதியாக போகும் என் பாதி!
அவன் தானோ இனி என் கதி – என்று!
மதி இலக்க வைத்த காதல் எனும் சதி!
நானும் விழுந்தேன் – காதலில் விழுந்தேன்!
என்றும் அவன் அன்பில் கிறங்க விழுந்தேன்!
நான் கண்களால் பேசியதை,
அவன் காதல் கடிதம் பதில் கூறியதே!
நானும் எதிர்ப்பார்த்திருந்த அந்த ஒருநாள்,
என் வாழ்வை மாற்ற பிறந்த திருநாள்,
நடந்தேறியதே புத்தாண்டென்னும் நன்நாளில்.
***************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top