போட்டி 11 # 5 - ...இதுவா என் முடிவு...

திரும்பும் திசையங்கும்
திருப்பு முனையே
அன்னை கருவில் துவங்கி
கடைசி கல்லறைவரை கரைசேரும் என் மூத்த முதல் திருப்புமுனை கருவில் தவறி அங்கிருந்து இங்கே வந்ததுதான்
என் மோச்சத்தின்சாபம்
விழுந்தவன் தந்தையின் தோள் தழுவி எழுந்துநின்றேன்
தாய் கரு மருவி தந்தை தோள் என பதினெட்டு வருடமாய் உறங்கி இருந்த என் தோழமை நண்பன்
என்னை தாங்கிய நாணல் என சருக்கும் இடமெல்லாம் தாங்கி பிடித்த ஒரு இறைவியின் பிள்ளை
என்று பிரிந்தேனோ அன்றே இந்த நரக நகரத்தில் தோலைந்துவிட்டேன் நான்
காதல் என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் எனக்கும் ஓர் இடம்
வேண்டுமென்ற ஏக்கம் கொண்டு நாட்கள் கொன்று
இரவை ரசிக்க பகலை மறந்தேன்
அதனாலவோ என்னவோ இன்றுவரை இரவு மட்டுமே என் விடியளின் சாட்சியாய் இருக்கிறது
எல்லாம் ஒரு திருப்புமுனையே எனினும் எனின்பம் தேடி பல துன்பம் வென்று மண் இன்பம் அறிந்தேன் மழலை தேடி மறுபடி ஒரு பிறவி கிடைக்காதா என் ஏங்கிய நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்
மயிரும் நரைக்க நானும் ஆகிவிட்டேன் முன்னாள் மாணவன்
விரும்பிய திருப்புமுனை தேடி என் காலனி கருகியே போய்விட்டது
நகரும் நாட்களில் நசுக்கப்பட்ட புழுவாய் நான்
எழுவாய் மனமே
மற்றும் ஓர் திருப்புமுனை எதிர்நோக்கி நகர்வாய் தினமே .....  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top