போட்டி #1 - 07. மயூரி

ஏழாக இன்னும் பத்து நிமிடமே இருக்க ஒவ்வொரு நொடிக்கும் ஜோவின் இதயதுடிப்பும் அதிகரித்தது.அலங்கோலமாய் இருந்த கூடத்தின் ஓரத்தில் பிரம்மை பிடித்தவள்போல் உடல் முழுதும் நடுங்க உட்கார்ந்திருந்தாள்.அப்பொழுது சட்டென அறை கதவு திறக்கபட்டது. சிவந்த கண்களோடு அறையிலிருந்த மயூரி, ஜோவின் அருகில்வர பயத்தில் இன்னும் சுவற்றோடு ஒன்றினாள்.
அவளிடம் கத்தியை நீட்டிய மயூரி,

"என்னை கொன்றுவிடு..."
என்று அழுத்தமாக கூற அதை கேட்டு அதிர்ந்தவள் மாட்டேன் என தலையசைத்தாள்.

"மணி ஏழாகிவிட்டால் இங்கே என்ன நடக்கும் என தெரியாதா.?என்னால் போன உயிர்கள் போதும் புரிந்துகொள்..."என்றவளின் கண்களில் கண்ணீர் பொங்கியது.வேறு வழியின்றி கத்தியை வாங்க கை நீட்டும்போது கடிகாரம் ஏழானதுக்காக மணியடிக்க இருவரின் தலையும் அதன்பக்கம் சட்டென திரும்பியது.ஜோவிற்கு ஒரு நொடி இதயமே நின்றது.

"மயூ-" என ஆரம்பித்தவளின் கழுத்தை இருக்கைகள் நெருக்கியது.மயூரியின் அப்பாவி கண்கள் விஷமமாக மாறியிருந்தது. வெறித்த சிரிபோடு தன்  குடும்பத்தின் கடைசியாலான ஜோவையும் தன் விஷபற்களாலே கொன்றாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top