போட்டி #12 - 01. கடல் ராஜா
சூரியன் உதயமாக இன்னும் நான்கு நாழிகையே இருக்க அந்த வைகறைப் பொழுதில் மந்தாகினி பிரம்மை பிடித்தவள் போல் கடற்கரையில் நாடிருந்த கம்பில் தலை சாய்த்து அமர்ந்து கண்முனிருந்த கடலை வெறித்து கொண்டிருந்தாள்.
சற்று முன் இருந்த கொந்தளிப்பும் நீர் சுழற்சியும் அடங்கி அமைதியாக இருந்த கடலை பார்க்கும் போது அவள் உள்ளம் குமுறியது.
"இளவரசி.... உங்களை அழைத்து வர மகாராஜா உத்தரவு பிரபித்துள்ளார்..."
என்று அவளது பணிப்பெண் கூற
தான்னிருந்த நிலையில் இருந்து சிறிதும் அசையாமல்
"முடியாது என்று சொல்..."
என்றாள் தீர்க்கமாக..
அவள் கூறியதை கேட்டு கவலையோடு லேசாக தலையசைத்தவள் அரண்மனையில் இருந்து வந்த ஆட்களிடம் தெரிவிக்க அவர்கள் மீண்டும் புரவியை கிளப்பி சென்றனர்.
அந்த கடற்கரையில் அவள் மட்டும் இல்லை.அவளது பாதுகாப்பிற்கு காவலர்களும் பணிபெண்களும் சற்று தள்ளி அந்த தெப்பங்குடி மக்களும் இருந்தனர்.ஆனால் மந்தாகினியின் கண்ணிலும் சரி கருத்திலும் சரி அவை பதியவில்லை.அவளுக்கு தெரிந்தது எல்லாம் கடலும் அதில் சற்று முன் மறைந்த செழியனும் தான்.
'இது எப்படி சாத்தியம் ஆகும்...'
'என் செழியன் சொன்னதை செய்பவனாயிற்றே...'
'இது எப்படி நடக்கும்...'
என்று அவள் மனம் துடிக்க பின்னால் ஊர் மக்கள் பேசிக் கொள்வது காற்றி கலந்து இளவரசியின் செவியில் பாய்ந்து.
"ஆமாம்... ஆமாம் நானும் பார்த்தேன்.. அந்த நீர் சுழற்சியில் சிக்கிய செழியனின் படகு எவ்வளவு நேரம் தாக்குபிடித்து.. ஹப்பா... என்னே துணிச்சல் நம் செழியனிற்கு!!!.."
என்று அவர்களுள் ஒருவன் வியக்க
"என்ன பெரிய துணிச்சல்... அதான் கடைசியில் சிக்கி கடலில் மூழ்கியதை பார்த்தாய் அல்லவா..."
என்று மற்றொருவன் ஏளனமாய் நகைக்க
"ம்ம் ஆமாம்... அவன் நீச்சல் கலையில் வல்லவனே என்றாலும் நடுக்கடலில் அதுவும் சுழற்சியில் இருந்து நீந்தியே வருவது சாத்தியமே அல்ல..."
என்று இன்னொருவன் கூற இவை மந்தாகினியிற்கு அமிழத்தை பாய்ச்சியது போல் எரிய கழுத்தில் அவன் அணிவிந்த பவளமாலையை இருக்க பற்றி இதோ வந்துவிடுவேன் என்று மிரட்டும் கண்ணீரை இமைகளால் விழுங்க முயற்சித்து தோற்றாள்.
நேரம் போய் கொண்டே இருக்க நான்கு நாழிகை இரண்டாக குறைய செழியனிற்கு கொடுக்க பட்ட கால அவகாசமும் குறைந்துக் கொண்டே இருந்தது.
அப்போது திடீரென
"அங்கே பாருங்கள்..."
"ஐய்யோ..."
"அது அவனுடையதே..."
என்று பல குரல்கள் கேட்க அந்த திசையில் நோக்கியவள் அதிர்ச்சியில் எழுந்து உறைந்து நின்றாள்.
அங்கே பாதி உடைந்து கவிழ்ந்த நிலையில் செழியனின் படகு கரையில் ஒதுங்கியது.அதுவரை அவள் கண்டிறாத ஒர் உணர்வு அவளை தொற்றிக் கொண்டது.
அது தான் பயம்.. அவன் மீண்டும் வர மாட்டானோ என்ற பயம்.
அந்த படகை நோக்கி அவள் கால்கள் நடக்க அதனை அடைந்ததும் மெல்ல வருடினாள்.இந்த படகை எப்படி அவள் மறப்பாள்.இது அவர்களது முதல் சந்திப்பில் இருந்து கடைசி வரை அவர்களுடன் இருந்த அவர்கள் காதல் சாட்சியாயிற்று.
இன்றோ இப்படகு இருக்கிறது அவன் இல்லையே என்று நினைக்கையில் உள்ளம் வெம்பி விம்மினாள்.அவர்களது முதல் சந்திப்பு அவள் நினைவில் தோன்றி அவளை வதைத்தது.
அந்த சீவதன் பாண்டியனின் ஒரே மகள் அந்த பாண்டிய தேசத்தின்
ஒரே இளவரசி தான் மந்தாகினி.
அவள் அழகிற்கும் சரி அறிவிற்கும் சரி அவளுக்கு இணை அவள் மட்டுமே...
அவள் கற்ற கலைகள் பல இருந்தாலும் அவளுக்கு மிகவும் பிடித்தது நீச்சல் கலை தான்.ஆனால் பாதுகாப்பான ஆறு.. குளம் தவர வேறெதிலும் அவளை நீந்த அவள் தந்தை அனுமதித்ததில்லை.அவளுக்கோ கடலில் நீந்த மிகுந்த ஆசை.
அதற்காக தன் தந்தையை நச்சரித்ததில் ஒருநாள் இசைவு கொடுக்க குதூகலத்தோடு இளவரசியாக இல்லாமல் ஒரு சாதாரண பெண்ணாய் தன் தோழிகளுடன் கடலை அடைந்தாள்.ஆள் அரவம் அற்ற அந்த பகுதியில் உல்லாசமாய் நீந்தி மகிழ்ந்தவள் கரையில் நின்று தன்னை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த தன் தோழியருக்கு ஆட்டம் காட்ட கடலில் சிக்கி மூழ்குவது போல் பாசாங்கு செய்ய அதை கண்டு பீதி அடைந்தவர்கள் காபாற்றுங்க என்று அலற அவள் மேலும் பயம் புடுத்த கண்களை மூடி நீரில் முங்க எத்தனித்த போது பின்னில் இருந்து ஒரு கை அவள் இடையை வளைக்க கடலில் இருந்து தான் தூக்க பட்டதை உணர்ந்தவள் அப்போது தான் அவனை பார்த்தாள்.பார்த்த மறுநொடி சுற்று சூழல் அனைத்தையும் மறந்து அவனையே இமைக்காமல் நோக்க அவளுள் புதுவுணர் ஒன்று தோன்றியது.ஒரு கையில் அவளை தாங்கி மற்றொரு கையில்
கடலில் துடுப்பை போட்டு படகை செலுத்த அவனது விழிகள் சுற்றி அவள் முகத்தில் விழும் போது மந்தாகினி கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.அவளை படகில் போட்டவனின் பார்வை சில நிமிடம் அவள் முகத்தில் நின்றது அதை அவளாலும் உணர முடிந்தது.தன்னை காணும் போது அவன் முகபாவனை எவ்வாறு இருக்கிறது என்று காண எழுந்த ஆவலை கட்டுபடுத்தி கொண்டு அமைதியாக இருந்தாள்.அவன் பார்வை வீச்சு அவளை என்னவோ செய்யதது.
சற்று நேரத்தில் கரையை அடைந்ததும் அவளை பூப்போல் அள்ளி கீழே வைத்தான்.
அவள் தோழிகள் அவளை சூழ்ந்து கொள்ள அவன் மந்தாகினியின் கன்னத்தை தட்ட முனையும் போது அதை பற்றியவள் சட்டென எழுந்து சிரிக்க ஆச்சரியத்தோடு நோக்கியவன்
"நீ..நீ... நடிப்பு.... அப்படியென்றால் உனக்கு நீச்சல் தெரியும் அப்படி தானே..."
என்று வினவ
"பாண்டிய நாட்டின் இளவரசிக்கு நீச்சல் கூட தெரியவில்லை என்றால் எப்படி.."
என்று புருவத்தை உயர்த்தி குறும்போடு கேட்க மேலும் ஆச்சரியத்தோடு அவளை நோக்க இருவர் விழியும் சங்கமித்த அந்த சில நொடிகள் போதும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ள!!
அன்று தொடங்கிய அவர்கள் காதல் வளர்ந்து இருவர் மனதிலும் வேரூன்றியது.
காதலின் அடுத்த நிலையாய் கல்யாணத்திற்கு செழியன் பெண் கேட்டு போக அவர்கள் நினைத்தது போலவே ராஜ குலத்தில் பிறவாத செழியனை சீவதன் ஏற்க வில்லை.நீண்ட வாக்குவாதிற்கு பிறகு கொண்டு வந்த முடிவே இந்த போட்டி..
"நான் அரசகுலத்தில் பிறவாதவன் தான்... ஆனால் உங்கள் மகளை மணக்க மற்ற எல்லா தகுதியும் படைத்த வீரனாவேன்..."
என்று மார்ப்பு புடைக்க அவன் கம்பீரமாக கூற அதை சோதிக்க நான் ஒரு பரீட்சை வைக்கிறேன் என்றவர் அதனை அறிவித்தார்.
"அந்த இரு தினங்களாய் கடலின் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.இந்த சமயத்தில் கடல் கொந்தளிப்பை மீறி நீ தனி ஆளாய் அக்கரையில் உள்ள தீவில் செருந்தி மலரை கொண்டு மீண்டும் வரவேண்டும்..
ஏற்பாடு வேளையில் இங்கிருந்து புறப்பட்டு சூரிய உதயதிற்கு முன்
அந்த ராட்சச அலையை அடக்கி வந்தால் அப்போது ஒத்து கொள்கிறேன் நீ மாவீரன் என்று.. என் பெண்ணையும் உனக்கு மணமுடிப்பேன்.. இது சத்தியம்..."
என்று அவர் முழங்க மறு யோசனை இன்றி இதற்கு ஒப்பு கொண்டான்.மந்தாகினிக்கும் இதில் ஆட்செயபனை இல்லை.அப்படி செய்தால் தன்னவனின் வீரத்தை தானே சந்தேகிப்பதை போன்றது என்று கருதினாள்.நினைவலையில் மூழ்கியவளை அப்போது அங்கு வந்த சீவதன் நிகழ்காலத்திற்கு மீட்டான்.
தன் மகளின் நிலை மனதை வதைத்தாலும் அதை வெளிகாட்டாது
"போதும் மந்தாகினி.. சூரியன் உதயதிற்கு இன்னும் அரை நாழிகை மட்டுமே இருகிறது.. இந்த போட்டியின் முடிவு நீ சாய்ந்திருக்கும் படகே நிரூபித்து விட்டது.. வா.."
என்று அழைக்க அவள் செவுடு போல் அமர்ந்திருந்தாள்.
ஆம்.. அவன் வரவில்லை என்றால் இதே கடலில் குதித்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு அவள் ஏற்கெனவே எடுத்தது தான்.அதனால் மரணம் அவளுக்கு ஒரு பொருட்டில்லை.ஆனால் தன்னவனின் வீரத்திற்கு இழிவு வந்துவிடுமே என்பதை நினைக்க நினைக்க உடலெங்கும் தீப்பற்றியது போல் தவித்தாள்.
இவர்கள் அனைவரின் கவனத்தையும் கட்டி இழுத்தது அந்த ஒலி.சற்று முன் ஓய்ந்திருந்த கடல் மீண்டும் தன் அலைகளை சுழற்ற மக்கள் பயத்தில் சிதறி ஓடினர்.சீவதனை காக்க வீரர்கள் சூழ மந்தாகினி அழைத்தால் வரமாட்டால் என்பதை உணர்ந்து கைகளை பற்றி இழுத்து சென்றார்.அவள் திமிரியும் அவரிடம் இருந்து தப்ப முடியாமல் போக அவர்கள் பாதி தூரம் போகும் போதே பேரலை ஒன்று எழும்ப திரும்பி பார்த்த அனைவரும் சிலையென நின்ற இடதிலேயே வேரூன்றினர்.அதிர்ச்சியில் வாயடைத்து கருவிழி பிதுங்கி கீழே விழும் அளவு திகைத்து நோக்க சீவதனும் மந்தாகினியும் அங்கே பார்க்க அவர்களுக்கும் அதே நிலைத்தான்.
அந்த அலையின் மேல ஒரு சுறாவின் மீது கம்பீரம் வீற்றிருந்தான் செழியன்.
அவனை கண்ட மறுநொடி மந்தாகினியிக்கு உடலெங்கும் ஆயிரம் பூ பூத்தது போல் சிலிர்க்க உதடுகள் துடிக்க உடல் நடுங்க ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
அந்த சுறாவை உற்று நோக்கிய சீவதன் மாரடைப்பு வராத குறையாக திகைத்தார்.
"அ..அது வரிபுலியன் சுறா தானே..."
என்று வாய்விட்டே வியந்தார்.
ஆம்.வரிபுலியனை அடக்கியோர் யாருமில்லை.அது மனிதன்,மீன்,ஆமை, படகு, கப்பல் அவ்வளவு ஏன் திமிங்கலத்தை கூட தன் பற்களால் சுவைக்கும் கொடியவகை சுறா.அதனிடம் ஆகபட்டோர் யாரும் மீண்டதில்லை.
அத்தகைய வரிபுலியனையே அடக்கி ராஜா போல் அமர்ந்திருந்த செழியன் காணும் போது வருண பகவானே வானிறங்கி வந்தது போல் அனைவரும் கண்டனர்.
அந்த அலையின் கரைதட்ட வரிபுலியனை சாய்த்து குத்தித்தான் செழியன்.
வீர நடையிட்டு மந்தாகினி அருகில் வந்தவன் போர்வைக்குள் வைத்திருந்த செருந்தி பூங்கொத்தை அதே வசீகர சிரிப்போடு நீட்ட நடுங்கும் கைகளோடு அவற்றை பெற்று கொண்டவள் மறு நொடி அவனை அணைத்து அழுக சற்று நேரம் அவளை ஆறுதல்படுத்தி விலகியன் சீவதனை தலை வணங்கி
"நீங்கள் சொன்னதை செய்துவிட்டேன் அரசே.. இது என் வீரத்தை ஓரளவேனும் உங்களுக்கு உணர்த்தியிருக்கும்..."என்று செழியன் கூற அப்போது தான் சுயநினைவு வந்தவராய் கண்களில் ஒளியோடு
"ஆம்.. புரிந்து கொண்டேன் மாவீரா...நீ அரசகுலத்தில் பிறந்து நாட்டின் ராஜா இல்லை தான்.. ஆனால் வருணபகவானின் ஆசியில் பிறந்த கடல் ராஜா நீ..."
என்று மனம் நெகிழ்வோடு வாழ்த்துரைத்தார்.
***
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top