போட்டி 4 # 1 - எதிர்காலம்
வளமான எண்ணங்கள் அழகான எதிர்காலம் உருவாகும் சந்தோசம் மனதோடு உறவாடும், வருகின்ற நாளெல்லாம் எனதாகும்.
யார் செய்த அழகிய வீடு, அதன் மேல் பழகிய கூடு ஆங்காங்கே கவலையின் குறுக்கீடு தடுத்தாலும் பயணங்கள் துணிவோடு.
தினசரி வந்தது மாற்றம் திசைமாறி கொள்ளுது காற்றும். நாளைக்கு வழிவிடும் புதிது, புதிதாய் அரங்கேற்றம்.
நடந்தது எல்லாம் நினைத்ததுமில்லை, நடப்பதை நினைக்க வல்லமையில்லை.
வருவது எதுவோ ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை ரசித்திடக் கற்றுக்கொண்டேன்.
நாள்தோறும் வாழ்க்கையின் தேரோடும், காலத்து வீதிகள் இடம் மாற்றும் எங்கு, எப்பொழு குடை சாயும், எதிர் காலம் ஒன்றே தான் விடையாகும்.
உள்ளத்தால் சிலவேளை சிரித்து பல வேளை அழுதாலும் உதடுதள் என்றும் மகிழ்ச்சியோடுதான் கடந்து செல்கின்றன.
எதிர் கொள்ளும் ஒவ்வோரு நோடியும் எதிர்காகாலத்துக்கே....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
****************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top