போட்டி#3. 11 - மரணத்தின் பின்னால்
காடு மேடெல்லாம் கட்டிடங்களாய்ப் போக உலகமே எந்திர மயமாகி போட்டியாளர்களால் சூழ்ந்து நிற்கும் இந்த நிலையில்.
வளரும் நாடுகளும் வல்லரசு நாடுகளும் எதிர்காலம் பற்றிய ஆராய்ச்சியை முடுக்கி விட்டுள்ள காலகட்டம்.
ஒவ்வொரு தேசமும் ஏதோ ஓர் துறையில் புதிதோர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி தம் நாட்டின் பெருமையையும், வலிமையையும் உலகுக்கு உணர்த்தும் முனைப்போடு இருந்தன.
வல்லரசு நாடுகள் பல வளர்ந்து வரும் தேசங்களில் உள்ள மக்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலான பொருட்களை உணவு, மருந்து மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மக்களிடம் சந்தைப் படுத்தி அதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தன.
அதுபோன்ற தாக்குதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுடன் தம் நாட்டு மக்களின் வாழ்நாளை நீட்டிக்கவும் முடிந்த வரை மரணத்தை வெல்லும் கண்டுபிடிப்பை நிகழ்த்தும் ஆராய்ச்சியில் தம் சொந்த நாட்டிற்காக ஏழு பேர் கொண்ட குழுவில் ஒருவனாய் ஜீவானந்தம் பணியாற்றிக் கொண்டிந்தான்
ஜீவானந்தம், தன் சிறுவயதிலேயே தாய் இறந்து போக தந்தை மறுமணம் செய்து கொண்டு ஜீவாவை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு விட்டு சென்றுவிட்டார்.
அன்றிலிருந்து தனிமையும், மனதில் வெறுமையும் குடியேறி சோகமே உருவாய் வாழ்ந்து கொண்டிருந்தான்
ஆனால் என்னவோ படிப்பில் மட்டும் ஆர்வம் கொண்டிருந்தவன் பின்னால் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளனாக நாற்பது வயதைக் கடந்து இரு குழந்தைகளுக்கு தகப்பனாகியிருந்தான்.
தற்போது, மரணத்தை வெல்லும் அல்லது தள்ளிப் போடும் வகையிலான மருந்தைக் கண்டுபிடிப்பதே அவன் சார்ந்த அந்த ஏழு பேர் கொண்ட குழுவின் வேலை. ஆனால் ஜீவாவிற்க்கு அதையும் தாண்டியொரு படி மேலே சென்று "மரணத்தின் பின்னால்" என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதைத் தம் வாழ்நாள் இலட்சியமாக வைத்திருந்தான்.
அதன்படி ஒரு சில உயிரினங்களைத் தேர்வு செய்து அவற்றின் உயிர் வாழ்வதற்குத் தேவையான முக்கிய உறுப்புக்களின் மாதிரிகளைச் சேகரித்துப் பதப்படுத்தி அவை எந்த மாதிரியான சூழ்நிலைகளில் தம் செயல்பாட்டை நிறத்துகின்றன எனும் புள்ளிவிவரங்களையும் மேலும் உயிரிழந்தவற்றின் உடலில் பெறப்பட்ட மாதிரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கும் மருந்தை கண்டறிந்து கொண்டிருந்தனர்.
இதையறிந்த வல்லரசு நாடொன்றின் உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆராய்ச்சியின் முழு விபரங்களையும் அறிய தன் நாட்டிலுள்ள உலகப்புகழ் பெற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் ஜீவாவை தொடர்பு கொண்டு
"ஜீவா உங்களோட திறமையை கண்டு எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு."
நீங்க எங்களோட நிறுவனத்தில் உங்க ஆராய்ச்சியை மேற்கொண்டால் உங்களுக்குத் பெரும் தொகையை பரிசாக அளிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஜீவாவை விலைபேசினர்.
உங்கள் முடிவை மறுநாள் காலையில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று கூறி முடித்தனர்.
இரவில் மனக்குழப்பத்தோடு தன் அறைக்குச் சென்றான்.
அந்த அறையில் நுழைந்ததும் இவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே. ஆனால் சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே ?? இது சரி தானா ?? என்று மனதும், பேராசையும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
இறுதியில் அந்த நிறுவத்தோடு கை கோர்த்து தம் ஆராய்ச்சி சார்ந்த விபரங்களையும் பகிர்ந்து கொண்டு குடுமபத்தோடு தம் நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறினான்.
இதையறிந்த அரசு அவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் அவனை தேடி வந்தது.
ஆராய்ச்சியைத் தொடரும் முன் தன் வாழ்நாள் இலட்சியமான மரணத்திற்குப் பின்னால் நடப்பதை ஆராய எனக்கு உதவினால் மட்டுமே நான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்றான்.
முதலில் முரண்டு பிடித்த அந்த நிறுவனம் பிறகு இருமனதாக ஒப்புக்கொண்டது.
இரண்டு ஆராய்ச்சியையும் ஒரு சேர தொடர்ந்து வந்தான் ஜீவானந்தம் இறுதியில் மரணத்தை வெல்லும் மருந்தைக் கண்டறியும் பார்முலாவையும், மரணத்தின் பின்னால் நடப்பதை அறிய உதவும் கருவியையும் உருவாக்கியிருந்தான்.
முதலில் தன்னுடைய கருவியை சோதிக்க வேண்டும் எனவும். அதை வைத்தே செய்ய வேண்டுமெனவும் கூற அந்நிறுவனமும் ஏற்றுக் கொண்டது.
நான் அந்த படுக்கையில் படுத்துக் கொள்வேன் உங்களில் ஒருவர்
அந்தக் கருவியை ஆன் செய்து விடுங்கள். என்னுடைய ஆன்மாவை அது பிரித்தெடுத்து பின் நடப்பதை என் மூலையில் பதிவு செய்துவிடும் பின்னர் மீண்டும் என் ஆன்மா உடலில் இணைந்துவிடும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள பச்சை நிற லைட் எறியும் என்றும் அதுவரை வேறெந்த பொத்தான்களையும் அழுத்த வேண்டாமெனவும் கூறி கருவியை இயக்கும் விதத்தையும் விளக்கி படுக்கையில் படுத்தான்.
ஆன் செய்யப்பட்ட கருவி ஜீவாவின் ஆன்மாவை பிரித்தெடுக்க, ஏற்கனே உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வேலை முடிந்தவுடம் தீர்த்துவிடுங்கள் என்று திட்டமிட்டபடி இந்த தருணத்திற்காக காத்திருந்த அந்நிருவனத்தின் உயர்ந்த அதிகரியொருவர், கருவியை ஆஃப் செய்ய ஜீவாவின் ஆன்மா அவன் உடலை திரும்ப அடைய முடியாத ஆன்மா ஏக்கத்தோடு அந்த அறையில் இருப்போரைப் பார்க்க கருவியிலிருந்து வந்த வெளிச்சத்தில்
"அந்த அறை சிவப்பு நிறமாக மரியாதது, பின் மஞ்சள் நிறமாக மாறியது..."
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top