போட்டி #1 - 14. 3 மணி
காலை மணி மூன்று, தொலைக்காட்சியைப் பார்த்து அழுத்துப் போய், ஏதாவது சாப்பிட எடுத்து வரலாமென சமயலறையில் நுழைந்தேன். டைன்னிங் டேபிளில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, மெல்ல அவரை நோக்கி நடந்தேன்.
"ஹலோ" நான் திகைத்தபடி நிற்க, கூந்தலால் போடப்பட்டிருந்த திரையின் வழியே அவளது கண்கள் - கருப்பு வைரம் போன்று மின்னியது. அவள் முழுவதுமாகத் திரும்பினாள்... வாயில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. அதைப் பார்க்கவே அருவருப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் என் மனதில் பயமே மேலோங்கி நின்றது.
அதன் பற்கள் கூர்மையாக அழுக்கு படிந்து கருப்பாகக் காணப்பட்டது. தோல் பச்சை கலந்த நிரத்தில் சுருக்கஞ்சுருக்கமாக, பிணத்தை நினைவிற்கு வரவைத்தது.
என் கால்கள் தானாக பின்னால் செல்ல, அந்த உருவம் ஒரு வித ஒலியை தொண்டையிலிருந்து எழுப்பிக் கொண்டு என் மீது பாய்ந்தது. பாய்ந்த மாத்திரத்தில் என்னை அது பாதாளத்திற்கு எடுத்துச் செல்ல, என் கூச்சல் சத்தம் என் காதுகளுக்கே கேட்காமல் போய்விட்டது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top