போட்டி #1 - 13. மர்ம அறை
அக்காலத்தில் காவியாபுரத்தை கார்மேகன் மன்னன் ஆட்சி புரிந்தான்.
மன்னரின் அரண்மனைக்குள் பாழடைந்த அறை ஒன்று இருந்தது , அது கார்மேகனின் மூதாதையர் காலத்தில் பூட்டப்பட்டது.
பேய்களின் பிறப்பிடமென சித்தரிக்கப்பட்ட அந்த அறைக்குள் யாவரும் செல்வதில்லை.
அறையின் மர்மத்தை உடைப்பவருக்கு தக்க சன்மானம் என்றார் மன்னர் .
அறைக்குள் சென்ற சிலர்
துர்நாற்றத்தையும் எலும்புகூடுகளையும் பார்த்து கதரியோடினார்கள்.
ஆனால் ஆதித்யனோ அறைக்குளே முன்னேறினான்.
ஒற்றடை , எலும்புக்கூடுகள் , தாயத்து என அறைமுழுவதும் அம்மானுஸ்யம்.
பயத்தில் இருந்தவனின் கால்களை ஒரு பேழை தடுத்தது.
பேழையின் மேலிருந்த ஓலைச்சுவடியை எடுத்தான், அதில் கேள்விக்கு பதிலளித்து பெட்டியை திறந்துக்கொள் என்றிருந்தது.
அடுத்த பக்கத்தில் "இங்கிருக்கும் குவலையில் உள்ள பொருளின் எண்ணிக்கையை எழுது" என்றிருந்தது .
குவளையை பார்த்தவன் அதிர்ந்தான், அதில் இருந்தோ மணல்.
சற்று சிந்தித்தவன் 2345 என பேட்டியின் மேல் எழுதினான்.
பேட்டி திறந்தது. அதிலிருந்த மற்றோரு ஒலைச்சுவடியை பிரித்தான் .
அதில் சமயேகிதக புத்தி பெற்றவனுக்கு இப்புதையல் சமர்ப்பணம் என எழுதப்பட்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top