போட்டி#3. 7 - நினைவால் இழந்த நிஜம்
அது ஒரு கண்டய்ன்மெண்ட் அறை. சுற்றுச் சுவரில் திரவங்கள் பூசப்பட்டு, அலுமினியம் டைட்டானியம் என்று ஆறு அடுக்குகளில் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. "கண்ட்ரோலிங் பிட்ச்" என்று அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. உள்ளே சென்றுவிட்டாள் மனிதன் கூட அந்த அறை சொல்கிறபடி தான் நடந்து கொள்ள வேண்டும். "என் பொண்டாட்டி கூட பரவால்லனு தோணவைச்சிருச்சு." என்று கிண்டல் செய்யவும் செய்தனர்.
அந்த கட்டுமானத்தில் அதிக செலவில் கட்டப்பட்ட ஒரே அறை அது தான். அதே போல் அந்த அறிவியல் தொழிற்கூடத்தில் பல முறை உபயோகிக்கப் பட்ட அறையும் அதுவாகத் தான் இருக்க முடியும்.
அன்று அந்த அறையின் விளக்குகள் சிவப்பு நிறத்தில் சுற்றிக் கொண்டு இருந்தது. டேஞ்சர் ஏரியா என்று சுட்டிக் காண்பிக்க அலாரத்தின் ஒளி வேறு காதை அறுத்துக் கொண்டிருந்தது. அந்த அறையுடன் இணைக்கப்பட்டிருந்த கன்ட்ரோல் ரூமில், வெள்ளைக் கோட்டும், மூக்குக் கண்ணாடியும் அணிந்த நடுத்தர வயதுள்ள மூன்று பேர் கணினியில் விரைவாக விசைப்பலகையை அழுத்திக் கொண்டிருந்தனர்.
"என்ன நடந்தது?" பரபரப்பாக விசாரித்துக் கொண்டு, கவலை தோய்ந்த முகத்துடன், ஒரு இளைஞன் அந்த கன்ட்ரோல் அறைக்குள்ளே நுழைந்தான்.
"ரகு, CEp4708 அன்ஸ்டேபிள் ஆகிடுச்சு. கண்டய்ன்மெண்ட்சாம்பர் எவ்ளோ நேரம் தங்கும்னு தெரில." அந்த மூன்று பேர்ல் ஒருவர் பரபரப்புடன் கூற, ரகுவிற்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள ஒரு நொடி கூட பிடிக்கவில்லை.
"எப்ப ஆரம்பிச்சுது?" மொட்டையாக கேட்டாலும், வேறொருவர் அதற்கு பதிலளித்தார்.
"பதிமூன்று நிமிடம், இருபது நொடிகள்." வேகமாக அவன் கை கடிகாரத்தை 13:20 என்று டைமர் மோடிற்கு மாற்றி அமைத்துக் கொண்டான்.
"வெப்ப நிலை (Temperature), இரசாயனக் கலவை (Chemical detergents), வளிமண்டல அழுத்தம் (atmospheric pressure) இன்னும் நாம் சோதனை செய்த அனைத்துக் காரணிகளையும் ஒன்று விடாமல் மாற்றம் செய்து பாருங்கள். நான் இதோ வருகிறேன்," என்று ஆணை பிறப்பித்து விட்டு விடுவிடுவென அவனது தனியறைக்குச் சென்றான்.
இது எப்படி சாத்தியம்? எல்லாம் நானே சரி பார்த்துத் தானே செய்தேன்? எந்த இடத்தில் தப்பு நடந்தது என்று தன்னை தானே பலமுறை கேட்டுக் கொண்டும் விடை தெரியாமல் தவித்தான். CEp4708-யுடன் சம்மந்தமான கோப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தான். அவன் தலையில் ஓடிக் கொண்டிருக்கும் கணித கணக்குப் படி இன்னும் பதினெட்டு நிமிடங்களில் CEp4708 திறந்துவிடும். அப்படி திறந்துவிட்டால்?... அவன் இதயம் படபடத்தது.
வெகுவேகமாக காகிதங்களைப் புரட்டினான். எந்த இடத்தில் தவறு நேர்ந்திருக்கும் என்று முடிந்தவரை ஆராய்ந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கை கடிகாரத்தைப் பார்க்க 23:38 என்று காண்பித்தது. குளிரூட்டி நன்றாகத் தான் வேலை செய்தது எனினும் அவன் நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்த்தன. என்ன செய்யப்போகிறராய்? என்று அவன் மனம் ஒரு புறம் அடித்துக் கொள்ள, கொஞ்சம் சிந்தித்துப் பார் என்று அவனது மூளை தூண்டியது.
'மனதை விட மூளையின் பேச்சைக் கேட்பவனே விஞ்ஞானி ஆக முடியும்' என்று ரகுவின் ஆசிரியராகவும், உத்வேகமாகவும் விளங்கிய prof. இராமச்சந்திரன் கூறிய வார்த்தைகள் அவன் நினைவிற்கு வர, கண்களை மூடி மூளையை ஆராய்ந்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன்...
அந்த நாள் ரகுவின் பொறுமையை சோதித்த நாள். CEp4708 மூலப் பொருளை வடிவமைக்க திட்டம் தீட்டிய நாள். ஆறு மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு, பெரும் அளவில் இராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் படுகின்ற ஒரு வெடிக்கும் இயல்புடைய ரசாயனக் கலவையை பயன்படுத்தலாம் என்று முடிவானது.
"HMTX-5-ல் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளது. அத நம்ம இதுல உபயோக்கிறது நல்லதா பாடலை." ராகுவுடன் வேலை செய்யும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் கூற, தான் அள்ளும் பகலும் தூங்காமல் தேர்ந்தெடுத்த விஷயத்தை இப்படி குறைகூறுகின்றனர் என்று அவனுக்கு எரிச்சல் வந்தது.
இதைப் பற்றிய விவாதம் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ரகு தன்னால் முடிந்த வரை அந்த மூவருக்கும் விளக்கிப் பார்த்தான். அவர்கள் மூவருமே சொல்லி வைத்தார் போல் வேண்டாம் என்றே பிடிவாதமாய் நின்றனர்.
இதற்கிடையே தன்னை வந்து சந்திக்குமாறு ரகுவின் மேலதிகாரியிடம் இருந்து தகவல் கிடைக்க, அவன் கோபத்துடன் விரைவாக, தொழிற்கூடத்தில் இருந்து தனித்திருக்கும் அவரது அலுவலகத்தை அடைந்தான்.
"சார்? கூப்டீங்களா?" கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி கேட்டான் ரகு.
ஆமாம் என்று அவர் அலைபேசியில் இருந்தபடியே சைகை செய்து உள்ளே அழைத்தார். இப்போது என்ன சொல்லப் போகிறார் என அவனது மூளை குடைய, மனமோ கொஞ்சம் பயந்துதான் போயிருந்தது. அவருக்கு எதிர் புறத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவர் அலைபேசியின் உரையாடலைத் துண்டிக்கும் வரை காத்திருந்தான்.
"ரகு, உன் ப்ராஜெக்ட் பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன். டிலே ஆகுதுன்னு ஸ்பான்ஸர் ஸ்டாப் பண்ணவானு கேக்குறாங்க. என்ன சொல்ல?" கடினமான குரலில் அவர் விசாரிக்க, இருந்த கோபம் பன்மடங்கானது.
"சார்... நான் சொல்றேன்னு கோவப்பட வேண்டாம். நம்ம அவங்களுக்காக தான் இந்த ஆராய்ச்சில இறங்குனோம். இது அழிவை ஏற்படுத்துற ஆராய்ச்சி. சும்மா எனோ தானோனு பண்ண முடியாது. கொஞ்சம் அவகாசம் குடுக்க சொல்லுங்க இல்லனா வேற ஆள பாத்துக்க சொல்லுங்க," என்று பொரிந்து தள்ளினான்.
"ரகு..." அவரை பேசவிடாமல் தடுத்தவன்...
எழுந்து நின்று, "எதுக்கு சார் இந்த ஆராய்ச்சியை நம்ம நாட்ல நடத்துறாங்க? அவங்க நாட்ல இல்லாத வசதியா? ஏன்னா அவங்க நாட்ல இது சட்டப்படி குற்றம். நம்ம நாடு மட்டும் இளிச்சவாயா? செஞ்சு குடுக்கிறதில்லாமா இவனுங்களுக்கு கூற கும்பிடு என்னால போடா முடியாது சார். ஐ ஆம் சாரி." சொல்லிவிட்டு அவர் பதிலைக் கேட்க கூட பொறுமை இழந்தவனாய், தொழிற்கூடத்தை நோக்கி நடந்தான்.
அங்கு வாக்குவாதம் அவன் செல்லும் வரை நடந்து கொண்டே இருந்தது. கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த கதவை முரட்டுத்தனமாகத் திறந்து உள்ளே நுழைய, மூவரும் அவனை ஏறெடுத்து நோக்கினர். சூடான எண்ணையில் விழுந்துவிட்ட கடுக்கைப் போல அவன் பொறிந்து கொண்டிருக்க, என்ன ஆனது என்று அவர்களும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, "HMTX-5-ஐ உபயோக படுத்தலாம்னு நான் முடிவு பன்னீட்டேன். சாரி ஜென்டில்மேன், நம்ம கால அவகாசம் ரொம்ப கம்மியா இருக்கு. இன்னும் இரண்டு வாரத்தில் நம்ம டெஸ்டிங் ஆரமிக்கணும். எல்லாரும் சேர்ந்து வேலை பார்ப்போம்" என்று அறிவித்துவிட்டு அவனுடைய அறைக்குச் சென்று வேலையில் மூழ்கினான்...
HMTX-5-ஐ பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு, தன் ஆராய்ச்சிக்கேற்ப அதைத் தானே வடிவமைத்தான். HTMX-ல் உள்ள -OH என்ற சக்திகுறைந்த பாண்ட், நுண்ணுயிர்களுடன் சேரும்போது, நிலையற்றதாக மாற வாய்ப்பு அதிகம் இருந்ததால், அந்த இடத்தை மாற்றவேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். சிறிது நேர ஆராய்ச்சிக்குப் பின் பாஸ்பேட் (phosphate) என்ற பாண்டைக் கொண்டு மாற்றி நிலைபெறச் செய்ய முடிவெடுத்தான்.
இதனை மற்ற மூவருக்கும் சொல்ல, அவர்களோ அரைகுறை மனதுடன் சம்மதித்தனர்.
இன்று...
கண்களை மூடி யோச்சித்த ரகுவிற்கு அவன் மூளை கோடிட்டுக் காட்டிவிட்டது. ஆம், அந்த பாண்டுகள் மாற்றப்பட்டத்தினால் தான் இந்த பிரச்சனை வந்த்துள்ளது என்று தெள்ளத் தெளிவாக அவனுக்குப் புரிந்தது. கை கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் ஒன்பது நிமிடத்திற்கும் குறைவாகவே அவகாசம் இருந்தது. என்ன செய்யலாம் என திட்டமிட்டான். அட்ரீனலின் அவன் உடம்பில் சுரக்க ஆரம்பிக்க அவன் சுறுசுறுப்பாக மூளையையும் கைகளையும் வேளையில் ஈடுபடுத்தினான்.
தீர்க்கமான முடிவுடன், கன்ட்ரோல் அறையின் கதவைத் திறந்து, இறுதியாக ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று வினவினான். அந்த சிவப்பு ஒளி அதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று நிரூபித்தாலும், பாழாய் போன மனதிற்கு நப்பாசையில் இருக்கத் தானே செய்கின்றது!
எந்த வழியும் இல்லை என்று நிரூபணமான பின், அவன் அந்த ஆணையைப் பிறப்பித்தான். மூவரும் அவன் சொல்லைக் கேட்டு கல்லாய் சமைந்தனர்.
"வேறு வழி இருக்கும், ரகு," என்று ஒருவர் கூற...
"பைரவா சார், நீங்க தான் அதுல இருக்க 'Crisola Ebinace' என்கிற வைரஸ மரபணு மாற்றம் செஞ்சு, உயிரியல் ஆயுதமா மாத்துனீங்க? கண்டய்ண்மெண்ட் சாம்பறால இந்த ஆயுதம் செயலிழந்திர கூடாதுனு தான் HMTX -5-அ சுற்றுப்புறத்துல வெடி பொருளா செஞ்சோம். இப்ப நிலையற்று இருக்க HMTX-அ நம்ம முறியடிக்கல, நம்ம நாடே அழிஞ்சிடும். நான் பண்ண தப்புக்கு நம்ம நாட பலிகொடுக்க நான் விரும்பல." மூவரின் முகங்களையும் பார்த்து கெஞ்சினான்.
"அந்த வைரஸ் வெளியே வந்தால் மனிதர்களின் தோலில் அமர்ந்து, பரவி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக நடைபிணமாக்கும். தோலில் புழுக்கள் வளர ஏதுவாய் வழி செய்து, அவைகளின் முட்டையை மனிதன் மீது வளரச் செய்யும். இரத்தம் வடிந்து வடிந்து இறுதியாக அவர்கள் இறப்பர். அதை விட கொடூரமான சாவு எங்கும் கேட்க முடியாது. இதை தடுக்க நான் ஒருவன் போனால் பரவா இல்லை." நெஞ்சுருக பேசினான். அதை கேட்ட அந்த மூவரும் அவனைக் காட்டித் தழுவி கண்ணீர் சிந்தினர்.
"அறிவியல் தெரிந்ததால் எதை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம் என்று வரை முறை இல்லாத நம்மைப் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்," என்று ஒருவர் கூற, நேரம் ஆகிவிட்டதென சைகை காண்பித்து, ரகு கண்டய்ண்மெண்ட் சாம்பரிடம் சென்றான்.
கதவு திறக்கப்பட்டது...
அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ, இது சரி தான் என்பதே, "ஆனால் சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே? இது சரி தானா?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அறிவியல் வாழ்க்கையில் முதன் முறையாக மனது சொல்வதையும் காது கொடுத்து கேட்டான். ஆனால் என பிரயோஜனம்? கால தாமதம் ஆகிவிட்டது.
விரைந்து சென்று CEp4708-ஐ அடைந்தான். வெளியே உள்ள HTMX-ஐ உள்ளே இருக்கும் வைரஸில் இருந்து பிரிக்க வேண்டும். செயல்பட துவங்கிவிட்ட அந்த ஆயுதம் அவன் கைகளை சுட்டெரித்தது. சில வினாடிகளில் அவன் விரல்களில் இரத்தம் சொட்டியது. அதை பொருட்படுத்தாமல் வேலை செய்தான். பிரித்து எடுத்தால், HTMX-ஐ செயலிழக்கச் செய்யலாம், ஆனால் அந்த வைரஸ் வெளியே வந்துவிடும். ஆதலால் அவன் உயிர் துறப்பது நிச்சயம்.
இரண்டையும் பிரித்தான். வைரஸ் அவனை தாக்கியது... கண்டய்ன்மெண்ட் சாம்பர் அதன் சுத்திகரிப்பை ஆரம்பித்தது. அவன் மீது படிந்துவிட்ட கிருமியையும் அவனுடன் சேர்த்து அளித்தது. செய்த தவறை திருத்திக் கொண்ட நிம்மதியுடன் அவன் வீழ்ந்தான்.
கண்டய்ன்மென்ட் அறையில் அடித்த அலாரம் நின்றது. சிவப்பு ஒளி அணைந்தது. இறுதியாக, சுத்தம் ஆகிவிட்டதென காட்ட, அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது. பின் மஞ்சள் நிறமானது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top