போட்டி 11 # 1 - விலகி செல்கிறேன்
வண்ண ஜாலம் கொண்ட
என் வாழ்வில்
இன்று ஏனோ,
தனிமையின் சாரல்...
சிட்டுக் குருவியாய் பறந்து திரிந்த நான் இன்று அடைப்பட்ட கூட்டு கிளியாய்..
தனி மரமாய் தேங்கி நிற்கிறேன்...
ஏய் மனமே என்ன
பிழை செய்தேனேன வதைக்கிறாய்...
என்னவர்கள் மீது நான் கொண்ட அன்பு
பிழையா?
அவர்களே எல்லாமுமாக இருந்த என் எண்ணம் பிழையா?
விதியே என் விதியே
என்னில் என்ன
தவறு கண்டாய்...
கண்ணீரும் வற்றி
விட்டது நான் கொண்ட வலியால்..
எனதுடமை என நான் உரிமைக் கொண்டது அனைத்தும் இன்று வெகு தொலைவில்....
எதற்காக வாழ்கிறேன்,
எதை கண்டு
தவிக்கிறேன்....
அன்பு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என நான்
கட்டிய மணல்
கோட்டை ஒன்று,,
கண் முன்னே சரியக் கண்டேன்...
கண்ணிருந்தும் குருடியாய், சொல்லிருந்தும் ஊமையாய், சொந்தங்களிருந்தும் தனிமையாய் வாழ என்ன தவறு செய்தேன்...
இன்று என் வாழ்வில்
புதிய பக்கத்தைப் புரட்டுகிறேன்...
இனி என் வாழ்வின்
திசையை நானறியேன்..
*****
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top