போட்டி 2 # 1 - விவசாய பூமி


ENTRY 1:

 காட்டை வெட்டி நிலத்தைத் திருத்தி...
கண்ட இடத்தையெல்லாம் களையாக்கி...
உயிரைக் கொடுத்து, வேர்வைச் சிந்தி, உன்னைத் தொழுதான்...
வாழ்நாளெல்லாம் உன்னில் நிறைந்தான்...
அன்றைய மனிதன்,
இயற்கை துணைவன்...
அவன்தான் விவசாயி...

நிலத்தை விற்று, உன்னை மறந்து...
ஏசி காற்றில் திளைக்கிறான்...
விவசாய நிலங்களை அடுக்குமாடி கட்டிடங்களாய் மாற்றுகிறான்...
நாகரீகமென்ற பெயரில் சேற்று வாசனையையும் நாற்று வாசனையையும் துறக்கிறான்...
இன்றைய மனிதன், நாளைய தலைவன்...
அவன் தான் படிப்பாளி...

எதை சாதிக்க ஓடுகிறான்...
சுயத்தை இழந்து தவிக்கிறான்...

கடந்து போன காலம் திரும்பிடுமா???
விவசாயம் மண்ணில் நிலைத்திடுமா???  

***************

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top