போட்டி 4 # 3 -அன்பை தேடி ஒரு பயணம்


கனவிலாவது ரதி அவள் வருவாள் என்று நீ தூங்க!

வருடா வருடம் உன் ஜோடி புறாவை தேடி ஏங்க!

வெறுமை சூழ்ந்த உன் வாழ்க்கையை மாற்றுமா 2017!

வா என்னிடம் ! என்று என்னை பார்த்து அவன் அழைத்ததும்!

துள்ளிக்கொண்டு மான் போல் அவன் முன் சென்று நின்றேன்!

ரிலாக்ஷ் ஆக மறுத்த என் மனம், ரிஷபம் என்று கூற!

ஆடை வாங்க சென்ற ஆண்களை போல் புலம்பி தள்ளினான் அவன்!

மென்பொருள் மேனியில் வேலை என்னும் மெழுகு பட! உடல் மெலிந்து

மேச ராசிக்கொண்ட மங்கை அவளை இவ்வருடம் காண்பாய்!

அன்பென்னும் காதல் ஏட்டில் உங்கள் வாழ்க்கை பயணம் எழுதப்பட!

சண்டை எனும் சாகசத்தை ஜாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவள்

சுற்றுவாள்!

இன்பமான வாழ்க்கையில் இன்னும் 6 மாதங்கள் கழித்து இருள் புகும்!

சண்டை இல்லா வாழ்வு, தொண்டையில் சிக்கிய மீன் போல் என உணரா நீ!

பூ போல் இருக்கும் அவள் மேல், புயல் காற்றாய் கோபத்தை வீச!

கோஷ்டி மோதலில் சிக்கிய கோழை போல் நிலைக்குழைந்து போவாள்!

ஆன்ட்ராய்ட் வெர்சன் கூட பலமுறை மாற்றப்படும் இவ்வுலகில்!

ஆயுள் முழுவதும் பாசம் மாறாமல் இருக்கும் ஒரு ஜீவன் அன்னை

மட்டுமே!

இதனை உணர மறுக்கும் நம் மனம், அவள் உயிர் பிரிந்த பின்பு உணருவது

நியாயமா தோழா!

பாசம் என்னும் அன்னை தந்த ஏட்டினை சிறுவயது முதலே படிக்காத நமக்கு!

காதலி மூட்டும் செல்ல சண்டைகள் கூட வலிக்க தான் செய்யும்!

வலிகள் ஏற்படுத்திய உடலில் போதை என்னும் பேதைமை புக!

ஊசியை ஏற்றிக்கொண்டு உடலை வறுத்திக்கொள்வாய் ஒரு நாள்!

துளைக்கொண்ட இடங்கள் துஷ்டனுக்கு துல்லியமாய் தெரிய!

அதில் விசா வாங்காமலே விதி புகுந்து விளையாட முயலும்!

கழற்றிவிடப்பட்ட காதலியால் மனம் கலங்கி போகும் உன்னை!

அன்னை அவள் உன் தலையில் தட்டி தாலாட்டு பாடி தூங்க வைக்க!

காதலியுடன் அமர்ந்து காபி சாப்பிட ஆசை கொண்ட உன் மனம்!

கருவறைக்குள் மீண்டும் சென்று புதிதாய் இவ்வுலகில் பிறந்து

அன்னைக்கு சேவை செய்ய அனுதினமும் ஆசை கொள்ளும்!

கண்கள் காணும் பல பெண்களிடம் உன் மனம் அன்பை காட்ட துடிக்க!

அன்னை ஆசையை அரேஞ்ச் மேரேஜ் எனும் வார்த்தையால்

நிறைவேற்றுவாய்!

ஜோதிடர் வார்த்தைகளை கேட்டு, இமைகள் இறுக நின்ற நான்!

என்னுடைய மனக்கண்களை மூடி ஆசை காதலியை மீண்டும் நினைக்க!

அன்னை அவள் என் கண் முன் தோன்றி நான் தான் உன் ஆசை காதலி

என்றாள்!!!!

ஆசை காதலியை நேசிப்போம்! அன்னையை சுவாசிப்போம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

******************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top