போட்டி 11 # 7 - காதல் மடல்
வறண்டுப் போன என் பூமியில்
முத்து மழையாக வந்தவனே..!
அனல் காற்று வீசிய என் வாழ்க்கையில்
வசந்த காற்றாய் வந்தவனே...!
உடைந்த என் இதய துண்டை
ஒட்டிய மாயவனே...!
இருளாய் இருந்த என் வாழ்வில்
ஒளி தந்து வழி காட்டிய மன்னவனே..!
துவண்ட என் முகத்தை
பொலிவு பெற செய்த காதலனே..!
சுருங்கிப் போன என் இதழுக்கு
புன்னகையை தந்த கள்வனே...!
என் உலகமாய் மாறிய என் இதய அரசனே...!
கண் இமைக்கும் நொடியில் கொடுத்த
வரத்தை எடுத்து கொண்டவனே...!
வாழ்க்கையில் இனிப்பை கொடுத்த
நீதான் கசப்பையும் கொடுத்தவனே...!
ஒட்டிய இதயத்தை குத்தி கொலை செய்து
என் வாழ்க்கையில் காதலுக்கு
மரணப் படுக்கை அமைத்தவனே...!
உனக்கு என் இரத்த கண்ணீரால்
எழுதும் இறுதி மடல் இதுவே,
இப்படிக்கு,
உன்னிடம் இருந்து விடைப்பெற இயலாமலும்
உன்னுடன் சேர இயலாமலும்
நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னை நம்பிய முட்டாள்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top