போட்டி#3. 2 - மயிரால் நேர்ந்த மரணம

தஞ்சாவூர், ஆகஸ்ட் 15, 2034

மாலை 5 மணி

கிருபாகரன் ஒரு குடிசையில் படுத்த படுக்கையில் கிடக்க, அவர் மகன் திருநிறைசெல்வன் கோபமாக வீட்டின் உள்ளே நுழைந்தான். வீடு முழுவதும் குப்பையாக குவிந்து கிடக்க! அந்த குப்பைகளின் நடுவில் மூச்சு விடக்கூட சிரமம் கொண்ட ஒருவராய் படுத்திருந்தார் கிருபாகரன்.

கிருபாகரன் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். எந்த ஒரு பொருளை அவர் உற்று நோக்கினாலும் போதும், அதனை வேரு எப்படியெல்லாம் புது விதமாக பயன்படுத்தலாம் என்று யோசிக்க தொடங்கி விடுவார்.

ஒரு வாரத்திற்கு முன்பு,

இந்த முறை அவரது ஆராய்ச்சி, ஒரு தேனீர் சுடு குவளை .(FLASK) வைத்து பூமியின் ஆழத்தை கணக்கிடுவது. அதுவே வினை(ய்)யாக இப்பொழுது கட்டிலில் முடங்கி கிடக்கிறார் கிருபாகரன். தேனீர் குவளையை வேறு எவ்வாரெல்லாம் புதிதாக பயன்படுத்தலாம் என்று யோசித்த கிருபாகரன்., ஒரு புது யுத்தியை கையாள ஆரம்பித்தான்.

கிருபாகரனின் அறிவியல் ஆராய்ச்சிக்கு எந்த ஒரு பண ரீதீயான ஆறுதல்களும் கிடைக்கவில்லை. அதனால் தனக்கென்று ஒரு குடிசையை போட்டுக்கொண்டு அறிவியல் ஆராய்ச்சிகளை செய்தார். ஆம், அவர் மகனும் அவன் மனைவியும் கிருபாகரனை துச்சயமாய் நினைத்து உதறிவிட, கிருபா அந்த குடிசையிலே தஞ்சம் அடைந்தார்.

அவர் எந்த ஒரு பொருளை பற்றிய புது ஆராய்ச்சியை தொடங்கினாலும் சரி, அந்த குடிசையில் ஒரு பூஜையை போட்டு தான் ஆரம்பிப்பார். அந்த குடிசைக்கு அருகில் ஒரு மயான கரையும் உள்ளது. அந்த தேனீர் சுடு குவளை ஆராய்ச்சியை தொடங்கினார் கிருபாகரன். முன்பே அதற்கான ஒரு திட்டத்தையும் வடிவமைத்திருந்தார்.

அந்த சுடுகுவளையை பூமிக்கடியில் புதைக்க வேண்டும். அதன் அடியில் ஒரு துளை ஒன்று போட வேண்டும். பின் வேதி பொருள்களை ஊற்ற வேண்டும். அந்த வேதி போருள்கள் ஒன்றோடு ஒன்று வேதி வினை புரிந்து பின்! அது பூமியின் நிலத்தடியை பிளந்து கொண்டு உள்ளே செல்லும். இதனால் பூமியின் மேலே இருந்துக்கொண்டே தண்ணீர் எவ்வளவு தூரம் வரை இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம் மீட்டர் மூலம் என்ற ஒரு தீய செயலுக்கு துணை சென்றார் கிருபாகரன்.

ஆம், திறமையை கண்டுக்கொள்ளாத நம் சமூகத்தின் ஒரு பகுதி பணக்காரர்கள், கிருபாகரனின் உதவியோடு தண்ணீர் அளவை தெரிந்துக்கொண்டு அந்த இடத்தை நவீனமயமாக்க திட்டமிட்டனர். கிருபாகரன் பணத்திற்கு விலை போனான்.

பூஜையை போட்டு வெற்றிகரமாக தொடங்க முதலில் அந்த தேனீர் சுடு குவளையில் பாலை ஊற்றினான். மனலை லேசாக தோண்டிக்கொண்டு வைத்து அந்த குவளையின் அடியில் துளை ஒன்றினை போட்டான். அப்பொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு முடி அந்த பள்ளத்தில் உள்ள குவளையில் விழ! ஊற்றிய பாலோ! கீழே ஓடியது. அந்த முடிமட்டும் குவளையில் ஒட்டிக்கொண்டு தங்கியது.

இரவு 12 மணி,

கிருபாகரன் ந்ன்றாக தூங்கிக்கொண்டிருக்க! அந்த இடத்தை யாரோ ஒருவர் தோண்டுவது போன்ற ஒரு கனவு வர வெளியில் வந்து அந்த இடத்தை பார்த்தார் அவர்.

அந்த துளையின் அருகில் கிருபா செல்ல, தேங்கிய முடி மெல்ல வெளியே வந்து அவர் கழுத்தை பிடித்து இறுக்கியது. கிருபாகரன் மூச்சு திணறி போனார்.

திடிரென்று அவரை அந்த தேனீர் சுடுகுவளை உள்ளே இழுக்க, மறைந்து போனார் கிருபாகரன்.

அவர் நடந்து செல்ல! எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளை வண்ணமாக இருந்தது. நிறைய பேர் கையில் ஏறுடனும் கலப்பையுடனும் செல்ல, கிருபாகரனுக்கு என்ன இடமென்றே தெரியவில்லை. ஆனால், தன் தோழன் சுப்பையாவை கண்டவுடன் பெரும் அதிர்ச்சி கிருபாவிற்கு. காரணம், சுப்பையா இறந்து ஒரு வருடம் மேல் ஆகிறது. கிருபாகரனை கண்ட சுப்பையா., நண்பா! நீ எங்கு இங்கே?? எப்படி இருக்கிறாய். பாழாய் போன பணம், உன் உயிரையும் காவு வாங்கிவிட்டதா என்றான். கிருபாகரனிற்கு ஒரே குழப்பம் தான். நண்பா! நீ இங்கேயே இரு அந்த கதவை மட்டும் திறந்துவிடாதே. நான் உன்னை அப்புறம் சந்திக்கிறேன் தோழா என்று புறப்பட்டான் சுப்பையா.

கிருபாகரனுக்கு ஆர்வம் அதிகரிக்க, அந்த கதவை திறந்து பார்க்க வேண்டும் என்று ஆசைக்கொண்டான். சுப்பையா சொன்ன ஒன்றினை மீறி உள்ளே சென்றான். "அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்கு தோன்றியதோ இது சரி தான் என்பதே "ஆனால் சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே? இது சரி தானா?" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கிருபாகரன்.

அப்பொழுது, எங்கிருந்தோ வந்த ஒரு கத்தி அவன் மேல் வேகமாக பாய, அந்த அறையைவிட்டு வெளியேறினான் கிருபாகரன். அவன் சுடு குவளையை புதைத்து வைத்த இடத்திற்கே மீண்டும் வந்தான். கத்திக்குத்தினை தாங்க முடியாமல் கீழே புரண்டுக்கொண்டு தவித்தான்.

இன்று,

திருநிறைசெல்வன் தன் தந்தை கிருபாகரனை நெருங்கி வந்தான். அப்பா! உன் உயிர் போவதற்குள்! என் பெயருக்கு சொத்தை மாற்று என்றான். அப்படியே மனமுடைந்து போனார் கிருபாகரன். இவ்வளவு நாட்களாக மனைவியின் பேச்சை கேட்டு தான் இப்படி நடந்தாய் என்று நான் நினைத்தேன். ஆனால், என் கண் முன்னே இதயத்தை காயப்படுத்திவிட்டாய். உன்னை ஒரு நல்ல மகனாக மாற்றவில்லை என்றால்! நான் உனக்கு ஒரு நல்ல தகப்பனே கிடையாது திரு என்று எண்ணிக்கொண்டு! அவனை அருகில் அழைத்தார்.

உன் பெயரில் உயில் மாற்றப்பட்டுவிட்டது திரு. அது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று இந்த குடிசைக்கு வெளியில் உள்ள ஒரு துளையில் வைத்துள்ளேன். நீ சென்று எடுக்கும் முன் அந்த வேதி பொருளை கையில் எடுத்துக்கொள் என்று ஒரு பாட்டிலை காண்பித்தார் கிருபாகரன்.

அதனை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் திருநிறைசெல்வன். அவன் அங்கு சென்று அந்த துளையில் இருந்த தேனீர் சுடு குவளையில் வேதி பொருளை ஊற்ற! பொங்கிக்கொண்டு வந்த அந்த மயிர் அவனை பிடித்து உள்ளே இழுத்தது.

திருநிறைசெல்வன் உள்ளே நுழைய, அவனை சுற்றி லேசான இருள் எங்கும் காணப்பட்டது. உடம்பில் துணிகள் கூட இல்லாமல் இருந்த ஏழைகள் ஏறுடன் செல்ல! அவர்களை ஒரு அடிமையை போல் நடத்திக்கொண்டிருந்தனர் சிலர். அப்பொழுது, திருநிறைசெல்வனை பார்த்து ஒருவன், இங்கு ஏன் வந்தாய். உனக்கும் உன் தந்தைக்கும் இப்பொழுது நிம்மதியா. எங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க! பணக்காரர்கள் திட்டமிட்ட ஒன்றை நான் பார்த்தேன் என்று என்னை 2 நாட்களுக்கு முன் கொன்று இங்கே அனுப்பிவிட்டார்கள். மண்ணுலகை விட்டு விண்ணுலகம் வந்தாலும் இந்த பணம் வைத்துள்ளவர்கள் ஆதிக்கம் அடங்கவில்லை.

இங்கும் நிம்மதி இல்லாமல் நான் தவிக்கிறேன். நீயும் வந்துவிட்டாயா. எங்கு உன் தந்தை. எங்கு சென்றாலும் எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டீர்களா என்று அழுதார்.

அவன் சோகமான முகத்தை வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அப்பொழுது, தம்பி! நீ யாருப்பா என்றார் ஒருவர். அப்படியே அமைதியாக நின்றான் திரு. நீ அப்படியே கிருபாகரன் போல் இருக்கிறாயே என்றார். என் தந்தை பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் என்றான் திருநிறைசெல்வன். என்ன நீ என் பேரனா?? என்று ஆச்சரியமாக கேட்டார். பின் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து பேச தொடங்கினார்கள்.

கிருபாகரனை பற்றி திருவிற்கு தெரியாத பல உண்மைகளை கூறினார் இறந்து போன திருவின் தாத்தா முனுசாமி. முதலில் விவசாயம் செய்த தன் மகன், அறிவியல் ஆராச்சியிலும் பெரும் திறமை உள்ளவன் என்றார். விவசாயத்தை வளர்க்க! ஒரு புது கண்டுபிடிப்பு கண்டுபிடிக்க! எங்கள் நிலத்தை பிடுங்கி அவனை சுய நலமிக்க ஒருவனாக மாற்றினான் ஒரு பணக்காரன். அவன் பெயர் சம்பத். அவனிடம் நம் நிலத்தை காப்பாற்றப் போராடி தோற்றேன். பின் என் உயிரை ஒரு முழம் கயிற்றில் முடித்துக்கொண்டேன் என்று கூற! தன் தந்தையின் நிலையை நினைத்து திருநிறைசெல்வன் கண்கள் கலங்கின.

தாத்தா என் தந்தையை பார்க்க வேண்டும்! நான் எப்படி இவ்விடத்தை விட்டு செல்வது என்று தெரிந்துக்கொண்டு வெளியேறினான் திருநிறைசெல்வன். வீட்டிற்கு வந்தான்

கிருபாவின் கால்களை பிடித்து கதறினான். தன் மாளிகை போன்ற வீட்டையே விற்க துணிந்தான் அவன், தன் தந்தையை காப்பாற்ற போராடினான். தன் நண்பன் விக்னேஷையும் துணைக்கு கூட்டிக்கொண்டான் திருநிறைசெல்வன்

கிருபாகரனின் ஆசையை நிறைவேற்றினால் கண்டிப்பாக அவர் உயிர் பிழைப்பார் என்று ஒரு நிமிடம் எண்ணிய திருநிறைசெல்வன்! சம்பத்தை தேடி புறப்பட்டான். அவனிடம் சென்ற திரு! பின் மறைந்துக்கொண்டான். தன் நண்பனை பார்த்து! மச்சான் என் வீட்டிற்கு அருகில் ஏதோ புதையல் இருப்பது போல் தெரிகிறது. நாம் இருவரும் இன்னும் 2 நாட்களில் அந்த இடத்தை தோண்டி அந்த புதையலை எடுத்துவிட வேண்டும் என்று சம்பத்திற்கு கேட்பது போல் பேச! சம்பத் மனம் மகிழ்ச்சியில் பொங்கியது. இன்று இரவே அந்த இடத்திற்கு சென்று புதையலை எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான் சம்பத்.

திருநிறைசெல்வன் நினைத்த ஒன்றும் அதுவே!

அன்று இரவு,

சம்பத் கிருபா இருக்கும் இடத்திற்கு வந்து திரு கூறிய அடையாளங்களை கொண்ட அந்த இடத்திற்குள் கையைவிட! ஏற்கனவே அதில் படிந்திருந்த வேதி பொருள் அவனை லேசாக இழுக்க! அந்த மயிர் மீண்டும் அவனை உள்ளே இழுத்தது.

திருநிறைசெல்வன் சம்பத் வீட்டிற்கு தெரியாமல் சென்று பீரோலை ஆராய்ந்தான். அதில் பல விவசாயிகளின் பத்திரம் இருந்தது. எவ்வளவு பேரின் வியர்வையை இவன் சுரண்டியுள்ளான் என்று கோபம் கொண்ட திருநிறைசெல்வன், பத்திரத்தை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு புறப்பட்டான்.

விண்ணுலகத்தில்,

சம்பத்தின் தலையில் ஒருவன் ஓங்கி அடித்தான். என் உயிரை வாங்கிவிட்டாய் அல்லவா. 2 நாட்கள் முன்பு என் உயிரை இந்த விண்ணுலகத்திற்கு அற்பணித்துவிட்டேன் உன்னால். நீயும் இங்கேயே இருந்துவிடு என்று மறுபடியும் ஓங்கி அடித்தான் வினய்.

(இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு இளம் விவசாயியின் பெயர். திருநிறைசெல்வனிடம் ஆதங்கமாய் பேசியவன்)

பத்திரத்தை எடுத்துக்கொண்டு திருநிறைசெல்வன் வீட்டிற்கு வர! ஒரு உருவம், அந்த புதைத்த இடத்தில் இருந்த ஒரு தேனீர் சுடு குவளையை வெளியில் எடுத்து அந்த மயிரை கையில் எடுத்துக்கொண்டு குவளையை தூக்கிவீசிவிட்டு மெல்ல நகர்ந்தது.

அந்த உருவத்தை பின் தொடர்ந்தான் திரு. அது சரியாக சென்று வினய் இறந்த இடத்தில் மறைந்தது.

விண்ணுலகத்தில்,

சம்பத் பல விவசாயிகளின் கையால் அடி வாங்க, அந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பு நிறமாய் மாறியது.

சம்பத் தான் செய்த தவறுகளை எண்ணி உயிருக்கு போராட! அப்பொழுது ஒரு கதவு அவனுக்காக திறந்தது. ஆம், அது தான் நரகம். வா என்று அவனை எமன் அழைக்க! அப்பொழுது அந்த சிவப்பு நிற அறை மீண்டும் மஞ்சளாக மாறியது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top