போட்டி 2# 11 - விவசாயம்
ENTRY 11:
அதிகாலை சேவல் கூவும் முன்பே
கண் விழித்து தொடங்கும் தொழில்
கதிரவன் தன் கதிர்களைக் கொண்டு
சுட்டு எரிக்கும் போதும்
பந்துப் போல் இருக்கும் மேகங்கள்
மாரியை பொழியும் போதும்
சுத்தும் பூமியைப் போல் என்றும் இயங்கி
கொண்டு இருக்கும் தொழில்
பூமியை பச்சை நிறம் என்னும்
வண்ணத்தைத் தீட்டி
கண்களுக்கு பசுமை என்னும் வரத்தைக்
கொடுத்து கொண்டிருக்கும் தொழில்
அனைத்து உயிருக்கும் அமுதத்தைப் படி
அளந்து கொண்டிருக்கும் தொழில்
கடவுளுக்கு இணையாக மதிக்கப்
பட்டுக் கொண்டிருக்கும் தொழில்
தமிழ் மொழியோடு ஒன்றுப் பின்னைந்து
வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்
தமிழர்களின் சுவாசத்தில் கலந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில்
தமிழர்களால் இன்றும் தமிழர் திருநாள்
என்று இரு கரங்களைக் கொண்டு
துதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்
~விவசாயம்
***************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top