போட்டி #1 - 09. நிழல்

மங்கும் சூரியன் மயங்கும் மாலை நேரம், நிழல்கள் நம்மை தொடரும் சாயுங்காலம், அவள் அறையில் அமர்ந்திருந்தாள், சிந்தையில் மூழ்கியவாறு. கண்ட காட்சி மெய்யா இல்லை பொய்யா? படித்த உண்மைகள், நிஜத்தில் நடப்பதன் காரனமேனோ? அதை ஆராய்வது ஆபத்தில் முடிந்தால் என்ன செய்வது என்று யோசித்தாள்.

பல வினோதமான சம்பவங்கள் சமீபத்தில் நடைபெறுவதாக தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல செய்திகள் பரவின. ஆபத்தாகவே முடிந்தாலும் பிறரை காப்பாற்ற துணிந்தாள். நிழலோடு விளையாட முதல் அடியை எடுத்தாள்.

அன்று இரவு, பிறர் நிழலை தொடர்ந்து சென்றாள். பல முக்கிய செய்திகளை சேகரித்தாள். கொடிய பூதங்கள் உதயமாகும் நொடியில் அவற்றை தடுத்து அழிக்க யுக்தி செய்து மறுநாள் வேட்டையாட தயாராய் சென்றாள். சிலரைக் காப்பாற்றினாள். மீண்டும் அப்பூதங்கள் தாக்கினால் கையாள வேண்டிய யுக்தியை கற்பித்தாள்.

வெற்றியோடு திரும்பும் வேளையில், முழுநிலா ஒளியில், நரிகள் ஊளையிட, தன் நிழலே, தன்னை சூழ, நிழலோடு நிழலாய் சூனியமானாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top