போட்டி #10 - 5. மர்ம பயணம்

  காற்றை பிரித்துக் கொண்டு துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டவைப் போல் ஓடி கொண்டிருந்தான் ரகு.

    அவன் ஏன் அவ்வளவு வேகமாக ஓடுகிறான் என்று சற்றுப் பின் நோக்கி சென்று பார்ப்போம்.

     ரகு, சரத், ராமு மூவரும் உயிர் தோழர்கள். அவர்களுக்கு கல்லூரி விடுமுறை வந்தது. விடுமுறைக்கு எங்கு போகலாம் என்று மூவரும் யோசித்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ரகு “நாம் எங்கயாவது நீண்ட பயணம் போகலாம்” என்று கூறினான்.

           அப்பொழுது அதை கேட்ட சரத் மண்டைக்குள் பல்பு எரிந்ததுப் போல் எரிந்ததுப் போல் “ டேய் மச்சான் எங்க அப்பா ஒரு அரண்மனை வாங்கி இருக்கிறார் . அது கேரளா பக்கத்திலிருக்கிறது. நாம் அங்கு போகலாம்” என்று கூறினான்..

          அதற்க்கு மற்ற இருவரும் சம்மதம் தெரிவித்தனர். பின்பு அங்கு செல்ல அனைவரும் தயாரானார். அவர்கள் மூவரும் காரில் ஏறி அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

            செல்லும் வழியில் இருப் பக்கமும் காவலர்கள் போல் மரங்கள் வீரமாக நின்று அவர்களை வரவேற்றது. போகும் இடங்களில் எல்லாம் அவர்கள் கண்களைப் பறிக்கும் அழகிய மலர்கள் இருந்தது. சுரியனோ என்றும் அல்லாமல் அன்று அழகாகவே இருந்தது. வானம் ஒரு தோரணை போல் விரிந்து அதில் இருக்கும் மேகங்கள் வெள்ளைப் பந்துப் போல் அவர்கள் செல்லும் இடத்திற்கு எல்லாம் தொடர்ந்து சென்றது. அவர்கள் இறுதியில் அந்த பிரிமண்டமான அரண்மனை வந்து அடைந்தனர். சரத், ராமுவும் பயணம் செய்த களைப்பில் இளைப்பாற சென்றார்கள். ரகு மட்டும் அவனின் பயணத்தை முடிக்க மனம் இல்லாமல் அரண்மனையை சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.

                  அப்பொழுது ஒரு அறை மட்டும் மூடப் பட்டிருந்தது. மேலும் அதில் பல மந்திர கயிறுகள் கட்டப் பட்டிருந்தது. அதை எல்லாம் எடுத்து தூக்கி எறிந்து விட்டு உள்ளே நுழைந்தான். அங்கு ஒரு அழகிய பெண் புகைப்படம் இருந்தது. அதற்க்கு கீழ் ஒரு பெட்டி இருந்தது. அதிலும் பல கயிறுகள் இருந்தது. அவன் பெட்டியை உடைத்து திறந்துப் பார்த்தான். அதில் அந்த பெண் பற்றிய வாழ்க்கை வரலாறு இருந்தது. கடைசியில் அவள் எங்கு இறந்துப் போனால் என்பதும் குறிப்பிடப் பட்டு இருத்தது. அதில் பின் குறிப்பும் இருந்தது “ அங்கு செல்லபவர்கள் பல அபாயங்களை சந்திக்க நேரிடும்”

                     ஆனால் மனிதனுக்கு எப்பவுமே ஆபத்தான விஷயத்தை செய்யாதே என்று சொன்னால் அப்பொழுது தான் அவனுக்கு அதை செய்ய வேண்டும் என்று தோன்றும். அதைப் போல் ரகுவும் அந்த இடத்தைப் பற்றி அறிந்தப் பிறகு அந்த இடத்தின் அபாயத்தில் ஈர்க்கப் பட்டு மேலும் அந்த பெண்ணின் அழகில் மயங்கி அவள் எப்படி இறந்தால் என்பதை அறிந்துக் கொள்ள அவன் கால்கள் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றது.

           அவன் அந்த அரண்மனைக்குப் பின் இருந்த. காட்டிற்குள் நுழைந்து அந்த குகையை நோக்கி அவன் பயணத்தை தொடர்ந்தான். அந்த குகைக்குள் நுழைந்தான் ரகு. அந்த குகையில் இருந்த இருள் அவன் மனதிற்கு ஒரு அச்சத்தைக் கொடுத்தது. தட்டு தடு மாறி அங்கு இருந்து தீப் பந்தத்தை கண்டுப் பிடித்து நெருப்பை ஏற்றினான்.

              அந்த குகையின் சுவர்களில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை வரலாறு ஓவியமாக வரையப் பட்டு இருந்தது. அதைப் பார்த்து அவன் மீண்டும் அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு ஒரு இணைப் புரிய உணர்வு. அது என்னவென்று அவனுக்கு புரியவில்லை. அப்படியே அவன் பிரிமித்த நிலையில் முன் நோக்கி நடந்தான்..

         அப்பொழுது தீடீர் என்று ஒரு ஆணின் முகத்தைப் பார்த்து அவன் நின்றான். அவனுக்கு அந்த முகம் மிகவும் பழக்கப் பட்ட முகமாக இருத்தது. அவன் அருகில் சென்று அதனை உற்று நோக்கினான். அதனைக் கண்டு அவன் ஆடிப் போனான். ஏன் என்றால் அதில் இருந்தது அவனது முகம். அவன் அப்படி அதிர்ந்து இருந்த நிலையில் தீடீர் என்று குகையின் சூழ்நிலை மாறியது. சுவரில் இருந்த ஓவியங்கள் மறைந்தது. ஒரு அழகிய பெண் குரல் வந்தது. அது அவனிடம் “அத்தான் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்” அவனுக்கு ஒன்றும் விளங்காமல் முழிக்க தொடங்கினான்.

          அதனை தெரிந்துக் கொண்ட அந்தப் பெண் அவனிடம் “ இந்த கோட்டையின் ராஜா என் மேலும் நம் செல்வத்தின் மேலும் வைத்து இருந்த மோகத்தினால் நம் இருவரையும் கொன்றான். இறைவனின் அருளால் நீங்கள் மற்றும் மறு ஜென்மம் எடுத்துள்ளிர்கள். அவன் திட்டம் போட்டு உங்களை இங்கு வர வைத்து உள்ளான். அந்த போக்கிஷத்துடன் மற்ற ஒரு சக்தியும் இருக்கிறது. அது மட்டும் அவன் கையில் கிடைத்தால் இந்த உலகத்தயே தன் பேர் ஆசையால் அழித்து விடுவான். விரைந்து அதைப் போல் காப்பாற்றுங்கள். இந்த நடத்தை விட்டு செல்லுங்கள்” என்று கூறி, அவன் கையில் ஒரு மாணிக்கத்தை கொடுத்தாள், “இது உங்களுக்கு தக்க சமயத்தில் உதவும்”

என்று கூறி மறைந்தாள்.

          அவள் கூறிய வார்த்தையைக் கேட்டு அந்தப் புதையல் இருக்கும் இடத்திற்கு சென்றான். அதனை அவன் கைகளால் தோட்டவுடன் அரக்கனைப் போல் ஒரு சத்தம் கேட்டது. அந்தப் புதையல் அவன் கையில் கிடைக்க கூடாது என்ற எண்ணத்துடன் ஓட தொடங்கினான். அப்பொழுது அவன் அந்த மாணிக்கத்தை தன் கைகளால் அழுத்திப் பிடித்தான். அது அவனுக்கு தன் உருவத்தை மறைக்கும் சக்தியையும், மின்னலைப் போல் வேகமாக ஓடும் சக்தியையும் கொடுத்தது..

           இவ்வாறாக ரகு, காற்றை பிரித்துக் கொண்டு துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டவைப் போல் ஓடி கொண்டிருந்தான்.

              மர்ம பயணம் தொடரும்…..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top