போட்டி#3. 10 - சோதனைப் பிராணி


"டூ............ டூ..........டூ..... டூ டூ டூ........." என்று இடைவிடாது ஒலித்த இதயமாணியின் ஓசை கேட்டு திடுக்கிட்டு தன் ஐந்து நிமிட உறக்கத்தில் இருந்து விழித்தான் அர்ஜுன்.

விழியில் ஒட்டியிருந்த தன் கனவுத் தடையங்களை தலையசைத்து களைத்துவிட்டு அந்த இதயமாணியை நோக்கினான்.அதில் இருந்ததை கண்டவுடன் அவனது கண்கள் ஒளிபெற்று மிளிர்ந்தது, இதழின் ஓரம் வெற்றிப் புன்னகையை உதிரச் செய்தது அக்காட்சி.

"பிராசசிங் ஸ்டார்டட்" என்ற வார்த்தைகள் தான் அவை.

அர்ஜுன் அந்த இதயமாணியோடு இணைக்கப் பட்டிருந்த கண்ணாடி பெட்டியினுள் இருந்த பூனையை பார்த்தான். தனக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி சிறிதும் அறியாத அப்பூனை அவனை தன் கெஞ்சல் பார்வையால் உற்று நோக்க அதை எதிர்கொள்ள முடியாதவனாய் தவித்தான் அர்ஜுன்.

அப்பூனையின் விழிகளில் இருந்து தன் விழிகளை விலக்கி அதை இதயமாணியின் திரை மேல் செலுத்தினான். இருபது நாட்களுக்கு முன் தான் இவ்வாறு ஒரு உயிரை துன்புறுத்த போகின்றோம் என்று எள்ளளவும் எண்ணவில்லை 
அவன்.

ஆனால் விதியின் விளையாட்டை யாரால் தடுக்க இயலும்!! எதிர் பாராத நேரங்களில் திருப்புமுனைகளை தருவது தானே அதன் இயற்கை!!

அந்த பூனையின் இதய அலைகள் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்க அர்ஜுனின் எண்ண அலைகளோ இரண்டு வருடம் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

கவிதா!! அர்ஜுனின் மனைவி மற்றும் கல்லூரிக் காதலி. இருவரும் ஒரே கல்லூரியில் தான் பயோ கெமிஸ்டிரி துறையில் பயின்றனர்.

இவர்களது காதல் திருமணம் பெற்றோர் ஆசியுடன் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து ஓர் அழகிய பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

இவ்வாறு அன்பு நிறைந்த அக்குடும்பத்தில் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படுமென யாரும் எதிர் பார்க்க வில்லை.

கவிதா 'லூகிமியா' என்னும் இரத்த புற்று நோயால் திடீர் மரணம் அடைந்தாள்.

அவள் மரணத்தால் அர்ஜுன் மிகவும் மனமுடைந்து போனான்.

இத்துக்கத்தால் அவன் தவறான முடிவு எடுத்து விடாமல் தடுத்தது அவனுடைய பிஞ்சுக் குழந்தையே. தன் பிள்ளை தாய் தந்தை அற்ற அனாதை ஆகிவிடக்கூடும் என்ற எண்ணமே அவனை உடும்பு போல் வலுவாக பிடித்துக் கொண்டது.

தனது மகளுக்கு தாயாய் தந்தையாய் இருந்து அளவுகடந்த அன்பை காட்டி வளர்க்க வேண்டும் என முடிவு செய்தான்.

ஆனால் விதியின் விளையாட்டை யாரால் கணிக்க இயலும்!!!
தன்னவளை தன்னிடமிருந்து பிரித்ததோடல்லாமல் தன் உயிரான மகளையும் பிரிக்க அவ்விதி திட்டமிட்டுள்ளதை அறிந்து கொண்டான் அர்ஜுன்.

ஆம்!! கவிதாவை பலிகொண்ட அக்கொடிய புற்று நோய் தன் மகளையும் காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை கண்டு கொண்டான்.

"சிறுகுழந்தை என்பதால் புற்று நோயை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி போதாமையால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை!" என்று மருத்துவர் கூறிய வார்தைகளை கேட்ட அவனுக்கு உயிரே போயிற்று!!

எப்பாடு பட்டாவது தன் மகளை காப்பாற்றி ஆக வேண்டும் என்று மனவுறுதி கொண்டான்.

அதன் விளைவுதான் தற்போது அவன் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி!!!

அர்ஜுன் ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளன் என்பதால் தன் மகளின் நோய் தீர்க்க பல்வேறு வழிகளை ஆராய்ந்தான், அப்படி ஆராயும் போது அவன் கண்டுபிடித்தது தான் "மல்ட்ரோ பேக்ஸி கேன்சீரியஸ்".

"மல்ட்ரோ பேக்ஸி "ஓர் பேக்டீரியா வகை உயிரினம். பேக்டீரியாவில் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பவை நன்மை செய்பவை என இருவகை உண்டு.

மல்ட்ரோ பேக்ஸி இதில் இரண்டாவது வகை. இதை தான் அழிக்க நினைக்கும் புற்று செல்களை உதாரணமாக வைத்தே கண்டுபிடித்தான்.

செல்கள் நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு செல்கள் அழியும் போதும் புதிதாக ஒன்று தோன்றுகின்றன.

ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த நடைமுறை மாறி உடலின் சீரான செயல்பாட்டை சிதைக்கின்றது. எவ்வாறெனில் தேவையில்லாத போது புதிய செல்கள் உருவாகி பழைய செல்களும் அழியாமல் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதையே 
நாம் கேன்சர் அதாவது புற்று நோய் என்கிறோம்.

இந்த புற்று செல்கள் அதன் அருகே உள்ள செல்களுக்குள்ளும் பரவுகின்றது.

இந்த செல்களை போலவே தான் அர்ஜுன் கண்டுபிடித்த 'மல்டிரோ பேக்ஸி ' பேக்டீரியாவும்.

இந்த பேக்டீரியா நம் உடலில் உள்ள புற்று செல்களை உண்டு மல்டிப்பிளை ஆகுகின்றது.

இதை புற்று நோயாளிகளின் உடலுக்குள் செலுத்தி அவற்றை அடியோடு அழிக்க முடியும்.

மல்டிப்பிளை ஆகும் பேக்டீரியாவின் பெறுக்கத்தை தடுக்க யூவி கதிர்வீச்சை செலுத்த வேண்டும். இது தான் அர்ஜுன் அப்பூனையை வைத்து ஆராய்ச்சி செய்யவிருக்கின்றான்.

அந்த பூனையினுள் புற்று செல்களை ஏற்கனவே செலுத்திவிட்டான், அது அந்த பூனையின் உடலில் பரவத்தொடங்கி விட்டதையே அந்த இதயமாணி 'பிராசஸ் ஸ்டார்டட்' என்று காட்டியது.

இது வெற்றி பெற கடந்த இருபது நாட்களாக அயராது உறக்கம் துறந்து ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த அவனது எண்ண அலைகளை மீண்டும் இடைமறித்தது அந்த இதயமாணி.

அதன் திரையில் 'பிராசஸ் கம்பிளீடட்' என்ற வார்த்தைகளை கண்டவுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து அப்பூனை அடைபட்டிருந்த பெட்டியிடம் சென்றான்.

அந்த பூனையின் வெளிதோற்றத்தில் எந்த மாற்றமும் காணப்படா விட்டாலும் உள்ளே புற்று செல்களின் பெருக்கம் அதிகறித்துக் கொண்டே இருந்தது.

அர்ஜுன் சிறிதும் தாமதிக்காமல் தான் கண்டுபிடித்த "மல்ட்ரோ பேக்ஸி" பேக்டீரியாவை ஊசியின் மூலம் அப்பூனையின் உடலில் செலுத்தினான். பின் அதை யூவி கதிர்வீச்சு பொருத்திய ஒரு நபர் புகக்கூடிய கண்ணாடி அறையினுள் வைத்து பூட்டினான்.

அவன் மனதுள் நாம் ஓர் உயிரை துன்புறுத்துகின்றோமோ என்ற எண்ணம் மின்ன தன் மகளின் முகம் கண்முன் தோன்ற சலனமடைந்த மனதை சீர் செய்தான்.

அவன் முன் இருந்த கணினியில் அந்த பேக்டீரியா சிறிது சிறிதாக புற்று செல்களை உண்டு பெறுகுவது தெளிவாக தோன்றியது. அதன் ஒவ்வொரு அசைவையும் அசையாமல் இமையாமல் பார்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அந்த பேக்டீரியா அதிகறித்துக் கொண்டிருப்பதுபோல் அர்ஜுனின் இதயத் துடிப்பும் அதிகறித்துக் கொண்டே சென்றது.

புற்று செல்கள் குறைவை அக்கணினி பர்சன்டேஜ் வடிவில் அளித்துக் கொண்டிருந்தது.

"டார்கெட் அசீவ்டு-எனிமி செல்ஸ் டெஸ்டிராய்டு" என்று கண்ட மறுநொடி யூவி கதிர்வீச்சை செலுத்தும் கருவியின் பட்டனை ஆன் செய்தான்.

அடுத்தநொடி யூவி கதிர்கள் அக்கண்ணாடி அறையை தன் கதிர் அலையால் நிறைத்தது.
அதனுள் இருந்த பூனையோ தன்னை சுற்றி நடக்கும் எதையும் அறியா சிறு பிள்ளையாய் இங்கும் அங்குமாய் அவ்வறையினுள் உலாவிக் கொண்டிருந்தது.

அர்ஜுனோ தன் சோதனை வெற்றி பெறப் போவதை எண்ணி மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.அங்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை இருவரும் அறியவில்லை.

யூவி கதிர்கள் ஒளிபட்டு குறைந்து கொண்டிருந்த பேக்டீரியா திடீரென்று பன்மடங்கு பெருகத் தொடங்கியது.
அர்ஜுனுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு பட்டன்களை அழுத்திப் பார்த்தான்.

ஆனால் அவை யாவும் வீணாகிப் போனது.

அந்த கண்ணாடி அறையினுள் இருந்த பூனை கதிர்வீச்சை தாங்காமல் செல்கள் வெடித்து இரத்த வெள்ளத்தில் மிதந்தது.

அர்ஜுன் அந்த கொடூர காட்சியை கண்டு மிரண்டு போய் நின்றுவிட்டான். 
ஒரு புறம் ஒன்றுமறியா ஜீவனை கொன்று விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி மறுபுறம் தன் மகளை காப்பாற்ற முடியாதோ என்ற இயலாமை ,இவ்விரண்டும் அர்ஜுனை வாட்டி வதைத்தது.

இவ்வளவு முயன்றும் அனைத்தும் வீணாகிப் போனதே என வருந்திக் கொண்டிருந்தான்.
அப்போது தான் அவனுக்கு அது தென்பட்டது!!

அந்த கதிர்வீச்சை அனுப்பும் மாணியில் கதிர்வீச்சு அளவை மனித உடலுக்கு ஏற்றவாறு வைத்திருந்தான்.ஆனால் அது பூனையின் உடலுக்கு மிக அதிகமாகும்.

இதன் காரணமாகத் தான் அப்பூனை செல்கள் வெடித்து இறந்து விட்டது.
தன் கவணக்குறைவால் ஓர் உயிர் போனதை எண்ணி மனம் கலங்கினான் அர்ஜுன்.

அடுத்து என்ன செய்வதென்று அறியாது விழித்தான் ஆனால் மறுநொடியே அவன் கண்களில் ஓர் தீர்மானம் தெரிந்தது.

தன் உலகமான அன்பு மகளுக்காக வாழ்வின் எந்த எல்லைக்கும் போக தயாரானான்.

ஆம்!!! தன் மகளுக்காக தானே ஓர் சோதனை பிராணி ஆனான் அர்ஜுன்!!

தயார் நிலையில் இருந்த புற்று செல்கள் கொண்ட ஊசியை போட்டுக் கொண்டான்.அது அவன் உடலில் சிறிது சிறிதாக பரவியது .

முழுமையாக அது அவன் உடலில் பரவிய பிறகு "மல்டிரோ பேக்ஸி" பேக்டீரியாவை தன் உடலில் செலுத்திக் கொண்டு கதிர்வீச்சு மாணியை "ஆட்டோ ஸ்டார்ட்" மோடில் வைத்து விட்டு அந்த கண்ணாடி அறையினுள் புக தயாரானான் .

அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ இதுசரி தான் என்பதே, "ஆனால் சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே?இது சரிதானா ?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

தன் மகளின் புன்னகை ததும்பும் முகம் தன் கண் முன் வர மனதின் குழப்பங்கள் மறைந்து தெளிவடைந்தான்.

இந்த சோதனை வெற்றி பெறும் என் மகளோடு இன்பமாக வாழ்வேன் என்ற எண்ணத்தோடு கண்களை மூடினான்.

அக் கண்ணாடி அறையில் யூவி கதிர்கள் நிரம்பத் தொடங்கின.

அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது பின் மஞ்சள் நிறமானது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top