போட்டி #1 - 06. தலைப்புச் செய்தி

வான்மேகம் இருள் பந்தளிட நட்சத்திர மொட்டுகளுக்கிடையே வெள்ளி ஆடையில் வெண்ணிலவு மிண்ணிக் கொண்டிருக்க ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் கவிதை எழுத கற்பனை வளைகளை வீசிக் கொண்டிருந்தான் நிகில். எப்போதும் மனதிற்கு அமைதியை தருகின்ற வெண்ணிலவு அன்று ஏனோ அவன் மனதில் ஓர் இனம்புரியா பயத்தை ஏற்படுத்தியது. பாலில் பட்ட விஷம் போல அவன் இதயக்கூட்டில் இமைபொழுதில் அப்பயம் பரவிக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. நடு இரவில் நடக்கும் இந்நிகழ்ச்சியால் நடுக்கத் தோடு அவன் கதவை திறக்க இருளே பதில் கூறியது. பயமும் குழப்பமும் கலந்து அவனை தாக்க தன் பின்னே ஏதோ அசையும் உணர்வு தோன்ற தயக்கத்துடன் திரும்பிய அவன் காற்றில் கர்டெய்ன் பலமாக அசைந்து கொண்டிருந்ததை பார்த்தான். கதவை தாழிட்டு திரும்பிய அவன் கண்கள் ஓர் அகோர உருவத்தை கண்டு மிரட்சியுடன் உரைந்தன.

----------------------------------------------------------
தலைப்புச் செய்தி -"சென்னையில் நேற்றிரவு வாலிபன் மர்மமான முறையில்  மரணம் அடைந்தான்."

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top