போட்டி 11 # 6 - கண்ணீர் கடிதம்

நீண்ட நாள் நெஞ்சில் நெருடிய ஒன்று
அவள் என்னைக் கடந்து செல்லும்
நேரமெல்லாம் சொல்லி விட மனம் துடிக்கும்
வீட்டின் நிலையறிந்து எண்ணங்கள் சில பொழுது பின்வாங்கும்
இருந்தும் வாய்மொழியாக பலமுறையும்
மின்னஞ்சலாக சிலமுறையும் சொல்ல
காத்திரு கொஞ்சம்
காலம் கனியும்
உன் எண்ணம் நிறைவேறும் என்றாள்
காலங்கள் ஓடின
காத்திருந்த நாளும் வந்தது
எஞ்சியதோ ஏமாற்றமே
கண்கள் குளமாகின
நெஞ்சை பலப்படுத்தி மீண்டும் அவளிடம் சென்றேன்
இம்முறை கையொப்பமிட்ட கடிதமாக
மறுத்துப் பேச வழியின்றி வாங்கிக் கொண்டாள்
என் இராஜினாமா கடிதத்தை...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top