போட்டி 11 # 3 - பிம்பம்
அழகிய சிறு தேவதையவள்
அயர்ந்து உறங்க
காற்று அவள்பால் காதல் கொண்டு
கன்னம் தொட்டு கூந்தல் வருடியது
கருமேகம் அவள் உடையாக
மேக்கப் பஞ்சுகள் மெத்தையாக
சலசலக்கும் ஓடைகளும்
சிலுசிலுக்கும் தென்றல் காற்றும்
காற்றில் அசையும் இலைகளும்
ஓசையெழுப்பி தாலாட்டுபாட
அழகிய பூ அவள் கவலை மறந்து
கண்மூடி வீற்றிருந்தாள்!!
இதயம் தொட்டு மனம் பறித்த
இக்காட்சி என்நினைவில்
என்றென்றும் நீங்காத பிம்பமாக
என்ன ஓர் கெடூர உண்மை!!
பிம்பம் தான் அது
பெயரற்று பெற்றோரற்று
வீதியில் வீற்றிருக்கும் ஓர்
அனாதையின் கனவு பிம்பம்!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top