போட்டி 12 # 5 பிரிவை பிரி
உன் ஒளியில் உயிர் பெற்ற நான்.......தோன்றுவதும் மறைவதும் அதே வான்வெளியில் தான் என்றாலும்,....... உன்னைச் சேர வழி இல்லையே!!!! என .... தூரத்தில் தெரிந்த கதிரவனை எண்ணி கலங்கிய வண்ணம் விடிகாலை பொழுதிற்கு வழிவிட்டு மறைந்தாள் நிலா மங்கை.
அது, ஒரு அழகிய அரசவை. அமைச்சர்கள் அவையை சூழ்ந்திருக்க சிங்கம் போல சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான் அவன். "இளங்கீரன்"
அவன் நடையில் ஒரு செருக்கு!!!
அவன் கண்ணில் ஒரு கர்வம்!!!
அவன் பேச்சில் ஒரு திமிர்!!!
இருக்காதா.....
ஒன்றா இரண்டா சுற்றி இருக்கும் பதினாறு சிற்றரசுகளையும் ஒரே வாரத்தில் கைபற்றியவன் ஆயிற்றே!!!
"அமைச்சர்களே நமது பேரரசு சாம்ராஜியம் அமைந்து ஒரு திங்கள் கழிந்தது .... மக்கள் நிலை என்ன அனைவரும் மகிழ்வுடன் இருக்கிறார்கள் அல்லவா??"
"ஆம் மன்னா தங்கள் ஆட்சியில் என்ன குறை..... செல்வ செழிப்போடு அனைவரும் சுகம்" என்றனர் ஆமாம் சாமி அமைச்சர்கள்
ஆனால் எல்லா கதைகளிலும் பீர்பல் தெனாலிராமன் போல் ஒருவா் இருக்க வேண்டுமே..... அதனால் நம் கதையிலும் இருக்கிரார் ஒரு மேதாவி. செய்யும் தவறை சுட்டிகாட்டாமல், தவறு செய்தவரை தாமாக புரிந்து கொள்ள செய்வதில் வல்லவர்.
அன்றும் அப்படியே...
"மன்னா..... மக்கள் தங்களை பற்றி பேசும் பெருமைகளை கேட்க கேட்க அவ்வளவு இனிமை !!! நீங்கள் அதை கேட்டால் உங்கள் உள்ளம் தெளிவு பெரும்" என்றார்
"அதனால் என்ன அமைச்சரே இங்கேயே அவர்களை வரவழைத்து கேட்டுவிடலாம்" என்றார் மன்னர்
அதை கேட்ட அமைச்சர் உள்ளுக்குள் சிரித்த வண்ணம் "இல்லை மன்னா ..... அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அவர்களுள் ஒருவனாக மாறினால் அவர்கள் எண்ணமும் புரியும் நாம் ராஜியத்தை சுற்றிபார்த்ததை போலவும் இருக்கும்."
"இதுவும் நல்ல யோசனை தான் செல்லலாம்"
அமைச்சரின் யோசனைபடி இருவரும் மாறுவேடத்தில் நகர்வளம் சென்றனர்
எங்கும் பச்சை பசேல் என செழுமை நிறைந்த வயல், ஆநிரைகள், என கண்ட இடமெல்லாம் குளிர்ச்சி, மன்னன் மனமோ இன்ப வெள்ளம்.
அந்த காட்சியை காணும் வரை.....
அங்கு ஒரு சிறுவன் ..... தன் எடைக்கு மிஞ்சிய எடையை தூக்கி சுமத்து சென்று கொண்டிருந்தான் கட்டட வேலை நிமித்தமாக.
இதை கண்ட மன்னன் மனம் பொங்கியது..... கண்களில் கோவக்கனல் வீச அந்த சிறுவனை நெருங்கினார் ...... அந்த பிஞ்சு முகத்தை கண்டவர் மனம் ஏனோ இழகியது.
"தம்பி நீ ஏன் இந்த கடினமான வேலையை செய்து கொண்டிருக்கிறாய் உன் தாய் தந்தை எங்கே???? " என்றார்.
"என் தாய் கண் தெரியாதவர் என் தந்தை நடந்து முடிந்த போரில் உயிர்இழந்தார்" என்றான் அச்சிறுவன் கண்கழங்க.
"அரசரிடம் சென்று முறையிடு அவர் உனக்கு உதவி செய்வார்"
"என் இந்த நிலைக்கு காரணமே அவர்தான்.....
அவரால் என் தந்தையை இழந்தேன்...
என் தோழர்களோடு விளையாடும் மகிழ்ச்சியை இழந்தேன்....
என்ன கொடுக்க முடியும் அவரால்???
என் தந்தையையா???
அவர் என் மீது வைத்திருந்த பாசத்தையா???
நாட்டு மக்கள் அனைவரையும் கொன்றுவிட்டு நாட்டை ஆண்டு என்ன பயன்???
அவர் வீரம் பொருந்திய அரசர் அல்ல....
சுயநலம் மட்டுமே கருதும் கோலை"
அச்சிறுவன் பேசியதை கேட்ட அரசர் மனம் பதறினார்
"ஆடவரை தும்பை பூ அனியச் செய்து பூவயரை பூவீழக்க செய்தேனா???
நானிலம் கைபற்ற எண்ணி நன்மனிதர்களை இழந்தேனா???
மங்கையர் கண்ணீரிலும்
ஆடவர் செந்நீரிலும்
ஆட்சி அமைத்தேனா???
இனி என் நாட்டில் போர் என்ற பெயரே இல்லை....
போர்முரசும் இல்லை....
போர்களமும் இல்லை...."
இன்று இந்திய மண்ணில்......
பாம் வைத்து பல மாடி கட்டிடம் சேதம் பலர் பலி.
பேருந்தில் தீ.
அறவழிக்கு சிறையே வழி.
மதவெறி.... இனவெறி..... கொலைவெறி.....
மெல்ல மாறிகொண்டிருக்கிறது போர்க்களமாக....
"பிரிவு இல்லையேல் பேதம் இல்லை"
நாம் "இந்தியர்கள்" குடியரசுதினத்திலும், சுதந்திரதினத்திலும்.
நாம் "தமிழர்கள்"
ஜல்லிகட்டிலும்,
தண்ணீர் பிரச்சனையிலும்.
நாம் "இந்தியர்களா???"
உணவிலும்
உடையிலும்???
நாம் "தமிழர்களா??"
பண்பிலும்
கலாசாதத்திலும்???
*****
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top