போட்டி #10 - 3. என் பயணம்
நான் அனைவரும் பாராட்டும் அளவிற்கு படிப்பறிவு இல்லாதவள் என்றாலும், அனைவரையும் அன்பு வலயத்தால் கட்டும் ஆற்றல் கொண்டவள்.
என் எண்ணங்கள் மிகவும் வித்தியாசமானவை, எனக்கு குறுகிய கால உறவு எப்போதும் பிடிக்காது, அனைவரிடமும் நீண்ட கால நட்புடன் இருக்க ஆசைப்படுவேன்.
அதன் விளைவு , வேலைக்கு செல்லும் பேருந்தில் என்னுடன் பழகிய நண்பர்களின் தொலைப்பேசி எண்ணையும் பதிவேற்றிக்கொள்வேன்.
என் பள்ளிப் பருவத்தில் இப்போது போல தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தினால் அனைத்து நண்பர்களின் விலாசத்தையும் குறித்து வைத்தேன். காலம் எவ்வாறு சுழன்றாலும் என் பழக்கம் என்னைவிட்டு மாறவில்லை. குறுகிய கால பழக்கத்தை நான் எப்போதும் விரும்பியதில்லை.
என் அலுவலக வேலைக்காக, கேரளா செல்லவேண்டி இருந்தது, என் உடைமைகளை எடுத்துக்கொண்டு வேக வேகமாக பேருந்து நிலையம் சென்றடைந்தேன், பரபரப்பான மக்கள், பார்வை என்ற அம்பினால் பேருந்துகளை தேடும் பெறியவர்கள், தன் மாயக்கண்களை கொண்டு பேருந்து நிலைத்தில் இருந்த கடைகளையும் அங்கு இருக்கும் சாக்லேட்கலையும் நோட்டம் விடும் சிறுவர்கள்… அனைத்து காட்சிகளும் சாதாரணமானது தான் என்றாலும் என் கவனத்தை ஈர்த்தது.
நான் ஏற வேண்டிய பேருந்தை கண்டேன், வேகமாக ஏறி எனக்கென ஒரு இருக்கையை பிடித்தேன்.
மூவர் அமரும் என் இருக்கையில், ஒரு பாட்டியும், அவரின் பேரனும் அமர்ந்தார்கள்.
தென்றல் காற்று சில்லென வீச பேருந்து வேகமாக நகர்ந்தது.
எங்கள் இருக்கையின் எதிரே ஒரு சிறுவன் கிழிந்த பையோடு அமர்ந்திருந்தான்.
அழுக்கு சட்டை, சீவி வாராத தலை முடி, பார்க்கவே பாவமான முகம், இவையே அவன் அடையாளங்கள்.
அனைத்திற்கும் நாகரீகம் பார்க்கும் இக்கால மனிதர்களின் மனநிலை அவனின் பக்கத்தில் அமரவும் யோசித்தது.
என் பக்கத்தில் இருந்த பாட்டி தன் பேரனிடம் ஏதோ கூறியதும், உடனே அவன் எழுந்து எதிர் இருக்கையில் இருக்கும் அந்த சிறுவன் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
பேருந்து, பயணவழி உணவகத்தில் நின்றது, அந்த பாட்டி தன் பேரனோடு கீழே இறங்கிறார், நானும் அவர் பின் இறங்கினேன், அந்த சிறுவன் ஜன்னல் வழியே இந்த பாட்டியை பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒரு காப்பி குடித்துவிட்டு நான் பேருந்தில் ஏறினேன். ஐந்து நிமிடம் கழித்து அந்த பாட்டியும் தன் பேரனோடு பேருந்தில் ஏறினாள்.
பாட்டியின் கையில் இருந்த டீ கப்பை வாங்கிய அவரின் பேரன் அதனை தன் பக்கத்தில் இருந்த சிறுவனுக்கு தந்தான்.
உனக்கு தான் வாங்கிவந்தோம் இந்தா என கையை நீட்டி கொடுக்க, அவனும் அதனை மலர்ந்த முகத்துடன் வாங்கி பருகினான்.
முன் பின் தெரியாதவரின் தேவையை அழகாக பேரனுக்கு புரியவைத்த அந்த பாட்டியின் உள்ளம் என்னை வெகுவாக கவர்ந்தது.
அவருடன் உரையாட துவங்கினேன், பல வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்தார். பயணம் மிக மனநிறைவாக இருந்தது.
நாங்கள் இறங்கி வேண்டிய தருவாய் வந்தது, வழக்கம் போல அந்த பாட்டியிடம் விலாசம் கேட்டேன், அவர் தன்னுடைய சொந்த கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி இந்த ஊர் வந்துள்ளதாக கூறினார், அவரின் மகனும் மருமகளும் ஒரு விபத்தில் உயிரிழந்ததாகவும் பேரனை வளர்க்கும் கடைமை உள்ளது, எனவே தன்னிடம் இருக்கும் சிறிய தொகையை கொண்டு இங்கு ஏதேனும் பிழைப்பு பார்க்க வேண்டும் என கூறினார். அப்போது பாட்டின் பேரன் அவனின் பக்கத்தில் இருந்த சிறுவனையும் கையோடு அழைத்துக்கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கினான்.
பாட்டி இவனுக்கும் அப்பா அம்மா இல்லையாம், இவனின் பாட்டி போன வாரம் இறந்துவிட்டார்களாம்.
எங்கே செல்வதென தெரியாது அழுதுள்ளான், பேருந்து ஓட்டுனரிடம் தன் தன் தந்தையின் சொந்த ஊரில் விடும்படி கேட்கவே அவரே கட்டணம் இல்லாம் இவனை இங்கே விட உதவியுள்ளார்.
இங்கே எந்த திசையில் செல்வதென்று கூட இவனுக்கு தெரியவில்லை பாட்டி என அச்சிறுவன் முடிக்க பாட்டி பேச துவங்கினார்.
தம்பி, எங்களுக்கும் இங்கே யாருமில்லை, உன்னால் முடிந்த வேலையை செய், எங்களுடனே இருந்துவிடு என அந்த பாட்டி அழைக்க அந்த சிறுவன் ஓடி வந்து பாட்டியை அனைத்துக் கொண்டான்.
இவை அனத்தையும் பார்த்துக்கொண்டிருந்த என் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின, அந்த பாட்டி என் மன சிம்மாசனத்தில் அமர்ந்தார்.சற்று நேரத்தில் அந்த பாட்டி என்னைப் பார்த்து, இந்த உலகம் மிகப்பெரியதுமா.. பல்வேரு விதமான மக்கள், பழக்கங்கள் , பண்பாடுகள் இங்கு உண்டு… இவை அனைத்தையும் இனைப்பது அன்பு,கருணை மட்டுமே……
காலம் மனது வைத்தால் மீண்டும் சந்துப்போம் என கூறிவிட்டு அந்த பாட்டி என்னிடமிருந்து விடைப்பெற்றார்.
முதல் முறையாக விலாசம், தொலைப்பேசி எண் என எதுவும் என்னிடம் இல்லாத என் நட்பு அந்த பாட்டி மட்டுமே…..
அவரின் முகவரி எதுவும் என்னிடம் இல்லை என்றாலும் அவரின் செயல், வார்த்தைகள் ….. அனைத்தும் என் மனதில் நீங்கா நினைவுடன் இன்று வரை நிறைந்துள்ளது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top