போட்டி #1 - 03. மாறியது
அமானுஷ்ய இரவு...
எங்கும் அமைதி...
லப் டப்.. லப் டப்...
இதயம் தாருமாறாய் துடித்தது...
பயத்தை கஷ்டப்பட்டு உள்ளடக்கியப்படி தன் பயணத்தை தொடர்ந்தான் அபி...
நண்பர்களின் ஊந்துதளில் இந்த மரண காட்டிற்கு வந்தது தவறோயென நூறாவது முறையாக எண்ணினான்.
விளையாட்டு தனது வாழ்வில் வினையாய் முடிந்து விடுமோ.
இந்த காட்டிற்கு வந்தவர் எவரும் இதுவரை உயிரோடு மீண்டது கிடையாது..
அப்படியெனில் தனது நிலை...
அபி பல குழப்பங்களோடு அவனது அனைத்து இஷ்ட தெய்வங்களையும் துணைக்கு அழைத்தப்படியே தனது பயணத்தை தொடர்ந்தான்.
ஜல்.. ஜல்..ஜல்...
அபியின் நடை தடைப்பட்டது.
அவனுக்கு பின்னே யாரோ தொடர்வதாய் ஒரு பிரம்மை.
திரும்பி பாராமல் மீண்டும் நடையைத் தொடர்ந்தான்.
சட்டென்று அபியின் தோளில் ஒரு கை ஆழமாய் பதிந்தது.
அபி முகத்தில் மரண பயம்... மெல்ல திரும்பினான்.
அடுத்த கணம் அபி வானில் மிதந்து கொண்டிருந்தான்.
ஆன்மாவாக....
அவனது உயிரற்ற உடல் மண்ணில் சரிந்தது..
மீண்டும் வருவான்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top