போட்டி#3. 5 - உயிர் காற்று
அந்த எட்டு மாடி கட்டிடம் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தபட்டு உள்ளமைப்புகளும் விஸ்தாரமாகவும் புதுவிதமாகவும் அமைந்து லன்டன் மாநகரத்தின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கும் படியிருந்தது.அந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனது அறையின் ஜன்னல் அருகே அரவிந்த் நின்று கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பான் என அவனுக்கே தெரியாது.பெருமூச்சடன் தன் கை கடிகாரத்தில் மணி பார்த்தான்.தனக்கு நேரமாவதை உணர்ந்தவன் பெட்டில்வீச பட்டிருந்த தனது செல்போனை எடுக்கும் போது அவனது அறையின் இன்டர்காமில் ரிசப்சனிஸ்ட் அழைத்து அவனை காண ஹுதய்ஃபா வந்திருப்பதாக கூற அவனை மேல அணுப்பும் படி கூறிவிட்டு பெட்டில் அமரந்தான்.
"எக்ஸ்க்யூஸ்மி சார்..மே ஐ கம் இன்.."
என்று குரல் மட்டும் கேட்க,
"டேய்..என்னடா இது எக்ஸ்க்யூஸ்லாம் கேட்டிகிட்டு வாடா.."
என்றான்.
"இல்ல சார்..நீங்க எவ்ளோ பெரிய ஆளு..எதாவது பிஸியான வேலைல இருப்பிங்க.."
"ஹுதய் இப்படியே பேசிடடிருந்த பல்லை உடைத்திடுவேன்..என்னடா ஆச்சு உனக்கு..."
"அதை நான் கேட்க வேண்டும்..உனக்கு என்னாச்சுடா ஏன் இப்படி இருக்க..ஒத்து கொள்கிறேன் நீ பெரிய விஞ்ஞானி தான்..உனக்கு வேலை தலைக்கும் இருக்கும் தான்..அதற்கென யாரிடமுமே பேசாமல் ஏன்டா இப்படி..அம்மா அப்பா எவ்ளோ கவலை படுகிறார்கள் தெரியுமா..?
அவர்களுக்கு எல்லா வசதியும் ஏற்படுத்தி வைத்தால் உன் கடமை முடிந்திடுமா..?
அட்லீச்ட் மாததிற்கு ஒருமுறையாவது போன் பேசினால் தான் என்ன..?அவ்வளவு ஏன் நானும் இதே லன்டனில் தான் வசிக்கிறேன்..ஆனால் உன்னிடம் கடைசியாக நான் பேசியே எவ்ளோ மாசம் ஆச்சு.."என்று படபடவென பொரிந்து தள்ளினான்.
"உனக்கு தான் தெரியுமில்ல நான் என் பிராஜெக்டில் ரொம்ப மும்முரமாக இருகிறேன் என்று..எங்களது பல நாள் கஷ்டத்திற்கு முடிவு வரபோகிறது..இந்த நிலையில் என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.."
"ஆமா எதாவது கேட்டால் இதை ஒன்று சொல்லிகொள்..அப்படி என்ன பிராஜக் எதை பற்றியது என்று கேட்டால் அது சொல்லமுடியாது சீக்றேட் மிஷன் என்பாய்..போடா கேட்டு கேட்டு அலுத்துவிட்டது....அப்படி யாரிடமும் சொல்லாமல் மறைக்கும் அளவிற்கு என்ன மிஷன்..டேய் எதாவது தப்பானதை கண்டு பிடிக்கிறியா...அந்த காலத்தில் அமேரிக்கென்ஸ் ஆட்டம் பாம் கண்டுபித்தது மாதிரி எதாவது.."என்று உணர்ச்சிவசபட்டு கேட்டு விட ஹுதயின் கண்களை நேராக பார்த்தவன்,
" 'அறிவையும் திறமையையும் ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமேயன்றி அழிவிற்கில்லை'
என்பது என் தாயும் தாய்நாடும் எனக்கு கற்று கொடுத்தது..உயிரே போனாலும் இந்த கொள்கையிலிருந்து நான் விலக மாட்டேன்.."என்று உறுதியாக அரவிந்த் கூற ஒரு நொடியில் தன் உயிர் நண்பனையே சந்தேகபட்டுவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியடைந்தான்.
"சாரி டா.."என்றவனை தோழோடு அணைத்தவன் "இப்ப உனக்கு நான் என்ன பிராஜெக்ட் பண்றேன் என்று தானே தெரிய வேண்டும்...சொல்றேன்.."
என்றான்.
"SF5CF3 யோட தொழில்துறை மூலப்பொருள் எதுவென கண்டுபிடிப்பது தான் என் கான்செப்ட்.."
"SF5CF3னா..? கொஞ்சம் விரிவாக சொல்லுடா.."
"Trifluromethyl sulphur penta fluoride.."என்று அரவிந்த் கூறியதும் அவனை முறைத்தவன் "நான் கிளம்புறேன்.."என்று போக
"ஹுதய்..ஹுதய்..நில்லு.."
என்று சிரித்துகொண்டே அவனை பிடித்து நிறுத்தியவன் "நான் லேப்பிற்கு தான் இப்பொழுது போறேன்..நீயும் வா..."
என்றான்.பின் இருவரும் கிளம்பி அரவிந்த் காரில் ஏறிகொள்ள வண்டி கிளம்பியது.
அரவிந்த் ஒரு வளர்ந்து வரும் இளம் விஞ்ஞானி..அவனது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அவனுக்கு உலகளவில் மேலும் மேலும் புகழ் சேர்த்தது.
"ஹுதய் நீ இந்த புவி சூடாதல் (Global warming), பசுமை குடில் விளைவு (green house effect) பற்றிய விழிப்புணர்வு நிறைய படித்திருப்பாய்...
கேள்விபட்டிருப்பாய் அல்லவா..?"
"அரைக்குறையாக தெரியும்..கொஞ்சம் அதை பற்றியும் சொல்லேன்.."
"ம்ம்ம்... கார்பன் டைய் ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட்,கார்பன் மோனாக்ஸ்சைட் போன்ற பசுமை குடில் வாயுகள் நம்ம வளிமண்டலத்தில் இருக்கும்.இந்த வாயுகள் தான் உலகத்த ரொம்ப சூடாகாமலும் ரொம்ப குளிர்ச்சியாகாமவும் பார்த்து கொள்ளும்..ஆனால் மனுஷங்க நம்மளோட வேலையால அந்த கேஸ்லாம் ரொம்ப அதிகமாகவும் வலிமையாகவும் ஆயிடுச்சு..Example க்கு கார்பன்மோனாக் ஸ்சைட் நம்ம வாகனங்களால் அதிகரிக்கும், மீதேன்,CFC போன்றவை எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளால்,குளிரூட்டு பெட்டிகளால் அதிகரிகிறது.அதனால் பனிகட்டிகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் இதனால் தான் அடிகடி புயல் வருவது,கடல் கொந்தளிப்பது எல்லாம்..நாம பாட்டுக்கு குப்பை தொட்டில் கொட்டுவதுபோல் எல்லா நச்சு கற்றையும் வானில் விட்டு விடுகிறோம்..அது நமக்கே பதகமாய் அமைக்கிறது..."
என்று அரவிந்த் கூற ஹுதய்ஃபாவிற்கு அதன் சீரியஸ்னஸ் என்னவென புரிந்தது..
கார் லேபின் முன் நிற்க இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்.அந்த லேபிற்குள் நுழைந்ததும் அதன் உள்ளமைப்பை பார்த்து பிரம்மித்து நின்றான்.அங்கு இருப்போர் எல்லோரும் அரவிந்தை பார்த்தது மரியாதை நிமிர்த்தமாக எழுந்து நிற்க உட்காரும் படி கையதைத்தான்.நடந்துகொண்டே அரவிந்த் தன் பேச்சை தொடர்ந்தான்.
"இந்த நிலையில் அந்த பசுமை குடில் வாயுகளில் புதியதாக கண்டறியபட்ட வாயு தான் SF5CF3...மற்ற வாயுகளாகிய மீதேன்,நைட்ரஸ் ஆக்சைட் போன்றவையெல்லாம் 20-300 மடங்கு தான் Co2 வைவிட வலிமையானது ஆனால் SF5CF3 18,000 மடங்கு co2 வை விட வலிமையானது.மேலும் அது வளிமண்டலத்தில் 800 ஆண்டுகளுக்கு இருக்கும்..SF5CF3 வாயு கொஞ்சம் அதிகரித்தாலே உலகில் பல இடங்கள்,நாடுகள் அழிந்துவிடும்..."
"அப்போ அந்த SF5CF3 வெளியாகாமல் தடுக்கலாமில்லையா..?"
"அங்க தான்டா பிரச்சனையே...அந்த கேஸ் எதிலிருந்து வருகிறதென யாரலும் கண்டு பிடிக்க முடியவில்லை..அது எக்ஸ்ட்டீரீம் ஆவதற்குள் அதன் தொழில்துறை மூலத்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்..இதை தான் நானும் ஆராய்ச்சி செய்கிறேன்..."
"நல்ல விஷயம் தானே இதையேன் வெளியே சொல்லாமல் மறைக்கிறாய்.."
"இரு சொல்றேன்.. "
என்றவன் லேப்பில் அணிவதற்கான வெள்ளை கோட், இதற பொருட்கள் எல்லாம் அணிந்து கொண்டான்.
"ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒவ்வொரு விதத்தில் யூக்கின்றனர்.அதில் சிலர் இராணுவ உபகாரணங்களில் பயன்படுத்தும் இரகசிய வாயுகளால் என்று யூக்கின்றனர்..இதை மூலமாக கொண்டு நான் ஆராய்ச்சி செய்தேன்.அதன் விளைவாக ஒரு Formula நான் கண்டுபிடித்துள்ளேன்.என் கணிப்பு சரியாக இருந்தால் அந்த இராணுவ உபகாரணங்களில் பயன்படும் வாயுவில் SF5CF3 இருந்தால் இந்த FORMULAஒட ரியாக்டாகும்..ஆனால் அந்த இராணுவ உபகாரணங்களை என்னை ஆராய்ச்சி செய்ய லன்டன் Government அணுமதிக்க மாடேங்கின்றனர்.அவர்கள் இராணுவ ரகசியத்தை அந்நியர்கள் அறிய அணுமதி இல்லையாம். இதற்காக தான் இத்தனை ஆண்டுகள் நான் போராடினேன்.இப்பொழுது தான் இறுதியாக ஐநா சபையின் உத்தரவின் பேரில் எனக்கு அணுமதி கிடைத்துள்ளது.ஆனால் இரண்டு கட்டளைகளுக்கு உட்பட்டு..
1.இந்த ஆராய்ச்சி முடியும் வரை இதை பற்றிய தகவல்கள் உடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியக்கூடாது.அதனால் தான் நான் உங்களிடம் கூட சொல்லவில்லை.
2. அப்படி என் பிராஜ்கட் தோல்வியடைந்தால் லன்டன் கவர்மெண்ட்டை சோதனை புரிந்தற்காக இனி என்னை இங்கு எந்த ஆராய்ச்சியும் செய்ய அணுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் வெற்றியடைந்தால் அவற்றை தடை செய்து உலகை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிவிடலாம்..என் விதி மூன்றுமுறை என் ஆய்வு தோல்வியடைந்துவிட்டது.இன்று கடைசி முயற்சி இந்த முறையும் தோல்வியடைந்தால் விஷயம் கவர்மெண்டிற்கு போயிவிடும்..எங்கள் பல நாள் கஷ்டம் எல்லாம் விணாகி விடும்.."என்று அரவிந்த் சொல்லி முடிக்க "கவலை படாதேடா எல்லாம் நன்றாகவே முடியும்.."என்றான் ஹுதய்.
அப்போது அரவிந்தின் அஸ்ஸிஸ்டன் ஸ்டூவட் வந்து எல்லாம் தாயார் என்று தெரிவித்தான்.
"சரி ஹுதய் நீ இங்கேயே இரு..நான் போயிட்டு வருகிறேன்.."என்று கூறி ஸ்டூவடுடன் சோதனை நடைபெறும் கூடத்தை நோக்கி சென்றனர்.
இருவரும் முகத்தில் மாச்க் அணிந்துகொள்ள பின் அந்த அறையில் நுழைந்தனர்.அங்கு எல்லாம் சரியாக ஏற்பாடு செய்திருப்பதாக தம்ஸ்சப் காட்டினான் ஸ்டூவட்.
அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே..ஆனால் இது சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே..இது சரி தானா..?என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் அரவிந்த்.
இருவரும் அங்கிருந்து வெளியேறியதும்
"ஏதோ தவறு என்று தோன்றுகிறது ஸ்டூவட்.."
என்றான்.
"இல்லையே சார்..சரியாக தானே தயார் செய்திருந்தோம்.."
"இல்லை..நான் மீண்டும் டெஸ்ட் செய்ய வேண்டும்..வா.."என்று வேறு ஆராய்ச்சி கூடத்தில் அந்த சோதனையறையில் புகுத்த பட்டிருந்த வாயுவின் சேம்பிள்ளை ஆராய்ந்து பார்த்தான்.அப்பொழுது அதில் ஒரு முக்கியமான ரசாயணத்தை சேர்கவில்லை என்பதை கண்டுபிடித்தவன் அதை ஸ்டூவடிடம் காட்ட அவனும் ஆமாம் என்று ஒத்துகொண்டான்.
பின் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அந்த அறைக்குள் புகுத்தினர்.அதன் பின் அனைவரும் ஹுதய் இருந்த அறைக்கு வர அவன் என்ன ஆயிற்று என்பதுபோல் அரவிந்தை பார்த்தான்.
"இங்கேர்ந்து தான் ரிசல்ட்டை பார்க்க முடியும்" என்றவன் அங்கு சுவற்றில் மாட்டபற்றிருந்த LED டிவியை ஆன் செய்ய அந்த சோதனை கூடம் திரையில் வந்தது.
"அங்கே நடுவில் ஒரு கண்டைனர் இருகிறது பார்.அதில் தான் அந்த இராணுவத்தில் பயன்படுத்தும் வாயுகள் உள்ளது.அந்த அறை முழுதும் நான் கண்டுபிடித்த Formula வில் உள்ள வாயு புகுத்தபட்டுள்ளது.நான் இப்போது இந்த Button ஐ ஆன் செய்தால் அந்த கண்டைனர் திறக்கும்.அந்த வாயுவில் SF5CF3 இருந்தால் அறையில் உள்ள வாயுவோடு ரியக்ட்டாகி ஒரு நிமிடத்தில் அறையில் நிறம் மாற்றத்தை தரும்..அதில் SF5CF3 இன் அளவு குறைவாக இருந்தால் சிவப்பு நிறமாகவும் மிக்க அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறமாகவும் மாறும்.விச்மீன்ஸ் மிஷின் சக்சஸ்
ஒருவேளை அதில் SF5CF3 இல்லையெனில் எந்த நிறமாற்றமும் ஏற்படாமல் வெறும் புகை மூட்டம் மற்றுமே இருக்கும்..."என்று கூற, ஹுதய் புரிகிறிது என்று தலையசைத்தான்.
ஒரு பெருமூச்சிற்கு பின் உறுதியுடன் அந்த Button ஐ அலுத்த Count down 60,59,58.... என்று ஓட துவங்கியது.ஒவ்வொரு நொடிக்கும் அங்குள்ள எல்லாரின் இதயமும் வேகமாக துடித்தது.
5,4,3,2,1......
அனைவரும் ஆர்வத்தோடும் எதிர்பார்போடும் திரையை நோக்க,
அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது,பின் மஞ்சள் நிறமானது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top