போட்டி 2 # 4 - ஆசை கதிர்களின் முன்னே ஒரு விவசாயின் அழுகுரல்
ENTRY 4:
சேற்றில் உதித்த ஒரு செந்தாமரை மலராய்!
கோவனம் கட்டிய கோமாளிகள் ஆனோம்!
நாற்று நட சென்று சேற்றில் கால் வைத்து!
தோற்று போனோம் தூற்றுவோர் முன்னே!
கடன் என்னும் சொல் எங்கள் கழுத்தை இறுக்க!
காணாமல் போன வயல்வீரர்கள் இங்கு பலர்!
பாட்டுப்பாடி நாங்கள் கழுத்தை அறுத்தபோதும்!
காப்பாற்ற துடிக்கும் என் நில ஆசை கதிர்களே!
உம் வாழ்வை நாங்கள் இறக்கமின்றி அழித்தும்!
எம் வாழ்வை ஏற்றம் அடைய செய்வது ஏனடா!
காலத்தின் நலன் கருதி உம் கழுத்தை அறுத்தும்!
எம் குடும்பத்தை காப்பாற்ற முயல்வது ஏனடா!
உன் முன் நிற்கிறேன் ஒரு குற்றவாளியாய் இன்று!
ஏற்றுக்கொள்வாயா இந்த ஏழையின் கோரிக்கையை!
ஏற்றுக்கொண்டால் வருடா வருடம் காத்திருக்கிறேன்!
உன் சந்ததியினரின் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன்!
என் நிலக்கதிர்களே!!! என் கேள்விக்கு பதில் கூறுவாயா?
இறப்பு பிடிக்கவில்லை என்றால் சொல் தோழா!
உனக்கு வாழ்வை தந்து நான் வீழ்ந்து போகிறேன்!
*********************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top