போட்டி 2 # 5 - உழைக்கும் வர்க்கம்


ENTRY 5:

வானத்தை பார்த்தனர் இருவர் வறியவன் பார்த்தான் மேகத்தை மழையது பொழியுமா ஏக்கத்தில் மண்ணில் விதைத்திடும் தாகத்தில்

வசதியில் வாழ்ந்த வலியவனோ வாழ்ந்த இடத்தைத் தவறவிட்டு விரக்தி கொண்ட பேராசையில்நகரத்தைத் தேடி ஓடுகிறோம்.

வசதிமட்டும் அனுபவித்தாய் வறுமை யானால் ஓடுகின்றாய் உழைக்கும் கைகளை விட்டுவிட்டு ஊரைத் தேடி அழைகிறாய்....!

தாயும் நாடும் சபித்துவிட்டால் தண்ணீர் கூட கிடைக்காது.

தலையைப் பிரிந்து உடல் மட்டும தனியே என்றும் வாழாது. பாசம் விளைந்த மண்ணிதுவே பழியை போட்டுச் செல்லாதே....

உண்மை உள்ளம் உனக்கிருந்தால் உழைக்கும் வர்க்கம் மறவாதே..!

விவாசயம் இல்லையேல் நமக்கு உணவு இல்லை...!


***************************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top